என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க தேவை இல்லை வீரர்களைதான் மாற்ற வேண்டும் என்று காம்பீருக்கு சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஐ.பி.எல். கனவு இந்த ஆண்டும் தகர்ந்தது. அந்த அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்று வெளியேறியது. 

    இதை தொடர்ந்து பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் காம்பீர் வலியுறுத்தி உள்ளார். 

    இது தொடர்பாக அவர் கூறும்போது ‘2013-ம் ஆண்டு முதல் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார்.இந்த 8 ஆண்டுகளில் அவரால் ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 

    8 வருடங்கள் என்பது நீண்டகாலம். தோல்விக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும். பெங்களூர் அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’என்றார். இந்த நிலையில் விராட் கோலிக்கு முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க தேவை இல்லை என்று அவர் காம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஷேவாக் கூறியதாவது:-

    கேப்டன் பதவியில் கோலி இந்திய அணிக்கு ஒருநாள் போட்டி, 20 ஓவர் மற்றும் டெஸ்டில் வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இந்திய அணியில் சாதித்த அவரால் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட முடியாதது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும். 

    கேப்டனுக்கு ஒரு நல்ல அணி என்பது மிகவும் முக்கியமானது. எனவே பெங்களூர் அணி நிர்வாகம் கேப்டன் பதவியிலிருந்து கோலியை நீக்கக் கூடாது.

    அணியை எப்படி மேம்படுத்துவது என்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும். பெங்களூர் அணியில் மாற்றம் தேவை. தகுதி வாய்ந்த வீரர்களை அணிக்கு கொண்டுவர வேண்டும். வீரர்களின் மாற்றம்தான் பெங்களூர் அணிக்கு அவசியம் ஆனது. கேப்டனை நீக்கினால் எந்த தீர்வும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. 

    இவ்வாறு அவர் கூறினார். 
    குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டதை நெருங்கி உள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இறுதிப் போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது என்பது இன்று இரவு தெரியும். அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    வெற்றிபெறும் அணி வருகிற 10-ந் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதும்.

    டெல்லி அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இல்லை. அந்த அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    டெல்லி அணி குவாலிபையர் 1 ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் மிகவும் மோசமாக தோற்றது. அந்த அணியின் பேட்டிங்கும் பந்துவீச்சும் எடுபடவில்லை. இதை இன்றைய ஆட்டத்தில் சரிசெய்வது அவசியம் ஆகும். 

    இந்த போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேனியல் சாம்சுக்கு பதிலாக ஹெட்மயர் இடம் பெறுவார். தொடக்க வீரர் பிரித்விஷாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. இதனால் அவர் கழற்றிவிடப்படலாம். 
    டாசை பொறுத்து ஹர்ஷல் படேல் அல்லது துஷ்கர் தேஸ்பாண்டே இருக்கும். தொடக்க வீரர்களாக தவானும், ஸ்டோனிசும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த போட்டி தொடரில் டெல்லி அணி 2 முறை ஐதராபாத்திடம் தோற்றது. கடந்த 27-ந் தேதி துபாயில் நடந்த ஆட்டத்தில் 88 ரன் வித்தியாசத்திலும், செப்டம்பர் 29-ந் தேதி அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் 15 ரன் வித்தயாசத்திலும் தோற்றது.
     
    இதற்கு டெல்லி அணி இன்று பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு நுழையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ், ஸ்டோனிஸ், தவான், ரிஷப்பண்ட், ரபடா, நோர்டியா, அக்சர் படேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 

    ஐதராபாத் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி டெல்லியை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 

    ஐதராபாத் அணியின் பலமே பந்து வீச்சுதான். வேகப்பந்தில் தமிழக வீரர் டி.நடராஜன், சந்தீப் சர்மா, சுழற்பந்தில் ரஷீத்கான், சபாஷ் நதீம் ஆகியோர் முத்திரை பதித்து வருகிறார்கள். 

