என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அபு தாபியில் நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று அபு தாபியில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.

    இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-

    1. வார்னர், 2. கோஸ்வாமி, 3. மணிஷ் பாண்டே, 4. பிரியம் கார்க், 5, ஜேசன் ஹோல்டர், 6. அப்துல் சமாத், 7. ரஷித் கான், 8. ஷாபாஸ் நதீம், 9. சந்தீப் சர்மா, 10. டி. நடராஜன், 11. கேன் வில்லியம்சன்,

    ஆர்சிபி அணி:

    1. ஆரோன் பிஞ்ச், 2. தேவ்தத் படிக்கல், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. மொயீன் அலி,  6. வாஷிங்டன் சுந்தர், 7. ஷிவம் டுபே, 8. நவ்தீப் சைனி, 9. ஆடம் ஜம்பா, 10. முகமது சிராஜ், 11. சாஹல். 
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் அதிக முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
    ஐபிஎல் குவாலிபையர்-1 நேற்று துபாயில் நடைபெற்றது. 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரென்ட் பவுல்ட் முதல் ஓவரை வீசினார்.

    2-வது பந்தில் பிரித்வி ஷாவையும், இதே ஓவரில் ரகானேவையும் வீழ்த்தினார். இருவரும் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. மெய்டன் ஓவராக அமைந்தது.

    டெல்லி அணி இந்த சீசனில் முதல் ஓவரில் விக்கெட்டை அதிக முறை இழந்த அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ள்ளது.

    இதுவரை மொத்த 15 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 9 முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து மோசமான சாதனையை பெற்றுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா இரண்டு முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்ததுள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தலா ஒருமுறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்துள்ளது.
    மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேர்த்தியான யார்க்கர், திடீர் பவுன்சர், ஸ்லோவர் ஒன் என விதவிதமான பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர்.

    இந்த ஐபிஎல் தொடரில் விக்கெட்டை அதிக அளவில் வீழ்த்தினார். 14 போட்டிகள் கொண்ட லீக் ஆட்டம் முடிவில் 23 விக்கெட் வீழத்தினார். நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான குவாலிபையர் 1-ல் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இந்த நான்கு விக்கெட் மூலம் இதுவரை 27 விக்கெட் வீழ்த்தி ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    புவனேஷ்வர் குமார் 2017-ல் 26 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 2013-ல் 24 விக்கெட்டுகளும், உனத்கட் 2017-ல் 24 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நான்கு முறை ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா, பிளேஆஃப்ஸ் சுற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் துபாயில் நேற்று நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 2-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    இது பிளேஆஃப்ஸ் சுற்று மற்றும் நாக்அவுட் போட்டிகளில் அவரின் 3-வது டக்அவுட் இதுவாகும். மேலும் பிளேஆஃப்ஸ் சுற்றில் ரோகித் சர்மா பெரிதாக ஜொலித்தது கிடையாது.

    இதுவரை 19 இன்னிங்சில் விளையாடி 229 ரன்களே அடித்துள்ளார். சராசரி 12.72 ஆகும். ஒரேயொரு முறை மட்டுமே 30 ரன்னைக் கடந்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் அரைசதமும், ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 200 ரன்கள் அடித்து, 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
    அபுதாபி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

    புள்ளிபட்டியலில் ஒரு கட்டத்தில் 7-வது இடத்தில் இருந்த ஐதராபாத் அணி கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த மூன்று வெற்றிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி, பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதில் மும்பையை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியதும், தொடக்க ஆடடக்காரர்களான கேப்டன் டேவிட் வார்னரும், விருத்திமான் சஹாவும் அரைசதம் விளாசியதும் ஐதராபாத்தின் நம்பிக்கைக்கு உற்சாகமூட்டுகிறது.

    பேட்டிங்கில் வார்னர் (4 அரைசதத்துடன் 529 ரன்), சஹா (4 ஆட்டத்தில் 214 ரன்), மனிஷ் பாண்டே (380 ரன்), வில்லியம்சன் (200 ரன்) பந்து வீச்சில் ரஷித்கான் (19 விக்கெட்), ஸ்விங் செய்வதில் கில்லாடியான சந்தீப் ஷர்மா (13 விக்கெட்), டி.நடராஜன் (14 விக்கெட்) ஆகியோர் ஐதராபாத்தின் ஆணிவேராக உள்ளனர். இவர்கள் ஜொலிப்பதை பொறுத்தே ஐதராபாத்தின் வெற்றி வாய்ப்பு அமையும்.

    ஐதராபாத்துக்கு நிகராக உள்ள ஒரு அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். முதல் 10 ஆட்டங்களில் 7-ல் வெற்றிகளை குவித்த அந்த அணி கடைசி 4 ஆட்டங்களில் சறுக்கி பின்னடைவுக்குள்ளானது. ரன்ரேட் அதிர்ஷ்டத்தால் ஒரு வழியாக பிளே-ஆப் சுற்றை அடைந்தது.

    இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி அந்த தாகத்தை தணிப்பதற்கான முதற்படிக்கட்டு இந்த ஆட்டமாகும். பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கேப்டன் விராட் கோலி (460 ரன்), டிவில்லியர்ஸ் (398 ரன்), தேவ்தத்படிக்கல் (472 ரன்) ஆகிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும். இவர்கள் 3 பேரும் சோடை போனால் பெங்களூரு நிலைமை கந்தல் தான். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் கட்டுக்கோப்புடன் வீசி சிக்கனத்தை காட்டுகிறார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சில் 7 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் சரியான வேகப்பந்து வீச்சு கூட்டணி இதுவரை அமையவில்லை.

    இரு அணிகளும் சரிசமபலத்துடன் மல்லுகட்டுவதால் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டங்களில் முதலில் 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவும், 2-வது முறை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தும் வெற்றி பெற்றிருந்தன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பிரியம் கார்க், ஜாசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷித்கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.

    பெங்களூரு: ஜோஷ் பிலிப் அல்லது ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது அல்லது நவ்தீப் சைனி, உதனா.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி அணி 47 ரன்னில் சுருண்டு அதிர்ச்சி தோல்வி கண்டது.
    சார்ஜா:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதலாவது லீக் ஆட்டத்தில் வெலோசிட்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் நோவாசை வீழ்த்தியது. இந்த நிலையில் நேற்று மாலை நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டி-ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல்பிளாசர்ஸ் அணிகள் மோதின.

    இதில் ‘டாஸ்’ ஜெயித்த வெலோசிட்டி கேப்டன் மிதாலிராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த வெலோசிட்டி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா (13 ரன், 9 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) 3-வது ஓவரில் ஜூலன் கோஸ்வாமி பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த மிதாலிராஜ் (1 ரன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (0) ஆகியோரது விக்கெட்டை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்தை சேர்ந்தவர்) ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்தில் கபளீகரம் செய்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை டேனி வயாட் 3 ரன்னிலும், சுஷ்மா வர்மா 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஸ்டம்பை குறி வைத்து தொடுத்த தாக்குதலில் நிலைகுலைந்த வெலோசிட்டி அணி பவர்- பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) 22 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது. தொடர்ந்து விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்த அந்த அணி 15.1 ஓவர்களில் வெறும் 47 ரன்னில் சுருண்டது. டிரைல்பிளாசர்ஸ் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் 3.1 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஜூலன் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் எளிதான இலக்கை நோக்கி ஆடிய டிரைல்பிளாசர்ஸ் அணி 7.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மந்தனா 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடக்க வீராங்கனை டியாந்த்ரா டோட்டின் 29 ரன்னும் (28 பந்து, 3 பவுண்டரி), ரிச்சா கோஷ் 13 ரன்னும் (10 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டிரைல்பிளாசர்ஸ் வீராங் கனை சோபி எக்லெஸ்டோன் ஆட்டநாயகி விருது பெற்றார்.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் டிரைல் பிளாசர்ஸ்-சூப்பர் நோவாஸ் அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன.
    பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால்(ஸ்பெயின்), பெலிசியானோ லோப்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் .நடால் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும்
    பாரீஸ்:

    பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றிய உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால்(ஸ்பெயின்) இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். ‘பை’ சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய நடால் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 4-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான பெலிசியானோ லோப்சை போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். நடால் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும். 2002-ம் ஆண்டில் முதலாவது வெற்றியை பெற்ற நடால் 18 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதுவரை 1,201 ஆட்டங்களில் ஆடியுள்ள நடால் அதில் 86 பட்டங்களுடன் ஆயிரம் வெற்றிகளும், 201 தோல்விகளும் கண்டுள்ளார்.

    ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் ஆயிரம் வெற்றிகளை பெற்ற 4-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்த சாதனை பட்டியலில் முதல் 3 இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ் (1274 வெற்றி), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (1242), அமெரிக்காவின் இவான் லென்டில் (1068) ஆகியோர் உள்ளனர்.

    34 வயதான நடால் கூறுகையில், ‘இந்த ஆயிரமாவது வெற்றி எனக்கு வயது ஆகி விட்டது என்பதை உணர்த்துகிறது. இச்சாதனையை அடைவது எளிதல்ல. மிக நீண்ட காலம் சிறப்பாக விளையாடினால் மட்டுமே முடியும். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
    துபாயில் நடைபெற்ற குவாலிபையர்-1ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை -- ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.
    துபாயில் நடைபெற்ற ஐபிஎல் குவாலிபையர்-1-ல் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. டி காக் 25 பந்தில் 40 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 51 ரன்களும், இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 30 பந்ததில் 55 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 14 பந்தில் 37 ரன்களும் அடித்தனர்.

    பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. முதல் ஓவரை டிரென் போல்ட் வீசினார். 2-வது பந்திரில் பிரித்வி ஷாவையும், 5-வது பந்தில் ரகானேவையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் ஸ்டம்பை பறிகொடுத்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 12 ரன்னிலும், ரிஷப் பண்ட் 3 ரன்னிலும் வெளியேறினர். அத்துடன் டெல்லி அணியின் தோல்வி உறுதியானது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இவரது ஆட்டத்தாலும், அக்சார் பட்டேல் கடைசி வரை போராடி 42 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு  143 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
    ஐ.பி.எல். தொடரின் குவாலிபையர்-1 துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். குயின்டான் டி காக் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். மேலும் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். முதல் மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே 15 ரன்கள் கிடைத்தது.

