என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மும்பை இந்தியன்ஸ் அணியை கண்டால் எதிரணிகளுக்கு பயம் என்று மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

    “இந்த ஐ.பி.எல். தொடரில் மற்ற அணிகளை விட சிறந்த பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வரிசையை கொண்டுள்ள ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான். எந்த ஒரு அணியும் மும்பையை எதிர்கொள்ள விரும்புவதில்லை. 

    ஏனெனில் நாங்கள் நன்றாக விளையாடினால் எதிரணிபாடு திண்டாட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியும். பிளே-ஆப் சுற்று போன்ற நெருக்கடியான ஆட்டங்களில் வெற்றி பெறுவது எப்படி என்பது எங்களது வீரர்களுக்கு தெரியும்”
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனாவுக்கு மூளைப்பகுதியில் இருந்த ரத்த உறைவு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான 60 வயது மரடோனா உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ‘ஸ்கேன்’ பரிசோதனையில் மூளைப் பகுதியில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது.

    இதனை அடுத்து அவருக்கு நேற்று முன்தினம் ஆபரேஷன் செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
    ஜமைக்கா:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான மர்லோன் சாமுவேல்ஸ் கடைசியாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. 2012 மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய அவர் இரண்டு இறுதிப்போட்டியிலும் அதிக ரன் குவித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.

    மர்லோன் சாமுவேல்ஸ்


    ஐ.பி.எல்., பிக்பாஷ் மற்றும் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் ஆடிய சாமுவேல்ஸ் எல்லா வகையிலான போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான சாமுவேல்ஸ் 71 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7 சதம், 24 அரைசதத்துடன் 3,917 ரன்னும், 41 விக்கெட்டும் எடுத்துள்ளார். 207 ஒருநாள் போட்டியில் ஆடி 10 சதம், 30 அரைசதத்துடன் 5,606 ரன்னும், 89 விக்கெட்டும், 67 இருபது ஓவர் போட்டியில் ஆடி 10 அரைசதம் உள்பட 1,611 ரன்னும், 22 விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்.
    இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது காலில் காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா அவசரம் காட்டாமல் நன்றாக குணம் அடைந்த பிறகு களம் திரும்ப வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ஆலோசனை தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே தான் காயத்தில் இருந்து குணமடைந்து உடல்தகுதியை எட்டிவிட்டதாக கூறிய ரோகித் சர்மா நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் களம் இறங்கி விளையாடினார். அவரது காயம் தீவிரமானது என்று கூறிதான் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இப்போது ஐ.பி.எல். போட்டியில் ஆடுவது அவரது காயத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் கருத்து தெரிவிக்கையில், ‘ரோகித் சர்மாவின் காயத்தின் நிலை குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தேர்வு குழுவில் அவர் அங்கம் வகிக்காவிட்டாலும் கூட அணியை தேர்வு செய்வதற்கு முன்பாக ரவிசாஸ்திரியிடம் ஆலோசித்து அவரது கருத்தை நிச்சயம் கேட்டு இருப்பார்கள். ரோகித் சர்மா உடல் தகுதியுடன் இல்லை என்று கிரிக்கெட் வாரியம் நினைத்தாலும் அவரை அணியில் வைத்து கொண்டு அவரது உடல் தகுதி முன்னேற்றம் குறித்து கண்காணித்து பிறகு முடிவு எடுத்து இருக்கலாம். ஐ.பி.எல். அணிக்காக விளையாட தயாராக இருக்கும் ஒரு வீரரை நாட்டு அணிக்காக தேர்வு செய்யாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த தவறான நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. ரோகித் சர்மாவை இந்திய அணியில் வைத்து இருக்க வேண்டும்’ என்றார்.
    பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சூப்பர் நோவாஸ் அணியை வெலோசிட்டி அணி வீழ்த்தியது.
    பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 3-வது பெண்கள் டி20 சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சூப்பர் நோவாஸ் அணி, வெலோசிட்டியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற மிதாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அட்டப்பட்டு 44 ரன்களையும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 31 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக சோபிக்க வில்லை. வெலோசிட்டி தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஏக்தா பிஸ்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆலம், காஸ்பெரக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெலோசிட்டி அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. டேனியல் வாட், சஃபாலி வர்மா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    பின்னர் வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், சுஷ்மா வர்மா 34 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் வெலோசிட்டி அணி சரிவை சந்தித்தது. இறுதியில் சுனே லஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். வெலோசிட்டி அணி 1 பந்து மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் நோவாஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு வெலோசிட்டி பழிதீர்த்து கொண்டது.
    மும்பையை வீழ்த்தி ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சார்ஜா:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சார்ஜாவில் நேற்று இரவு நடந்த 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வீழ்த்தியது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக போல்லார்ட் 41 ரன் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சந்திப் சர்மா 3 விக்கெட்டும், ஹோல்டர், ஷபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 

