search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரை சதமடித்த அட்டப்பட்டு
    X
    அரை சதமடித்த அட்டப்பட்டு

    பெண்கள் டி 20 கிரிக்கெட் - டிரைல் பிளாஸ்டர்சை 2 ரன்னில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது சூப்பர் நோவாஸ்

    ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாஸ்டர்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சூப்பர் நோவாஸ் அணி.
    சார்ஜா:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

    முதலாவது லீக் ஆட்டத்தில் வெலோசிட்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் நோவாசை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் டிரைல்பிளாசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்றாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் டிரைல்பிளாசர்ஸ்- சூப்பர் நோவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    பிரியா புனியா 30 ரன்னும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சமாரி அடப்பட்டு சிறப்பாக ஆடி அரை சதமடித்தார், அவர் 67 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரைல் பிளாஸ்டர்ஸ் அணி இறங்கியது.

    அந்த அணியில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா தீப்தி சர்மா 33 ரன்னும், தீந்திரா டாடின் 27 ரன்னும், ஹர்லின் தியோல் 27 ரன்னும் எடுத்தனர்.

    அதிகபட்சமாக தீப்தி சர்மா கடைசி வரை போராடி 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் டிரைல் பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்னில் தோல்வியை தழுவியது. சூப்பர் நோவாஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    3 அணிகள் தலா ஒருமுறை மற்றொரு அணியுடன் மோதியுள்ளன. 3 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.

    ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ், டிரைல்பிளாஸ்டர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி சார்ஜாவில் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
    Next Story
    ×