என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ராவல்பிண்டியில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.
    ராவல்பிண்டி:

    ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது 

    அடுத்து இறங்கிய பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் நிதானமாக ஆடினர். டெய்லர் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மதாவீர் 33 ரன்னும், ரசா 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது.

    பாகிஸ்தான் சார்பில் மொகமது ஹசைன் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 

    தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் 4 ரன்னிலும், பக்ர் சமான் 2 ரன்னிலும்  அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

    கடைசி கட்டத்தில் இறங்கிய வஹாப் ரியாஸ் அரை சதமடித்து, 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனானது.

    ஜிம்பாப்வே சார்பில் பிளெசிங் முசாராபானி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த ஆறுதல் வெற்றி மூலம் 1-2 என தொடரை நிறைவு செய்துள்ளது.

    ஆட்ட நாயகன் விருது ஜிம்பாப்வே வீரர் பிளெசிங் முசாராபானிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அளிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.
    மும்பை இந்தியன்ஸ் அணியை 149 ரன்களில் கட்டுப்படுத்தி, விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.

    அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதுபோல் வார்னர் டாஸ் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

    3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த குருணால் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1) அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 ஓவரில் 82 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து திணறியது. இஷான் கிஷன் 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும் வேகமெடுத்து 150 ரன்னை கடக்கும் வாய்ப்பை பெற்றது.

    19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த பொல்லார்ட் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அடித்த பந்தில் க்ளீன் போல்டானார். பொல்லார்ட் 25 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் அடித்தார். கடைசி 3 பந்தில் 3 ரன்கள் கிடைக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.

    பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணயின்  டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சாளர்களால் இவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. பவர்பிளேயில் 56 ரன்கள் விளாசிய ஐதராபாத், 10 ஓவரில் 89 ரன்கள் எடுத்தது.

    12-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி வார்னர் 35 பந்தில் அரைசதம் அடித்தார். சகா அதே ஓவரின் 4-வது பந்தில் சிங்கிள் எடு்து 34 பந்தில் அரைசதம் அடித்தார்.

    ஐதராபாத் 15 ஓவரில் 137 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரின் முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. வார்னர் 58 பந்தில் 85 ரன்களும்,  சகா 45 பந்தில் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    உத்வேகத்துடன் பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணியை 149 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.

    அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதுபோல் வார்னர் டாஸ் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

    3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஐதராபாத் வீரர்கள்0

    அதன்பின் வந்த குருணால் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1) அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 ஓவரில் 82 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து திணறியது. இஷான் கிஷன் 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும் வேகமெடுத்து 150 ரன்னை கடக்கும் வாய்ப்பை பெற்றது.

    19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த பொல்லார்ட் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அடித்த பந்தில் க்ளீன் போல்டானார். பொல்லார்ட் 25 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் அடித்தார். கடைசி 3 பந்தில் 3 ரன்கள் கிடைக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.
    வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நோக்கத்தில் களம் இறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, டிரென்ட் போல்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    1. ரோகித் சர்மா, 2. குயின்டான் டி காக்,  3. இஷான் கிஷன், 4.  சூர்யகுமார் யாதவ், 5. சவுரப் திவாரி, 6. குருணால் பாண்ட்யா, 7. பொல்லார்ட், 8. நாதன் கவுல்டர் நைல், 9. ஜேம்ஸ் பேட்டின்சன், 10. ராகுல் சாஹர், 11. தவால் குல்கர்னி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

    1. டேவிட் வார்னர், 2. சகா, 3. மணிஷ் பாண்டே, 4. கேன் வில்லியம்சன், 5. பிரியம் கார்க், 6. ஜேசன் ஹோல்டர், 7. அப்துல் சமாத், 8. ரஷித் கான், 9. ஷாபாஸ் நதீம், 10. சந்தீப் சர்மா. 11 டி நடராஜன்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
    கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்ற பட்டியலை எடுத்தால் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் பெயர் நிச்சயம் இருக்கும். அந்நிய நாட்டுக்காரர் என மனம் ஒத்துகொள்ள முடியாத அளவுக்கு வாட்சன் இந்தியாவோடு ஒன்றிணைந்து விட்டார். காரணம் ஐபிஎல்தான். குறிப்பாக வாட்சனுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு.

