என் மலர்

  செய்திகள்

  கேன் வில்லியம்சன், தவான்
  X
  கேன் வில்லியம்சன், தவான்

  இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன், தவான் ஆகியோர்தான் ‘கீ பிளேயர்கள்’- சஞ்சய் பாங்கர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்றைய போட்டியில் ஜெயிக்கும் அணிக்கு கேன் வில்லியம்சன் அல்லது தவான்தான் முக்கிய பங்களிப்பாக இருப்பார்கள் என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
  ஐபிஎல் குவாலிபையர்-2 இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்.

  இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. எலிமினேட்டர் சுற்று ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி 131 ரன்கள் அடித்தது. கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.

  இன்றைய போட்டியும் லோ ஸ்கோர் போட்டியாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கேன் வில்லியம்சன் அல்லது ஷிகர் தவான் ஆகியோர் முக்கிய பங்களிப்பார்கள் என்ற இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘தவான் மிகப்பெரிய போட்டிக்கான வீரர். அவர் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ்ஷிப்பில் விளையாடியவர். எப்போதெல்லாம் அவருடைய தேவை அணிக்கு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாக விளையாடி உள்ளார். அணிக்கு என்ன தேவை என்பது அவருக்கும் தெரியும்.

  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அங்குள்ள வீரர்களுக்கு எதிராக விளையாடியுளு்ளார். ரஷித் கானை எப்படி எதிர்கொள்வது என்பது அவருக்குத் தெரியும். டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றால், தவான் மிகச்சிறந்த வீரராக இருப்பார் என நம்புகிறேன்.

  டேவிட் வார்னர் எப்படி ஐதராபாத் அணிக்கு முக்கியமானவரோ, அதேபோன்று கேன் வில்லியம்சனும் முக்கியமானவர். ஆர்சிபி-க்கு எதிராக முக்கிய நெருக்கடி காலங்களில் கேன் வில்லியம்சன் விளையாடியது போன்று மற்றவர்களால் விளையாட முடியாது.

  ஆகவே, தொடர்ச்சியாக ஐந்து போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெறும் என்றால், முக்கிய துருப்புச்சீட்டாக கேன் வில்லியம்சன் இருப்பார்’’ என்றார்.
  Next Story
  ×