என் மலர்
விளையாட்டு
சூப்பர் நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல்பிளாசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சார்ஜா:
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடைபெற்றது.
இதில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ் மற்றும் டிரைல்பிளாசர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டிரைல்பிளாசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
அந்த அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் அவுட்டானார். தீந்திரா டாடின் 20 ரன்னும், தீப்தி சர்மா 10 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இறுதியில் டிரைல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.
சூப்பர் நோவாஸ் சார்பில் ராதா யாதவ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி இறங்கியது.
அந்த அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 30 ரன்னும், சசிகலா சிரிவர்தனே 19 ரன்னும், தனியா பாட்டியா 14 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் டிரைல்பிளாசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஐதராபாத் அணிக்கெதிராக வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், மும்பைக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்குவேனா? என்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் கேட்டதும் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.
அதேபோல் மார்கஸ் ஸ்டாய்னிஸை தொடக்க வீரராக களம் இறக்கி ஷ்ரேயாஸ் அய்யர் ஆச்சர்யம் அளித்தார். ஸ்டாய்னிஸ் தொடக்க வீரராக களம் இறங்கி 27 பந்தில் 38 ரன்கள் விளாசினார். அத்துடன் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி, டெல்லி இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குவது ரிக்கி பாண்டிங் கையில்தான் உள்ளது என ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளைய போட்டி குறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘நான் சில சீசனில் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளேன். டாப் பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது சிறந்தது. இது எப்படி போகும் என்று யாருக்கும் தெரியாது.
முதலில் ஸ்விங் இருந்ததால் பொறுமையாக விளையாடினோம். அதன்பின் நானும், தவானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவு செய்தோம். இறுதிப் போட்டியில் நான் தொடக்க வீரராக களம் இறங்குவேனா? என்பது உறுதியாக எனக்குத் தெரியவில்லை. எல்லா இடத்திலும் நான் பேட்டிங் செய்து வருகிறேன். ரிக்கி பாண்டிங்கிடம் பேசிய பின்னர்தான் பார்க்க வேண்டும்.
நான் போதுமான அளவிற்கு ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளேன். இதுதான் எனக்கு முதல் இறுதிப் போட்டி. கோரன்டைனில் குடும்பத்தை பிரிந்து விளையாடுவது மிகவும் கஷ்டம்.
மும்பை சிறந்த அணி. அவர்கள் ஒரு போட்டியில் விளையாடாமல் உள்ளனர் என்பதை சொல்ல விரும்புவேன். எங்களுடைய சிறந்த ஆட்டம் போட்டியின் வெற்றிக்கு போதுமானதாக இருக்க வேண்டும். அவர்களை வீழ்த்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டாம் மூடி வெளியிட்டுள்ள ஐபிஎல் கனவு அணியில் டேவிட் வார்னர், விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.
ஐபிஎல் 13-வது சீசன் நாளைய தினத்தோடு முடிவடைகிறது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை வைத்து கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களுக்கு பிடித்தமான கனவு அணியை வெளியிடுவார்கள்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டாம் மூடி வெளியிட்டுள்ள கனவு அணியில் விராட் கோலி, டேவிட் வார்னருக்கு இடம் கிடைக்கவில்லை.
டாம் மூடி வெளியிட்டுள்ள ஐபிஎல் கனவு அணி:-
1. தவான், 2. கேஎல் ராகுல், 3. சூர்யகுமார் யாதவ், 4. ஏபிடி, 5. இஷான் கிஷன், 6. ராகுல் டெவாட்டியா, 7. ரஷித் கான், 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ரபடா, 10. சாஹல், 11. பும்ரா.
மூன்று முறை தோல்வியடைந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் 13-வது சீசன் இறுதிப் போட்டி நாளை துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த சீசனில் 2 லீக், குவாலிபையர்-1 என மூன்று முறை டெல்லியை துவம்சம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இருந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘பின்னோக்கி பார்த்தீர்கள் என்றால், இது சிறந்த சீசன். இருந்தாலும் நாங்கள் இதுவரை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. நாங்கள் இங்கே வந்தது, கோப்பையை வெல்வதற்குதான். எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
இந்த தொடரில் சிறந்த அணியாக திகழ்ந்த வேலையில் தொடர்ந்து நான்னு தோல்வி என்பதை விரக்தியை ஏற்படுத்தியது. முக்கியமான போட்டியில் ஆர்சிபிக்கு எதிராகவும், நேற்று ஐதராபாத்துக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஐபிஎல் இறுதிப் போட்டியை எளிதாக நினைக்க வேண்டாம்’’ என்றார்.