    கேப்டன் வார்னர், வில்லியம்சன், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கில் சாதித்து வருகிறார்கள். ஜேசன் ஹோல்டர் ஆல்ரவுண்டர் வரிசையில் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். 
    வில்லியம்சனின் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதால் தோல்வி கண்டோம் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
    அபுதாபி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி போட்டியை விட்டு வெளியேற்றியது. பெங்களூரு நிர்ணயித்த 132 ரன் இலக்கை ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் எட்டியது. 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த ஐதராபாத் அணி வீரர் கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    தோல்விக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறுகையில், ‘நாங்கள் போதிய ரன்கள் எடுக்கவில்லை. சற்று பதற்றத்துடனும், தயக்கத்துடனும் ஆடியது இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம். பேட்டிங்கில் நாங்கள் மேலும் திறமையை வெளிப்படுத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அவர்களது பவுலர்களுக்கு போதிய அளவுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. ஆட்டத்தின் எல்லா தருணங்களிலும் அவர்களது பிடிக்குள் தான் இருந்தோம். கடைசி 4-5 ஆட்டங்களில் குறிப்பிட்ட பகுதி எங்களுக்கு வினோதமாகவே இருந்தது. அதாவது நாங்கள் அடித்த நல்ல ஷாட்கள் கூட பீல்டரை நோக்கி தான் சென்றது.

    கேன் வில்லியம்சன் கேட்ச் வாய்ப்பை (ஐதராபாத் அணி வெற்றிக்கு 16 பந்துகளில் 28 ரன்கள் தேவையாக இருந்த போது அவர் பவுண்டரி எல்லையில் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை தேவ்தத் படிக்கல் நழுவ விட்டார்) கோட்டை விட்டதால் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அந்த கேட்ச் வாய்ப்பை பிடித்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கும்.

    பிளே-ஆப் சுற்றுடன் வெளியேறினாலும் இந்த தொடரில் எங்களுக்கு சில சாதகமான அம்சங்களும் நடந்துள்ளன. ஒன்றிரண்டு வீரர்கள் தங்களது சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்கள். இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 400 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார். இது எளிதான விஷயமல்ல. அதேபோல் முகமது சிராஜ் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். யுஸ்வேந்திர சஹால், டிவில்லியர்ஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். உள்ளூர், வெளியூர் என்ற சாதகம் இல்லாமல் ஒரே மாதிரியான சூழ்நிலை கொண்ட 3 மைதானங்களில் எல்லா அணிகளும் விளையாடுவது இந்த தொடரின் அதிக விறுவிறுப்புக்கு காரணமாகும். இந்த போட்டிக்கான எல்லா அணிகளிலும் வலுவான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் எந்தவொரு அணிக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது’ என்றார்.

    பெங்களூரு அணியினரின் குரூப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் விராட்கோலி ‘என்ன தான் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் ஒரு அணியாக எங்களது பயணம் சிறப்பாகவே இருந்தது. எங்கள் வழியில் ஆட்டத்தின் முடிவுகள் அமையாவிட்டாலும் அணியின் உத்வேகமும், முயற்சியும் பெருமைக்குரியது. ஆதரவாக இருந்த எங்களது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களது அன்பு எங்களை வலிமையான அணியாக உருவாக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆண்டின் இறுதிவரை ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துள்ளார்.
    நியூயார்க்:

    உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆண்டின் இறுதிவரை ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துள்ளார். அவருக்கு 2-ம் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் தான் அச்சுறுத்தலாக இருந்தார். அடுத்த வாரம் தொடங்கும் சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதில்லை என்று நடால் முடிவு எடுத்திருப்பதன் மூலம், ஜோகோவிச்சின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு வந்த ஆபத்து விலகியுள்ளது.

    ஆண்டின் இறுதியில் ஜோகோவிச் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரிப்பது இது 6-வது முறையாகும். ஜோகோவிச் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018 ஆகிய சீசன்களில் இறுதியிலும் முதலிடத்தில் இருந்துள்ளார். இதையடுத்து ஆண்டின் இறுதியில் அதிக முறை நம்பர் ஒன் இடம் வகித்த அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராசின் சாதனையை (1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை 6 முறை) சமன் செய்துள்ளார்.

