என் மலர்
விளையாட்டு
நான் ஓய்வு பெறுகிறேன் என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து டுவிட்டரில் வெளியிட்ட மெசேஸ் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பி.வி. சிந்து வெளியிட்டுள்ள அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாகச் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது.
ஆனால் அந்த அறிக்கையில் பி.வி. சிந்து ‘‘டென்மார்க் ஓபன் போட்டிதான் கடைசி. நான் ஓய்வு பெறுகிறேன். இதை எதிர்கொள்ள நான் தடுமாறுகிறேன். அதனால்தான் நான் முடித்து கொண்டு விட்டேன் என இதைப்பற்றி நான் எழுதுகிறேன். இதைப் படித்து நீங்கள் அதிர்ச்சியடைந்தால் அது புரிந்துகொள்ளக் கூடியதே.
இதை முழுவதும் படித்து முடிக்கும்போது என் கோணத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதற்கு நீங்களும் ஆதரவும் தருவீர்கள். இந்தக் கொரோனா தொற்று எனக்குப் புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் எதிராளியை வீழ்த்த என்னால் கடுமையாகப் பயிற்சி பெற முடியும்.
ஆனால் கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸை எப்படித் தோற்கடிக்க முடியும்? பல மாதங்களாக வீட்டுக்குள் இருக்கிறோம். ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் பல கேள்விகளை எதிர்கொள்கிறோம். இந்தியாவுக்காக டென்மார்க் போட்டியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதானால் விலக முடிவெடுத்துள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 17.4 ஓவர்கள் விளையாட வைத்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணி பாயின்ட் டேபிளில் 2-வது இடத்திற்கு முன்னேறும். ரன்ரேட் அடிப்படையில் தோல்வியடையும் அணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற நிலை இருந்தது.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் இறங்கியது. 16.5 ஓவரை தாண்டி தோல்வியடைந்தாலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரத்தில் 17.4 ஓவர் வரை தாக்குப்பிடித்து தோல்வியடைந்தாலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஆர்சிபி-க்கு இருந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்சிபி டெல்லியை 17.4 ஓவருக்குள் வெற்றி பெற விடாததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
வெற்றி பெற்ற டெல்ல கேப்பிட்டல்ஸ் பாயின்ட் டேபிளில் 2-வது இடத்தை பிடித்துள்ளது,
ஷிகர் தவான் மற்றும் அஜிங்கியா ரகானே அரை சதம் அடிக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி.
அபுதாபி:
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஜோஷ் பிலிப் 12 ரன்னிலும், விராட் கோலி 29 ரன்னிலும் அவுட்டாகினர். தேவ்தத் படிக்கல் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து 50 ரன்னில் வெளியேறினார்.
அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 17 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் அடித்தது.
டெல்லி அணியில் நோர்ஜோ 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 54 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய அஜிங்கியா ரகானேவும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ரிஷப் பண்ட்டும், ஸ்டோய்னிசும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்தாலும் விராட் கோலி, டி வில்லியர்ஸ் மீண்டும் ஏமாற்றம் அளிக்க டெல்லிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் ஆர்சிபி-யின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது.
ஜோஷ் பிலிப் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 29 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அப்போது ஆர்சிபி 12.3 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து 50 ரன்னிலேயே வெளியேறினார்.
அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழக்க, ஷிவம் டுபே 11 பந்தில் 17 ரன்கள் அடிக்க, ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களே அடித்தது.
டெல்லி அணியில் நோர்ஜோ 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ருத்துராஜ் கெய்க்வாட் இளம் வயது விராட் கோலியை நினைவு படுத்துகிறார் என்று சிஎஸ்கே வீரர் டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறிவிட்டாலும் தங்களுடைய கடைசி 3 போட்டிகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. இந்த மூன்று போட்டியிலும் தொடக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
தொடக்கத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட இரண்டு போட்டிகளில் ஒன்றில் டக் அவுட், ஒன்றில் சொற்ப ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், இறுதியில் அசத்தி நல்ல பெயரை வாங்கியுள்ளார் ருத்துராஜ்.
இதுகுறித்து சி.எஸ்.கே. பேட்ஸ்மானான டு பிளிஸ்சிஸ் கூறும்போது, ‘‘இந்த சீசன் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. ஆனால், நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம். எங்களுடைய அணியில் விளையாடும் ருத்துராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்’’ என்றார்.