ஐபிஎல் நடைபெறும் இடம் முதல் வீரர்கள் காயம் வரை பிசிசிஐ தலைவரான கங்குலி வெளிப்படையாக தெரிவித்ததற்கு வெங்சர்க்கார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். ஐபிஎல் தொடரின் சேர்மனாக பிரிஜேஷ் பட்டேல் உள்ளார். ஐபிஎல் தொடர்பான அறிவிப்புகளை பிரிஜேஷ் பட்டேல்தான் வெளியிட வேண்டும்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகமாக இருந்தது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் போட்டி நடைபெறும் தேதிகள், மைதானங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் பெரும்பாலான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவற்கு முன் கங்குலி தெரிவித்தார். அதேபோல் தற்போது விமர்சனத்திற்கு உள்ளான ரோகித் சர்மா காயம் குறித்தும் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி கூட அதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் கங்குலி, ரோகித் சர்மா ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி குறித்து கவனமாக செயல்பட வேண்டும். பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன் ஜாக்கிரதையாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திலிப் வெங்சர்க்கார் ‘‘ஏன் இவர் நீக்கப்பட்டார், ஏன் இவரை தேர்வு செய்யவில்லை, ஏன் இவரை கருத்தில் கொள்ளவில்லை, சிலர் ஏன் இதுவரை ஃபிட்ஆக வில்லை என்று தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி சொல்ல வேண்டியதை, கங்குலி கூறுவது ஆச்சர்யமாக இருக்கிறது.
இதேபோல்தான் ஐபிஎல் தொடரின் தேதி போன்றவற்றை ஐபிஎல் சேர்மனுக்குப் பதிலாக தெரிவித்தார். இதுபோன்ற செயலை பார்ப்பதற்கு கவலையாக இருக்கிறது.
மற்றவர்களின் சான்றுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாரா? அல்லது மற்றவர்களை விட தனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறாரா?’’ என விமர்சனம் செய்துள்ளார்.
விக்கெட் வீழ்த்துவது பெரிய விசயம் அல்ல, தொடரை வெல்வதுதான் முக்கியம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் ரபடா தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக ரபடா உள்ளார். லீக் ஆட்டத்தில் கடைசி சில போட்டிகளில் விக்கெட் வீழ்த்த திணறிய ரபடா, குவாலிபையர் 2-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் இத்தொடரில் 29 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அணி வெற்றி பெற்று, விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் கவலை இல்லை என ரபடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரபடா கூறுகையில் ‘‘ஐதராபாத் அணிக்கெதிராக குறிப்பாக கடைசி ஓவரை சிறப்பாக வீசுவேன் என்று நினைக்கவில்லை. சிறப்பாக பந்து வீசும்போது இதுபோன்று அமையும். இதற்காக அவார்டை எதிர்பார்க்கக் கூடாது. நான் இப்படித்தான் எடுத்துக் கொள்வேன். தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். மற்றதெல்லாம் 2-வதுதான்.
நாங்கள் தொடரை கைப்பற்றினால், நான் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன். மிக நீண்ட தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். நாங்கள் முக்கியமான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப் போட்டியில் சிறப்பாக அல்லது சிறந்த முறையில் விளையாடுவோம்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவின் 22 வயதான வில் புகோவ்ஸ்கிவை இந்திய தொடருக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விக்டோரியா அணியைச் சேர்ந்த வில் புகோவ்ஸ்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 22 வயதான புகோவ்ஸ்கி ஆட்டமிழக்காமல் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 255 ரன்கள் விளாசியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 202 ரன்கள் அடித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு இன்னிங்சில் 457 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் 17-ந்தேதியும், 2-வது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதியும், 3-வது டெஸ்ட் ஜனவரி 7-ந்தேதி சிட்னியிலும், ஜனவரி 15-ந்தேதி 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனிலும் நடக்கிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கிவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வில் புகோவ்ஸ்கி குறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘சிறந்த அணிக்கெதிராகத்தான். ஆனால், இந்த பையன் தயாராக இருக்கிறான். தற்போது அவருடைய நேரம். டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் அவருக்கு இது சிறந்த வழியாக இருக்கும். அவர் பழக்கமான கண்டிசனில் விளையாடி கொண்டிருக்கிறார்’’ என்றார்.
ஸ்விங் பந்தால் அசத்தி வரும் டிரென்ட் போல்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக விளையாடுவாரா? என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதில் அளித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் டிரென்ட் போல்ட் அபாரமாக பந்து வீசி வருகிறார். புதுப்பந்து ஸ்விங் செய்ய சாதகமாக இருப்பதால் டிரென்ட் போல்ட் தொடக்க வீரர்களை பயமுறுத்தி வருகிறார். இதுவரை 14 போட்டிகளில் 22 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
குவாலிபையர் 1-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக முதல் ஓவரிலேயே 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 2 ஓவரில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்த நிலையில், அதன்பின் பந்து வீசவில்லை. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் பந்து வீசிய போதிலும் டிரென்ட் போல்ட் பீல்டிங் செய்யவில்லை.