    33 வயதான ஜோகோவிச் கூறுகையில் ‘சிறு வயதில் பீட்சாம்ப்ராசின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்தவன் நான். இப்போது அவரது சாதனையை சமன் செய்திருப்பதன் மூலம் கனவு நனவாகியுள்ளது. தொடர்ந்து சிறந்த வீரராக ஜொலிக்க முயற்சிப்பேன். அதன் மூலம் மேலும் வெற்றிகளை குவித்து, பல சாதனைகளை படைப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார்.
    பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை பெற்றுத் தந்தவருமான கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது::-

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராட் கோலி 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. 8 ஆண்டு கேப்டன்ஷிப் என்பது ரொம்பவே அதிகம். பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டன்ஷிப்பை மாற்றுவதற்கு இதுவே சரியான தருணமாகும். கோப்பையை வெல்லாமல் எந்த கேப்டனாவது, எந்த வீரராவது ஒரே அணியில் இவ்வளவு காலம் நீடித்திருக்கிறார்களா? என்று சொல்லுங்கள் பார்ப்போம். எனவே இதற்கான பொறுப்பை கோலி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலியுடன் எனக்கு எந்த பகைமையும் கிடையாது. பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு நானே பொறுப்பு என்று அவர் திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். நீங்கள் தான் கேப்டன். வெற்றியின் போது கிடைக்கும் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும் போது, தோல்வியால் எழும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆர்.அஸ்வின் 2 ஆண்டுகள் இருந்தார். அவர் சோபிக்கவில்லை என்றதும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நாம் டோனி, ரோகித் சர்மா குறித்து பேசுகிறோம். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 தடவை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். அதனால் தான் அவர்கள் நீண்ட காலமாக அந்தெந்த அணிகளின் கேப்டன்களாக தொடருகிறார்கள். ரோகித் சர்மா 8 ஆண்டுகளில் சாதிக்கவில்லை என்றால் நிச்சயம் கழற்றி விட்டிருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு வகையிலான அளவுகோல் இருக்கக்கூடாது. கேப்டனாக இருப்பவர் களத்தில் சாதகமான முடிவுகளை கொண்டு வர வேண்டும். அது தான் முக்கியம்.

    ‘நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறோம். அதற்கு நாங்கள் தகுதியான அணி’ என்று நீங்கள் (பெங்களூரு) சொல்லலாம். என்னை பொறுத்தவரை பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு ஒரு போதும் தகுதியான அணி கிடையாது. டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூரு அணியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். லீக் சுற்றில் கிடைத்த 7 வெற்றிகளில் அவரது அபாரமான பங்களிப்பால் 2-3 வெற்றிகள் கிடைத்தது. இல்லாவிட்டால் வெளியேறியிருக்கும். கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் ஒருங்கிணைந்த அணியாக அவர்கள் செயல்படவில்லை.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    பெங்களூரு அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு வந்து தோற்றுள்ளதே தவிர ஒரு முறையும் கோப்பையை உச்சிமுகர்ந்ததில்லை. கடந்த ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.
    பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    பாரீஸ்:

    பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 4-6, 5-7 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் (ஜெர்மனி) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
    ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாஸ்டர்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சூப்பர் நோவாஸ் அணி.
    சார்ஜா:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

    முதலாவது லீக் ஆட்டத்தில் வெலோசிட்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் நோவாசை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் டிரைல்பிளாசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்றாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் டிரைல்பிளாசர்ஸ்- சூப்பர் நோவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    பிரியா புனியா 30 ரன்னும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சமாரி அடப்பட்டு சிறப்பாக ஆடி அரை சதமடித்தார், அவர் 67 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரைல் பிளாஸ்டர்ஸ் அணி இறங்கியது.

    அந்த அணியில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா தீப்தி சர்மா 33 ரன்னும், தீந்திரா டாடின் 27 ரன்னும், ஹர்லின் தியோல் 27 ரன்னும் எடுத்தனர்.

    அதிகபட்சமாக தீப்தி சர்மா கடைசி வரை போராடி 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் டிரைல் பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்னில் தோல்வியை தழுவியது. சூப்பர் நோவாஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    3 அணிகள் தலா ஒருமுறை மற்றொரு அணியுடன் மோதியுள்ளன. 3 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.

    ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ், டிரைல்பிளாஸ்டர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி சார்ஜாவில் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
    ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ராவல்பிண்டி:

    ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    3 ஒருநாள் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. 

    இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஷமு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷமு, பிரண்டன் டெய்லர் களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த கேப்டன் ஷமு ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 

    அடுத்துவந்த வில்லியம்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். டெய்லரும் 20 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் தடுமாறியபோதும் நிலைத்து நின்று ஆடிய மட்ஹிவிரி 48 பந்துகளில் 70 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    இதனால், 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் அவ்ஃ, ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து,  157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் பகர் சமான் மற்றும் கேப்டன் பாபர் அசம் களமிறங்கினர். 19 ரன்னுடன் சமான் வெளியேறினார். 