    சென்னை அணியோடு ஒன்றியவர் வாட்சன். இந்நிலையில் நேற்றைய கடைசி ஆட்டத்துக்கு பின்பு சி.எஸ்.கே. அணி நிர்வாகத்திடம் ஷேன் வாட்சன் தான் ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வை வீடியோ மூலம் அறிவித்தார் வாட்சன். அத்துடன் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘‘நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகள் என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான காலம்’’ என தெரிவித்துள்ளார்.

    அவர் பேசிய வீடியோவை சி.எஸ்.கே. பகிர்ந்துள்ளது.

    2018-ல் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் களம் இறங்கிய சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த சீசன் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன்னில் தோற்கும்போது கடைசி வரை போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இம்ரான் கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார், மேலும் கோகைன் சாப்பிட்டு குறட்டை விட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் மீது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் கடுமையான குற்றச்சாட்டைவைத்து உள்ளார்.  பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நவாஸ், இம்ரான் வழக்கமாக கஞ்சா உட்கொண்டு வருவதாகவும், மேலும் கோகைன் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

    நவாஸ் மற்றும் இம்ரான் ஆகியோர் 1970-கள் மற்றும் 1980-களில் ஒன்றாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளனர். 1987 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் ஒரு சம்பவத்தின் விவரங்களை நவாஸ் குறிப்பிட்டு கூறி உள்ளார்.

    இங்கிலாந்திற்கு எதிராக பந்து வீசிய இம்ரானுக்கு சில சிரமங்கள் இருந்தன. பாகிஸ்தானுக்கு திரும்பியதும், இம்ரான் நவாஸின் வீட்டிற்குச் சென்று போதைப்பொருள் உட்கொண்டதாக கூறி உள்ளார.இம்ரானுடன் சலீம் மாலிக், மொஹ்சின் கான், அப்துல் காதிர் ஆகியோரும் இருந்தனர் என கூறி உள்ளர்.

    இதுகுறித்து நவாஸ் கூறியதாவது:-

    இம்ரான் கான் கஞ்சாவை உட்கொண்டிருக்கிறார், அவர் லண்டனிலும் என் வீட்டிலும் கூட அதைச் செய்து உள்ளார். 1987 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒரு கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டபோது, ​​அவர் நன்றாக பந்து வீசவில்லை, அவர்  என் வீட்டிற்குச் வந்திருந்தார்  மொயின் கான், அப்துல் காதிர், சலீம் மாலிக் ஆகியோருடன் உணவு உட்கொண்டார், மேலும் சரஸையும் உட்கொண்டார். மேலும் கோகைன் சாப்பிடுகிறார். லண்டனில், அவர் எதையாவது சாப்பிட்ட்டு விட்டு குறட்டை விட்டு தூங்கி விடுவார் என கூறினார்.

    1969 முதல் 1984 வரை - பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 55 டெஸ்ட் மற்றும் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சர்ஃபராஸ் பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

    தற்போதைய பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் நவாஸ் மட்டுமல்ல. இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், போதைப்பொருள் உட்கொண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும், திருமணமான ஒருவருடன் நேரடி உறவில் இருந்ததாகவும் ரெஹாம் கான் கூறியுள்ளார். ரெஹான் தனது புத்தகத்தில், இம்ரான் ஹெராயின் மற்றும் ரோஹிப்னோல் போன்ற பல தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 17.3 ஓவருக்குள் வெற்றி பெறுவதில் இருந்து தடுத்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது தாமதமாகவே தெரியும் என கோலி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி-யால் 152 ரன்களே அடிக்க முடிந்தது. பின்னர் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்சிபி பந்து வீசியது. ஆனால் தவான், ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்சிபி வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் ரன்ரேட் அடிப்படையில்தான் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கான அளவுகோல் என்ன? என்பது தெரியவில்லை.