இதனால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘டிரென்ட் போல்ட் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் எங்களுடன் இன்று பயிற்சி மேற்கொண்டார். அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரபடா 29 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், பும்ரா 27 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். டிரென்ட் போல்ட் 3-வது இடத்தில் உள்ளார்.
மும்பை மற்றும் ஒடிசா அணிகளுக்காக விளையாடியுள்ள ராபின் மோரிஸ், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டி நடைபெறும்போது லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மும்பை அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீரர் ராபின் மோரிஸ், வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் சூதாட்டம் நடத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
ராபின் மோரிஸ் மும்பை மற்றும் ஒடிசா அணிகளுக்காக 1995 முதல் 2007 வரை 44 முதல்தர போட்டிகளிலும், 51 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் ஏற்கனவே கடன் வாங்கிய விவகாரத்தில் ஏஜென்ட்-ஐ கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக சில வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா தொடருக்கான மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்த ரோகித் சர்மா, தற்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான தொடரில் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதால் அவர் இடம் பெறவில்லை.
அதேபோல் டி20 அணியில் வருண் சக்ரவர்த்தி இடம் பிடித்திருந்தார். அவருக்குப் பதிலாக தற்போது டி.நடராஜன் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடருக்கான மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன..
சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிக்கான அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.
மாற்றி அமைக்கப்பட்ட டி20 போட்டிக்கான இந்திய அணி:-
1. விராட் கோலி, 2. ஷிகர் தவான், 3. மயங்க் அகர்வால், 4. கேஎல் ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. சஞ்சு சாம்சன், 9. ஜடேஜா, 10. வாஷிங்டன் சுந்தர், 11. சாஹல், 12. பும்ரா, 13. முகமது ஷமி, 14. நவ்தீப் சைனி, 15. தீபக் சாஹர், 16. டி. நடராஜன்
ஒருநாள் போட்டிக்கான அணி:-
1. விராட் கோலி, 2. தவான், 3. ஷுப்மான் கில், 4. கேஎல் ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. மயங்க் அகர்வால், 9. ஜடேஜா, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. பும்ரா, 13. முகமது ஷமி, 14. ஷர்துல் தாகூர், 15. சஞ்சு சாம்சன்,
டெஸ்ட் போட்டிக்கான அணி:
1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. மயங்க் அகர்வால், 4. பிரித்வி ஷா, 5. கேஎல் ராகுல், 6. புஜாரா, 7. ரகானே, 8. ஹனுமா விஹாரி, 9. ஷுப்மான் கில், 10, சகா, 11. ரிஷப் பண்ட், 12. பும்ரா, 13. முகமது ஷமி, 14. உமேஷ் யாதவ், 15. நவ்தீச் சைனி, 16, குல்தீப் யாதவ், 17. ஜடேஜா, 18. ஆர்.அஸ்வின், 19. முகமது சிராஜ்.
அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் விராட் கோலி அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்புவார் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் விராட் கோலி அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்புவார் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அப்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எங்களுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது என்று விராட் கோலி தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்திய அணி வரும் 27-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவி அருகில் இருக்க விரும்பிய விராட் கோலி, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கு கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியோடு விராட் கோலி இந்தியா திரும்புவார் என பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்.
மேலும், ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார். ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாடமாட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து இறுதி போட்டி வாய்ப்பை இழந்தது அவமானம் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை புரட்டியெடுத்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் கேன் வில்லியம்சனின் போராட்டத்தால் ஆர்சிபியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 189 ரன்கள் அடித்தது. பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. டாப் ஆர்டர் வீரர்களான வார்னர் (2), பிரியம் கார்க் (17), மணிஷ் பாண்டே (21) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் வெற்றிக்காக போராடினார். ஆனால் 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஐதராபாத் அணி 172 ரன்களே எடுத்து 17 ரன்னில் வெற்றியை கோட்டைவிட்டது. அத்துடன் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாதது அவமானம் என உணர்கிறேன் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘டெல்லி கேப்பிட்டல்ஸ் மிகவும் சிறந்த அணி. அவர்கள் விளையாடும் அவர்களுடைய ரிதத்தை காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றனர். சிறப்பாக விளையாடினர்.
2-வது இன்னிங்சில் 190 ரன்கள் அடிப்பது கடினம். எங்களுக்கு தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்ந்துவிட்டது. இருந்தாலும் மிடில் ஆர்டர் ஓவர்களில் ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தோம். எங்களுக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததை உண்மையிலேயே அவமானம் என கருதுகிறேன். ஆனால், குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக எங்கள் அணி வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.