    அடுத்து வந்த ஹைதர் அலி 7 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த முகமது ஹபீஸ் உடன் ஜோடி சேர்ந்த கேப்டர் அசம் நிலைத்து நின்று ஆடினார். 32 பந்துகளில் 36 ரன்கள் குவித்த நிலையில் முகமது ஹபீஸ் வெளியேறினார். 55 பந்துகளில் 82 ரன்களை குவித்து கேப்டன் அசம் வெளியேறினார்

    இறுதியில், 18.5 ஓவரில் 4 விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கான 157 ரன்களை எட்டியது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.   
    ‘டெல்லிக்கு எதிரான தகுதி சுற்றில் நாங்கள் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்’ என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்த சீசனில் மும்பை அணி, டெல்லியை தோற்கடித்தது இது 3-வது முறையாகும்.

    இதில் மும்பை நிர்ணயித்த 201 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்து பணிந்தது. தோல்வி அடைந்த டெல்லி அணிக்கு இறுதி சுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு உள்ளது. 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். அத்துடன் இந்த சீசனில் இதுவரை 27 விக்கெட்டுகளை அறுவடை செய்து இருக்கும் அவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான ஊதா நிற தொப்பியை டெல்லி அணி வீரர் காஜிசோ ரபடாவிடம் (25 விக்கெட்) இருந்து கைப்பற்றினார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையையும் பும்ரா தன்வசப்படுத்தினார். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் ஐதராபாத் அணி வீரர் புவனேஷ்வர் குமார் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

    வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இதுவரையில் இதுதான் நாங்கள் வெளிப்படுத்திய நிறைவான ஆட்டம் என்று நினைக்கிறேன். 2-வது ஓவரில் நான் ஆட்டம் இழந்த போதும், குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ் உத்வேகத்துடன் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. சூர்யகுமார் பேட்டிங் மூலம் எங்களது நெருக்கடியை போக்கும் முக்கியமான வீரர். இறுதி கட்ட ஓவர்களில் பேட்டிங்கில் காட்டிய தீவிரமும், அதனை தொடர்ந்து பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்டதும் பிரமாதமாக இருந்தது. நாங்கள் வித்தியாசமான அணி என்பதால் ஒருபோதும் மனதில் இலக்கை நினைக்கவில்லை. நாங்கள் வித்தியாசமாக விளையாட விரும்புகிறோம். ஆட்டத்தின் போக்குக்கு தகுந்தபடி ஆடுவது என்று நினைத்து செயல்பட்டோம். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் உத்வேகம் எப்பொழுதும் முக்கியமானதாகும். எதிரணியை நோக்கி உத்வேகம் மாறுவதை ஒருபோதும் நாங்கள் விரும்புவது கிடையாது. இஷான் கிஷன் நல்ல பார்மில் உள்ளார். எனவே அச்சமின்றி எதிரணிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் விளையாடுமாறு ‘டைம் அவுட்’ நேரத்தில் அவருக்கு தகவல் அனுப்பினோம். அவரும் அதனை சரியாக செய்தார். ஹர்திக் பாண்ட்யாவும் சூப்பர் ஷாட்களை ஆடினார்.

    பல திறமை வாய்ந்த வீரர்கள் எங்கள் அணியில் இருப்பதால் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யவும், பவுலர்களை சுழற்சி முறையில் எங்கள் விருப்பப்படி பயன்படுத்தவும் முடிகிறது. டிரென்ட் பவுல்ட் காயம் பெரிதாக தெரியவில்லை. அவர் நன்றாக இருக்கிறார். இறுதிப்போட்டியில் அவர் களம் இறங்குவார். பும்ரா போன்ற பவுலர் அணியில் இருந்தால் கேப்டனின் பணி எளிதாகி விடும். பும்ரா, டிரென்ட் பவுல்ட் ஆகியோர் உயர்மட்ட பார்மில் உள்ளனர். எங்களது திட்டங்களை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக செயல்படுத்திய அவர்களுக்கு தலைவணங்குகிறேன்’ என்றார்.

    கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறோம். ஆனால் இதேபோல் மீண்டும், மீண்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் விளையாடினால் நிலைமை கடினமாக இருக்கும் என விராட்கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
    துபாய்:

    ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்காக கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் அமீரகம் சென்ற வீரர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளைய நடைமுறைகளை பின்பற்றி விளையாடி வருகிறார்கள். இதனால் வீரர்கள் யாரும் அனுமதி அளிக்கப்படாத இடத்துக்கு செல்ல முடியாது. வெளிநபர்களையும் சந்தித்து பேச முடியாது. இந்த எதிர்பாராத வாழ்க்கை முறை குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான விராட்கோலி தனது அணியின் ‘யூடியூப்’ நிகழ்ச்சியில் பேசுகையில், 

    ‘கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதால் ஒரே செயலை திரும்ப, திரும்ப செய்வது போல் இருக்கிறது. எங்களுக்கு அமைந்து இருப்பது போன்று அருமையான அணி வீரர்கள் அமைந்து விட்டால் இது கடினமாக இருக்காது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறோம். ஆனால் இதேபோல் மீண்டும், மீண்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் விளையாடினால் நிலைமை கடினமாக இருக்கும். இதுபோல் விளையாடுகையில் போட்டி அல்லது தொடரின் கால அளவு குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். 

    ஒரே சூழலில் 80 நாட்களுக்கு மேல் இருக்கும் போது வீரர்களுக்கு மனரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். வீரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேச வாய்ப்பு அளிப்பது குறித்தும் யோசிக்க வேண்டும். இந்த விஷயங்கள் எல்லாம் குறித்து தீவிரமாக சிந்தித்து முடிவு காண வேண்டியது அவசியமானதாகும். முடிவில் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.
    கேன் வில்லியம்சன் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டார்.

    தேவ்தத் படிக்கல் உடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார். விராட் கோலி 6 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 1 ரன்னிலும் ஜேசன் ஹோல்டர் பந்தில் வெளியேறினர். 3.3 ஓவரில் 15 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்ததும் ஆர்சிபி திணறியது. பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் 41 ரன்களே அடித்தது. ஆரோன் பிஞ்ச் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த மொயீன் அலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் அரைசதம்  அடித்தாலும் முக்கியமான கட்டத்தில் 18-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் டி நடராஜனிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். டி வில்லியர்ஸ் 43 பந்தில் சிக்ஸ் ஏதும் அடிக்காமல் 5 பவுண்டரியுடன் 56 ரன்கள் அடித்தார். ஷிவம் டுபே 8, வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தனர். நவ்தீப் சைனி 9 ரன்களும், முகமது சிராஜ் 10 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்துள்ளது. ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டேவிட் வார்னர், கோஸ்வாமி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கோஸ்வாமி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்மிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார். 

    வார்னர் - மணிஷ் பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி தீர்மானித்தது. ஆனால் 5.4 ஓவரில் 43 ரன்கள் எடுத்திருக்கும்போது டேவிட் வார்னர் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் ஆடம் ஜம்பா, சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க மணிஷ் பாண்டே 24 ரன்னிலும், பிரியம் கார்க் 7 ரன்னிலும் வெளியேறினர். இதனால் போட்டி பரபரப்பாக சென்றது.

    ஆனால் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி சென்றது. கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஐதராபாத் 1 ரன் எடுத்தது, 2-வது பந்தில் ரன் கிடைக்கவில்லை. 3-வது பந்தில் ஹோல்டர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் ஹோல்டர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

    கேன் வில்லியம்சன் 44 பந்தில் 50 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 20 பந்தில் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    அபு தாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 132 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
    ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளார்.

    தேவ்தத் படிக்கல் உடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார். விராட் கோலி 6 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 1 ரன்னிலும் ஜேசன் ஹோல்டர் பந்தில் வெளியேறினார். 3.3 ஓவரில் 15 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்ததும் ஆர்சிபி திணறியது. பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் 41 ரன்களே அடித்தது. ஆரோன் பிஞ்ச் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    டி வில்லியர்ஸ்

    அடுத்து வந்த மொயீன் அலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் அரைசதம்  அடித்தாலும் முக்கியமான கட்டத்தில் 18-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் டி நடராஜனிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். டி வில்லியர்ஸ் 43 பந்தில் சிக்ஸ் ஏதும் அடிக்காமல் 5 பவுண்டரியுடன் 56 ரன்கள் அடித்தார்.

    ஷிவம் டுபே 8, வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தனர். நவ்தீப் சைனி 9 ரன்களும், முகமது சிராஜ் 10 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்துள்ளது.

    ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    ×