மேலும் ‘‘நெருக்கடியான நேரத்தில் நின்று விளையாடுகிறார் என எனக்கு தோன்றுகிறது. இளம் வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இதுபோன்ற தகுதிகளே தேவையாக உள்ளது. எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மிச்சமிருக்கிறது. முழுவதும் ஃபிட்டாகவே இருக்கிறேன். அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன்’’ என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனியால் அடுத்த சீசனில் 400 ரன்கள் அடிக்க முடியும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 13 சீசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனிக்கு சரியாக அமையவில்லை. முதல் இரண்டு மூன்று போட்டிகளில் மிகவும் பின்வரிசையில் களம் இறங்கினார். சில ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் கூட எழுந்தது. ஆனால் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அடுத்த சீசனிலும் எம்எஸ் டோனிதான் கேப்டன் என்றார். எம்எஸ் டோனியும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டம் கடைசியான போட்டி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இதனால் 2021 சீசனிலும் எம்எஸ் டோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021 சீசனில் டோனியால் 400 ரன்கள் அடிக்க முடியும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஒரு சிறிய விசயத்தை அவர் உற்று நோக்க வேண்டும். அதன் அர்த்தம் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டி போதுமான அளவிற்கு இல்லை. அதனால் அவரால் அதிக அளவு விளையாட முடியாது. ஆனால், போட்டி கொடுக்கக்கூடிய ஆட்டத்தில் விளையாட வேண்டும், வலைப்பயிற்சியில் நெருக்கடி இருக்காது. போட்டி நெருக்கடியை கொண்டு வரும். இதை அவர் செய்தால் அடுத்த சீசனில் 400 ரன்கள் அடிக்க முடியும்’’ என்றார்.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதில் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்று உறுதி என்ற நிலையில் டாஸ் வென்றது டெல்லி அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.
ஆர்சிபி அணி:-
1. ஜோஷ் பிலிப், 2. தேவ்தத் படிக்கல், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. வாஷிங்டன் சுந்தர், 6. ஷிவம் டுபே, 7. ஷபாஸ் அகமது. 8. கிறிஸ் மோரிஸ், 9. இசுரு உடானா, 10, முகமது சிராஜ், 11. சாஹல்.
டெல்லி அணி:-
1. ஷிகர் தவான், 2. பிரித்வி ஷா, 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. டேனியல் சாம்ஸ், 8. அக்சார் பட்டேல், 9. அஸ்வின், 10. ரபடா, 11. அன்ரிச் நோர்ஜே.
கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரரான அந்த்ரே ரஸல், காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களம் இறங்கியதை சிறந்ததாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸல். இவர் சிக்ஸ் அடித்தால் பந்து கேலரியை தாண்டிவிடும். பந்தை மிகவும் பலமாக அடிக்கக்கூடியர். இவருக்கு இந்த ஐபில் சீசன் சிறப்பானதாக அமையவில்லை.
கடந்த 18-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடும்போது காயத்தால் அவதிப்பட்டார். அதன்பிறகு நான்கு போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி சரியான பிறகு, நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக களம் இறங்கினர். 11 பந்தில் 25 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் மீண்டும் களத்திற்கு திரும்பியதை சிறந்ததாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘மீண்டும் களத்திற்கு திரும்பியதை சிறந்ததாக உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டு வருதற்கான நேரம் மிகவும் கடினமான இருந்தது. ஒரு நாளைக்கு மூன்று முறையாக லேசாக வலியை உணர்ந்தேன்’’ என்றார்.
8 வாரங்கள் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், பிசியோ, மெடிக்கல் ஸ்டாஃப் சிறப்பாக சிகிச்சை அளிக்க 2 வாரத்தில் மீண்டு வந்துள்ளார் அந்த்ரே ரஸல். அவர் இதுவரை 9 போட்டிகளில் 96 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆடுகளம் தற்போது 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக உள்ளதால், டாஸ் முக்கியத்தும் பெற்றதாக விளங்குகிறது.
ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி தொடங்கியது. ஐபிஎல் போட்டி என்றாலே கடைசி வரை வந்து த்ரில் வெற்றி பெறுவது சிறப்பம்சம். டாஸ் வென்ற அணி கண்ணை மூடிக்கொண்டு பந்து வீச்சை தேர்வு செய்யும்.