    பின்னர் 150 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர்- சகா ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.ஐதராபாத் அணி 17.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 151 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.- வார்னர் 85 ரன்னுடனும், சகா 58 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

    இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி (ரன் ரேட் - 0.214) வெளியேற்றப்பட்டது. 

    வெற்றி குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    பஞ்சாப் அணிக்கு எதிராக மோசமாக தோற்றதற்கு பிறகு (126 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றது) இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி தற்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை அணியில் ஓரிரு வீரர்களுக்கு ஓய்வு அளித்திருந்தனர். ஆனால் இந்த மைதானத்தில் அவர்களை 150 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது அற்புதமானது.

    அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள அணிக்கு எதிராக நதீம் சிறப்பாக பந்து வீசினார். அவர் 4 ஓவரில் 18 ரன் மட்டுமே கொடுத்தது விதி விலக்கானது. இது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. நாங்கள் எப்போதுமே எங்களது சிறந்தவற்றை முன்னோக்கி வைக்கிறோம். கடந்த 2016-ம் ஆண்டு நடந்ததை திரும்பிப் பார்க்கிறோம். அப்போது பட்டத்தை வெல்ல ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெற வேண்டி இருந்தது. அணிக்கு சிறந்த தொடக்கம் நான் அளித்ததில் பெருமைபடுகிறேன். அது எனது கடமையும், பொறுப்புமாகும். அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஒரு பெரிய ஸ்கோரை துரத்தவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. 

    பெங்களூர் அணி சிறந்த தாகும். அவர்களிடம் நிறைய அபாயகரமான வீரர்கள் உள்ளனர். அவர்களை 2016-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் வீழ்த்தி இருக்கிறோம். மற்றொரு வாழ்வா? சாவா? ஆட்டம் இருக்கிறது. அதில் இந்த உத்வேகத்தை கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, இந்த நாளை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அநேகமாக இந்த சீசனில் எங்களது மோசமான செயல்பாடு இதுவாகும். நாங்கள் சில விஷயங்களை முயற்சிக்க விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக அது எங்களுக்கு பலன் அளிக்கவில்லை. தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழப்பது பலன் அளிக்காது. பனி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் டாசை கருத்தில் கொள்ள விரும்பவில்லை. எனது காயம் குணமடைந்து நான் நன்றாக இருக்கிறேன். மீண்டும் களம் இறங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. 
    துபாயில் நாளை நடக்கும் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் போட்டிகள் முடிந்தது. இதன் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது.

    2-வது இடத்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் (16 புள்ளி), 3-வது இடத்தை ஐதராபாத் அணியும் (14 புள்ளி), 4-வது இடத்தை பெங்களூர் அணியும் (14 புள்ளி) பிடித்தன. இதன் மூலம் இந்த 4 அணிகளும் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை பிளேஆப் சுற்று தொடங்குகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
    தோல்வியடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி வெளியேற்றுதல் சுற்றில் வெல்லும் அணியுடன் முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணி இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    துபாயில் நாளை நடக்கும் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. 6-ந் தேதி நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் 3 மற்றும் 4-வது இடத்தை பிடித்த ஐதராபாத், பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8-ந் தேதி 2-வது தகுதி சுற்று ஆட்டம் நடக்கிறது. இறுதிப்போட்டி 10-ந் தேதி துபாயில் நடக்கிறது. 
    ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்.
    புதுடெல்லி:

    சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்தது. இதில் களம் இறங்க இருந்த வீரர்களில் ஒருவரான நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்‌ஷயா சென்னின் தந்தையும், பயிற்சியாளருமான டி.கே.சென்னுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 28-ந்தேதி கண்டறியப்பட்டது. இதனால் லக்‌ஷயா சென், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் ஆகியோர் வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகினர். அவர்கள் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ், உடல்தகுதி நிபுணர் அபிஷேக் வாக் ஆகியோர் பேட்மிண்டன் சம்மேளனத்துக்கும், விளையாட்டு அமைச்சகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியானதும் 5 பேரும் விமானம் மூலம் நேற்று அதிகாலை தாயகம் திரும்பினர்.