    இறுதியில் 17.3 ஓவருக்குள் டெல்லி வெற்றி பெறாவிடில் ஆர்சிபி தோல்வியடைந்தாலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என அறிவிக்கப்பட்டது.

    ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு 11 ஓவர்கள் முடிந்த நிலையில்தான் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாம். அப்போது டெல்லி அணி 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்திருந்தது.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘11-வது ஓவரின்போதுதான் 17.3 ஓவரில் வெற்றி பெற விடக்கூடாது என அணி நிர்வாகம் தெரிவித்தது. ஆட்டம் எங்கள் கையில் இருந்து சென்ற பின்னர் கூட, மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம்’’ என்றார்.
    காயம் குணமடைந்து உடற்தகுதியை நிரூபித்தால் கட்டாயம் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற முடியும்.
    ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. பின்தொடைப் பகுதியில் (ஹாம்ஸ்டிரிங்) ஏற்பட்ட காயத்தால் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் உள்ளார். பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் உடற்தகுதியை நிரூபித்தால் இந்திய அணியில் இடம் பெற முடியும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ரோகித் சர்மாவுடன் நாங்களும் அவர் ஆஸ்திரேலியா தொடருக்காக உடற்தகுதி பெற வேண்டும் விரும்புகிறோம். ஒரு குறிப்பிட்ட நிலையில் அவர் உடற்தகுதி பெற்றால், அவருக்கான இடம் குறித்து தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்வார்கள்.

    ரோகித் சர்மா மற்றும் ரோகித் சர்மா இருவரையும் கண்காணித்து வருகிறோம். இஷாந்த் சர்மா ஒட்டுமொத்தமாக விலகவில்லை. டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியில் அணியுடன் இணைவார்’’ என்றார்.
    புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க முடியாதது ஏமாற்றமே என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியை மீண்டும் வீழ்த்தி டெல்லி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. 

    அபுதாபியில் நேற்று நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்கமுடிந்தது. 

    தொடக்க வீரர் படிக்கல் 41 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 21 பந்தில் 35 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நோர்டியா 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றது. 

    ரகானே 46 பந்தில் 60 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 41 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். சபாஷ் அகமது 2 விக்கெட்டும், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 16 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி பெங்களூரை மீண்டும் வீழ்த்தியது.டெல்லி குவாலிபையர்-1 ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. 
    இந்த வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறும் போது, இந்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? என்பதாகும். நாங்கள் வெற்றி பெறுவதில் தான் கவனம் செலுத்தினோம். ரன் ரேட் பற்றி சிந்திக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    இந்த ஐ.பி.எல் தொடர் மிகவும் கடினமானது. இந்த போட்டியில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக மும்பை இருக்கிறது என்றார்.

    இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவினாலும் பிளேஆப் சுற்று வாய்ப்பை பெற்றது. டெல்லி அணி 17.3 ஓவருக்கு இலக்கை எட்டி இருந்தால் அந்த அணி இன்றைய ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். டெல்லி 19-வது ஓவரில் தான் வெற்றி பெற்றதால் பெங்களூர் அணிக்கு அதிர்ஷ்டம் அமைந்துவிட்டது.

    பெங்களூர் அணி டெல்லியிடம் மீண்டும் தோற்றதால் 2-வது இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் அந்த அணி கேப்டன் விராட் கோலி ஏமாற்றம் அடைந்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தின் முடிவு  இரண்டுவிதமான உணர்வை தருகிறது. பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் 2-வது இடத்தை பிடிக்கமுடியாமல் போனது சற்று ஏமாற்றமே. மிடில் ஓவரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இறுதிப்போட்டியில் நுழைய தற்போது 2 ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூர் அணி எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் கொல்கத்தா அல்லது ஐதராபாத்தை சந்திக்கிறது. இதில் தோல்வி அடைந்தால் பெங்களூர் அணி வெளியேற்றப்படும்.வெற்றி பெற்றால் குவாலிபையர்-2 ஆட்டத்தில் மும்பை அல்லது டெல்லியை எதிர்கொள்ளும்.
    ஐபிஎல் போட்டியில் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 4-வது அணி கொல்கத்தா நைட் ரைடர்சா? சன்ரைசர்ஸ் ஐதராபாத்தா? என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரியவரும்.
    சார்ஜா:

    13-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. நேற்றைய போட்டி முடிவு மூலம் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின. 

    சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.
    பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 4-வது அணி கொல்கத்தா நைட் ரைடர்சா? சன்ரைசர்ஸ் ஐதராபாத்தா? என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரியவரும்.

    இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் 56-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் அதாவது ஐதராபாத் தோற்றால் கொல்கத்தா பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஐதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணியும், கொல்கத்தாவும் 14 புள்ளிகளுடன் சமநிலை பெறும். ரன்ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

    ஐதராபாத்தின் நிகர ரன் ரேட் +0.55 ஆக இருக்கிறது. கொல்கத்தாவின் ரன் ரேட் -0.21 ஆக உள்ளது. இதனால் ஐதராபாத் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். அதே நேரத்தில் மும்பை வெற்றிக்காக கொல்கத்தா வீரர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

    மும்பை அணி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தனது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ளும் வேட்கையில் உள்ளது. ஏற்கனவே ஐதராபாத்தை வீழ்த்தியுள்ளதால் நம்பிக்கையுடன் விளையாடும்.
    மும்பை அணியில் இஷான் கிஷன், குயின்டன் டிகாக், ஹர்திக்பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், தற்காலிக கேப்டன் போலார்ட், பும்ரா, போல்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    ஐதராபாத் அணி மும்பை அணிக்கு பதிலடி கொடுத்து வெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். மிகவும் முக்கியமான ஆட்டம் என்பதால் ஐதராபாத் அணி முழுத்திறனை வெளிப்படுத்தும்.இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் தலா 7 வெற்றி பெற்றுள்ளன. 
    நான் ஓய்வு பெறுகிறேன் என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து டுவிட்டரில் வெளியிட்ட மெசேஸ் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பி.வி. சிந்து வெளியிட்டுள்ள அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாகச் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது.

    ஆனால் அந்த அறிக்கையில் பி.வி. சிந்து ‘‘டென்மார்க் ஓபன் போட்டிதான் கடைசி. நான் ஓய்வு பெறுகிறேன். இதை எதிர்கொள்ள நான் தடுமாறுகிறேன். அதனால்தான் நான் முடித்து கொண்டு விட்டேன் என இதைப்பற்றி நான் எழுதுகிறேன். இதைப் படித்து நீங்கள் அதிர்ச்சியடைந்தால் அது புரிந்துகொள்ளக் கூடியதே.

    இதை முழுவதும் படித்து முடிக்கும்போது என் கோணத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதற்கு நீங்களும் ஆதரவும் தருவீர்கள். இந்தக் கொரோனா தொற்று எனக்குப் புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் எதிராளியை வீழ்த்த என்னால் கடுமையாகப் பயிற்சி பெற முடியும்.

    ஆனால் கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸை எப்படித் தோற்கடிக்க முடியும்? பல மாதங்களாக வீட்டுக்குள் இருக்கிறோம். ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் பல கேள்விகளை எதிர்கொள்கிறோம். இந்தியாவுக்காக டென்மார்க் போட்டியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதானால் விலக முடிவெடுத்துள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 17.4 ஓவர்கள் விளையாட வைத்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
    ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணி பாயின்ட் டேபிளில் 2-வது இடத்திற்கு முன்னேறும். ரன்ரேட் அடிப்படையில் தோல்வியடையும் அணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

    டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் இறங்கியது. 16.5 ஓவரை தாண்டி தோல்வியடைந்தாலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரத்தில் 17.4 ஓவர் வரை தாக்குப்பிடித்து தோல்வியடைந்தாலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஆர்சிபி-க்கு இருந்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்சிபி டெல்லியை 17.4 ஓவருக்குள் வெற்றி பெற விடாததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

    வெற்றி பெற்ற டெல்ல கேப்பிட்டல்ஸ் பாயின்ட் டேபிளில் 2-வது இடத்தை பிடித்துள்ளது,
    ×