எவ்வளவு ரன்கள் அடித்தாலும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் சேஸிங் செய்யும். ஆனால் இந்த முறை தொடக்க போட்டிகளில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதற்கு முக்கியக் காரணம் கேப்டன்கள் எதிர்பார்த்த பனிப்பொழிவு இல்லாததுதான். இதனால் 56 போட்டிகளில் முதல் 26 போட்டிகளில் 19-ல் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றது.
தற்போது அபு தாபி, துபாயில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் சேஸிங் செய்யும்போது பந்து வீச கடினமான உள்ளது. ஆகவே 2-வது பேட்டிங் செய்யும் அணி எளிதாக வெற்றி பெற்று வருகிறது.
குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற 9 போட்டிகளில் 7-ல் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 18-ல் 14 அணிகள் சேஸிங்கில்தான் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் வரும் போட்டிகளிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 54 போட்டிகளில் நான்கு போட்டிகள் டை ஆகி உள்ளன. மற்ற 50 போட்டிகளில் தலா 25 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், சேஸிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் ஷேன் வாட்சன். சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் டி20 லீக்குகளில் மட்டும் விளையாடி வந்தார்.
ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த சீசனில் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே முன்னேறியது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. வாட்சனும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி லீக்கில் விளையாடிய பின்னர், சிஎஸ்கே வீரர்கள் அறையில், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வுபெற இருப்பதாக உணர்ச்சிவசப்பட தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்சன் கடந்த 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2018-ல் இருந்து சென்னை சூபபர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த வருடம் சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து இறுதிப் போட்டிக்கு அணியை முன்னேற வைத்தார்.
ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து அரைசதம், சதம் அடித்து இந்திய அணியில் இடம் பிடித்த பின்னர், கடைசி மூன்று போட்டியில் மோசமாக விளையாடினார் தவான்.
இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கியவர் ஷிகர் தவான். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பைக்குப்பின் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கியதில் இருந்து இவருக்கு டெஸ்ட் போட்டியில் இடம் இல்லாமல் போனது.
ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகமும் இருந்தது. இந்த நிலையில்தான் ஐபிஎல் தொடர் வந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து டெல்லிக்கு மாறிய தவான் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடவில்லை. 0 , 35, 34, 26, 32, 5 என முதல் ஆறு போட்டிகளில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் 69, 57, 101, 106 என அசத்தினார். இரண்டு அரைசதங்கள், இரண்டு சதங்கள் அடுத்தடுத்து அடித்ததால் தவானிடம் பழைய விளையாட்டு உள்ளது. ஃபார்முக்கு வந்துவிட்டார் என ரசிர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே எண்ணத்தில் தேர்வுக்குழு 26-ந்தேதி அறிவித்த ஆஸ்திரேலியா தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் ஷிகர் தான். சதம் அடித்த பிறகு விளையாடிய மூன்று போட்டிகளிலும் 6, 0, 0 என படுமோசமாக விளையாடியுள்ளர். இன்றைய போட்டியில் வெற்ற பெற்றால்தான் பிளேஆஃப்ஸ் சுற்று என்ற நிலையில் டெல்லிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய கேல்எல் ராகுல் ஒயிட்பால் இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும், மயங்க் அகர்வால் பேட்ஸ்மேனாகவும் இடம் பிடித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் 15 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், கடைசி போட்டியில் அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவராக பேட் கம்மின்ஸ் திகழ்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவரை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.
ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 14 லீக் ஆட்டங்கள். ஒரு போட்டியில் 4 ஓவர்கள் வீசலாம். அப்படி என்றால் பேட் கம்மின்ஸ் 56 ஓவர்களில் 336 பந்துகள் வீச முடியும். ஒரு பந்துக்கு சுமார் 4.61 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவார்.
ஐபிஎல் தொடக்கத்தில் அவரது பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை. ரன்கள் வாரிக்கொடுத்தார். இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். முதல் 10 போட்டிகளில் மிகவும் சொற்ப விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
கடைசி நான்கு போட்டிகளில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான வாழ்வா? சாவா? போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதனால் கொல்கத்தா ரசிகர்கள் கொடுத்த துட்டுக்கு கரெக்ட்டாக வேலை பார்த்துள்ளதாக கம்மின்ஸை பாராட்டியுள்ளனர்.