    டி.கே.சென் கூறுகையில், ‘நாங்கள் நேற்று அதிகாலை பெங்களூரு வந்தடைந்தோம். அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். எனக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்ததால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டோம். 5 நாள் கழித்து ஜெர்மனி அதிகாரிகள் மீண்டும் எங்களை சோதனைக்குட்படுத்தினர். நல்லவேளையாக கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. இதையடுத்து உடனடியாக தாயகம் திரும்பினோம்’ என்றார்.
    சார்ஜாவில் இன்று நடக்கும் பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி, மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டியை எதிர்கொள்கிறது.
    சார்ஜா:

    பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இன்று (புதன்கிழமை) முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    சார்ஜாவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி, மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டியை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் நோவாஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு வெலோசிட்டி பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. வெலோசிட்டி அணியில் 16 வயதான நட்சத்திர வீராங்கனை ஷபாலி வர்மா இடம் பெற்றிருப்பது அந்த அணிக்கு பலமாகும். இந்திய வீராங்கனைகள் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு வீராங்கனைகளும் அங்கம் வகிக்கிறார்கள். பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டி நடந்து வருவதால் இந்த முறை ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வரவில்லை.

    கொரோனா பரவலால் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்துக்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத இந்திய வீராங்கனைகளின் உடல்தகுதி எந்த அளவுக்கு இருக்கிறது, ஆட்டத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டிரைல்பிளாசர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, தீப்தி ஷர்மா, டியாந்த்ரா டோட்டின் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ராவல்பிண்டியில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.
    ராவல்பிண்டி:

    ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது 

    அடுத்து இறங்கிய பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் நிதானமாக ஆடினர். டெய்லர் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மதாவீர் 33 ரன்னும், ரசா 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது.

    பாகிஸ்தான் சார்பில் மொகமது ஹசைன் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 

    தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் 4 ரன்னிலும், பக்ர் சமான் 2 ரன்னிலும்  அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

    கடைசி கட்டத்தில் இறங்கிய வஹாப் ரியாஸ் அரை சதமடித்து, 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனானது.

    ஜிம்பாப்வே சார்பில் பிளெசிங் முசாராபானி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த ஆறுதல் வெற்றி மூலம் 1-2 என தொடரை நிறைவு செய்துள்ளது.

    ஆட்ட நாயகன் விருது ஜிம்பாப்வே வீரர் பிளெசிங் முசாராபானிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அளிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.
    மும்பை இந்தியன்ஸ் அணியை 149 ரன்களில் கட்டுப்படுத்தி, விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.

    அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதுபோல் வார்னர் டாஸ் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

    3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த குருணால் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1) அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 ஓவரில் 82 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து திணறியது. இஷான் கிஷன் 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும் வேகமெடுத்து 150 ரன்னை கடக்கும் வாய்ப்பை பெற்றது.

    19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த பொல்லார்ட் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அடித்த பந்தில் க்ளீன் போல்டானார். பொல்லார்ட் 25 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் அடித்தார். கடைசி 3 பந்தில் 3 ரன்கள் கிடைக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.

    பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணயின்  டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சாளர்களால் இவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. பவர்பிளேயில் 56 ரன்கள் விளாசிய ஐதராபாத், 10 ஓவரில் 89 ரன்கள் எடுத்தது.

    12-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி வார்னர் 35 பந்தில் அரைசதம் அடித்தார். சகா அதே ஓவரின் 4-வது பந்தில் சிங்கிள் எடு்து 34 பந்தில் அரைசதம் அடித்தார்.

    ஐதராபாத் 15 ஓவரில் 137 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரின் முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. வார்னர் 58 பந்தில் 85 ரன்களும்,  சகா 45 பந்தில் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    உத்வேகத்துடன் பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணியை 149 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.

    அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதுபோல் வார்னர் டாஸ் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

    3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஐதராபாத் வீரர்கள்0

    அதன்பின் வந்த குருணால் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1) அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 ஓவரில் 82 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து திணறியது. இஷான் கிஷன் 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும் வேகமெடுத்து 150 ரன்னை கடக்கும் வாய்ப்பை பெற்றது.

    19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த பொல்லார்ட் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அடித்த பந்தில் க்ளீன் போல்டானார். பொல்லார்ட் 25 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் அடித்தார். கடைசி 3 பந்தில் 3 ரன்கள் கிடைக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.
    ×