    அடுத்த ஓவரை அஸ்வின் வீசினார். 2-வது பந்தில் டி காக் ஒரு ரன் அடித்தார். 3-வது பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார். தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ ஆகி கோல்டன் டக் ஆனார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர் பிளேயில் மும்பை இந்தியன்ஸ் 63 ரன்கள் விளாசியது.

    8-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் குயின்டான் டி காக் 25 பந்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மறுமுனையில் அரைசதம் அடித்த சூர்யகுமார் 38 பந்தில் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 11.5 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த பொல்லார்ட் அஸ்வின் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அஸ்வின் 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    13 ஓவரில் 103 ரன்கள் மட்டுமே அடித்திருந்ததால் மும்பை அணி நெருக்கடிக்குள்ளானது. இருந்தாலும் இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16-வது ஓவரில் மும்பை அணிக்கு 18 ரன்கள் கிடைத்து. இதனால் 16 ஓவர் முடிவில் 140 ரன்களை எட்டியது.

    17-வது ஓவரின் முதல் பந்தில் குருணால் பாண்ட்யா 13 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். 17-வது ஓவரில் ஐந்து ரன்களே கிடைத்தது. மும்பை அணி 17 ஓவரில் 145 ரன்களே எடுத்திருந்தது.

    3 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்

    18-வது ஓவரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா- இஷான் கிஷன் ஜோடி ருத்ர தாண்டவம் ஆடியது. 18-வது ஓவரில் இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 162 ரன்கள் அடித்தது. 19-வது ஓவரை ரபடா வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ஹர்திக் பாண்ட்யா. இந்த ஓவரில் மும்பைக்கு 18 ரன்கள் கிடைத்தது. இதனால் 180 ரன்களை எட்டியது.

    கடைசி ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். 3-வது மற்றும் 4-வது பந்தை சிக்சருக்கு விளாசினார் ஹர்திக் பாண்ட்யா. கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி இஷான் கிஷன் அரைசதம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

    இஷான் கிஷன் 30 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 பந்தில் 5 சிக்சருடன் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவரில் மும்பை அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது.
    ஐபிஎல் குவாலிபையர்-1ல் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-1 துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணி:

    1. தவான், 2. பிரித்வி ஷா,  3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின், 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10, நோர்ஜே, 11. டேனியல் சாம்ஸ்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:

    1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ, 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குர்ணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. பும்ரா, 10. டிரென்ட் போல்ட்,  11. நாதன் கவுல்டர்-நைல்.
    ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியை விட ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தான் முக்கியமா? என்று முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. இவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    இந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் 4 போட்டிகளில் அவர் ஆடவில்லை.

    இதன் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டனான ரோகித் சர்மா ஆஸ்திரேலிய பயணத்தில் தேர்வு செய்யப்படவில்லை. காயம் சரியாக சில வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா கவனமாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கூறி இருந்தனர்.

    இதற்கிடையே ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களம் இறங்கினார். இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது காயம் மேலும் சந்தேகத்தை கிளப்பியது.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியை விட ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தான் முக்கியமா? என்று முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா விவகாரம் புதிராக உள்ளது. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேனான அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இல்லை என்று கிரிக்கெட் வாரிய பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் சான்று அளித்துள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவர் மும்பை அணியின் கேப்டனாக களம் இறங்குகிறார்.

    ரோகித் சர்மாவுக்கு நாட்டை விட ஐ.பி.எல்.தான் முக்கியமாக தெரிகிறது. இந்திய அணிக்கு ஆடுவதைவிட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகிறார்.

    இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் தீர்வு காணவேண்டும். ரோகித் சர்மா காயம் குறித்து நிதின் படேல் தவறான தகவல் கொடுத்தாரா? என்பது தெரியவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறும்போது, ‘ஏற்கனவே நடந்தது குறித்து விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ரோகித் தற்போது உடல் தகுதி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு இது நல்ல விஷயம்’என்றார்.
    மும்பை இந்தியன்ஸ் அணியை கண்டால் எதிரணிகளுக்கு பயம் என்று மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

    “இந்த ஐ.பி.எல். தொடரில் மற்ற அணிகளை விட சிறந்த பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வரிசையை கொண்டுள்ள ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான். எந்த ஒரு அணியும் மும்பையை எதிர்கொள்ள விரும்புவதில்லை. 

    ஏனெனில் நாங்கள் நன்றாக விளையாடினால் எதிரணிபாடு திண்டாட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியும். பிளே-ஆப் சுற்று போன்ற நெருக்கடியான ஆட்டங்களில் வெற்றி பெறுவது எப்படி என்பது எங்களது வீரர்களுக்கு தெரியும்”
    ×