என் மலர்
விளையாட்டு
ரோகித் சர்மா அரைசதம் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியது.
ஐபிஎல் 13-வது சீசன் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), தவன் (15), ரகானே (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (65), ரிஷ்ப் பண்ட் (56) சிறப்பாக விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது.
பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டி காக் 12 பந்தில 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4.1 ஓவரில் 45 ரன்கள் விளாசியது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் 36 பந்தில் அரைசதம் விளாசி மறுமுனையில் சிறப்பாக விளையாடினார் ரோகித் சர்மா.
அடுத்து வந்த இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றது. 17-வது ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணிக்கு 22 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பொல்லார்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
ஆனால் 18-வது ஓவரின் முதல் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். ஸ்கோர் சமமான நிலையில் ஹர்திக் பாண்ட்யா 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா ஒரு ரன் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இஷான் கிஷன் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் அரைசதம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ராகுல் சாஹர் நீக்கப்பட்டு ஜெயந்த் ஜாதவ் சேர்க்கப்பட்டார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.
மார்கஸ் ஸ்டோய்னிஸ், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதல் பந்தை சந்தித்தார். டிரென்ட் போல்ட் வீசிய முதல் பந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டோய்னிஸ் பேட்டை உரசி கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது.
இதனால் ஸ்டோய்னிஸ் கோல்டன் டக் உடன் வெளியேறினார். அடுத்து வந்த ரகானே 3-வது ஓவரின் 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பிய தவான் ஜெயந்த் ஜாதவ் சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி 22 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அடுத்து கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுவரை சரியாக விளையாடாத ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது டெல்லி அணி 15 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ஹெட்மையர் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தாலும், டெத் ஓவரில் அதிரயாக விளையாடி முடியவில்லை.
டெல்லி 16-வது ஓவரில் 7 ரன்களும், 17-வது ஓவரில் 11 ரன்களும், 18-வது ஓவரில் 6 ரன்களும், 19-வது ஓவரில் 6 ரன்களும், கடைசி ஓவரில் 8 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களே அடித்தது.
ஷ்ரேயாஸ் அய்யர் 50 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
மும்பை அணியில் ராகுல் சாஹர் நீக்கப்பட்டு ஜெயந்த் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ, 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குர்ணால் பாண்ட்யா, 8. ஜெயந்த் ஜாதவ், 9. பும்ரா, 10. டிரென்ட் போல்ட், 11. கவுல்டர்-நைல்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி:
1. தவான், 2. ஹெட்மையர், 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின், 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10, நோர்ஜே, 11. பிரவீன் டுபே.
அடிலெய்டில் டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும் டே-நைட் டெஸ்ட் போட்டியை காண 27 ஆயிரம் ரசிர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.
முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரும், அதன்பின் டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறுகிறது. கடைசியாக டிசம்பர் 17-ந்தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த போட்டியை காண 50 சதவீதம், அதாவது 27 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் தலா 27 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் இதுவரை பந்து வீசாத ஹர்திக் பாண்ட்யா இன்றைய இறுதிப் போட்டியில் பந்து வீசுவாரா? என்பதற்கு ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. காயத்தால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் அவர் போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், பவுலிங் செய்யாமல் பேட்டிங் மட்டும் செய்து வருகிறார். இன்று இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஒருவேளை இந்த போட்டியில் மற்ற பந்து வீச்சாளர்களுக்கு பந்து எடுபடவில்லை என்றால், ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்ட்யா சிறிய பிரச்சனையுடன் இருக்கிறார். அவர் பந்து வீசினால் சிறப்பானதாக இருக்கும். இந்தத் தொடர் முழுவதும் அவரது உடல்நிலையை பாதுகாத்து கொள்ளும் வகையில் பந்து வீசும் வாய்ப்பை அளிக்காமல் உள்ளோம். அவர் சிறப்பாக பேட்டிங் பணியை செய்து வருகிறார்.
நாங்கள் ஒரு வீரர் மீது அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க விரும்பமாட்டோம். இவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும்போது அதை அவர் செய்யவில்லை என்றால், அணியின் மனஉறுதிய குறைந்து விடும். அந்த சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை’’ என்றார்.
இலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக்கிற்கான போட்டி அட்டவணையை புதிதாக வெளியிட்டுள்ளது. இத்தொடர் வருகிற 26-ந்தேதி முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை நடக்கிறது.
இலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. தற்போது நவம்பர் 26-ந்தேதியில் இருந்து டிசம்பர் 16-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் - கண்டி டஸ்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 21 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 23 போட்டிகளில் நடக்கின்றன. கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், தம்புல்லா ஹாக்ஸ், காலே கிளாடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன் அணிகள் பலப்பரீட்சசை நடத்துகின்றன.
இறுதிப் போட்டிகள் டிசம்பர் 13-ந்தேதியும், 14-ந்தேதியும் நடக்கிறது. டிசம்பர் 16-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குப்பின் மிகப்பெரியது ஐபிஎல் இறுதி ஆட்டம் என பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் நடைபெறும் டி20 லீக்கில் மிகப்பிரபலம் வாய்ந்தது ஐபிஎல். மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு 13 சீசனில் 6 முறை மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறை கோப்பையை வெல்லும்.
அந்த அணியில் இடம் பிடித்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்ட், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குப்பின் ஐபிஎல் இறுதிப் போட்டிதான் மிகப்பெரியது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொல்லார்ட் கூறுகையில் ‘‘இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. என்றாலும், அந்த அளவிற்கான மகிழ்ச்சி இருக்கும். ஐபிஎல் இறுதிப் போட்டி, உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப்பின் மிகப்பெரியது’’ என்றார்.
அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே ‘‘இது எங்களுக்கு மற்றொரு ஆட்டம் மாதிரி. நாங்கள் மிகப்பெரிய அளவில் நினைக்கவில்லை. எங்களுடய திறமையை சரியான விதத்தில் செயல்படுத்துவோம். பேட்டிற்கும் பந்திற்கும், ரன்னுக்கும் விக்கெட்டுக்கும் இடையிலான போட்டி. மகிழ்ச்சியாக இந்த போட்டியில் கலந்து கொள்வோம்’’ என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் முதல் வருகிற ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து தேர்வு குழுவினர் கலந்து ஆலோசித்து மாற்றங்கள் செய்து அறிவித்துள்ளனர்.
20 ஓவர் அணியில் அறிமுக வீரராக இடம் பெற்று இருந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தோள்பட்டை காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் புதுமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன்இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.
இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
நடராஜனுடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்!
அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்! என பதிவிட்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ள கே எல் ராகுலை டெல்லி அணியின் தவான் முந்துவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
துபாய்:
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவரான ஷிகர் தவான் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்த ஐ.பி.எல். சீசனில் தவான் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் 16 ஆட்டத்தில் 603 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். அவர் 2 சதமும், 4 அரை சதமும் அடித்துள்ளார்.
இந்த போட்டியில் இருந்து வெளியேறிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தான் ரன் குவிப்பில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 14 ஆட்டத்தில் 670 ரன் (1 சதம், 5 அரை சதம்) எடுத்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை குவிப்போருக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைக்கும். இதை தவான் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்றைய இறுதிப்போட்டியில் அவர் 68 ரன்களை எடுத்தால் தான் முதல் இடத்தை பிடிக்க முடியும். அதற்காக தவான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த போராடுவார்.
டேவிட் வார்னர் (ஐதராபாத்) 548 ரன்னுடன் 3-வது இடத்திலும், இஷான் கிஷன், குயின்டன் டிகாக் (இருவரும் மும்பை) 483 ரன்னுடன் 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர்.
அதிக விக்கெட் கைப்பற்றும் வீரர்களுக்கு ஊதா நிற தொப்பி கிடைக்கும். தற்போது டெல்லி அணி வீரர் ரபடா 29 விக்கெட் (16 ஆட்டம்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். மும்பையை சேர்ந்த பும்ரா 27 விக்கெட்டுடன் (14 ஆட்டம்) 2-வது இடத்தில் உள்ளார்.
இன்றைய இறுதிப்போட்டியில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவும். அதிக விக்கெட்டை கைப்பற்றி முதல் இடத்தை பிடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ரிஷப்பண்டை தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் அறிவுறுத்தி உள்ளார்.
மும்பை:
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் ரிஷப்பண்ட் கடந்த காலங்களில் சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
2018-ம் ஆண்டு ஒரு சதம், 5 அரை சதத்துடன் 684 ரன்கள் குவித்தார். இதில் 37 சிக்சர்கள் அடங்கும். 2019-ல் 3 அரை சதத்துடன் 488 ரன்கள் எடுத்தார். 27 சிக்சர்கள் அடித்தார்.
இந்த ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் வழக்கமாக விளையாடும் அதிரடியை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவர் 13 ஆட்டத்தில் 287 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. 7 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இந்தநிலையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டியிலாவது ரிஷப்பண்டை தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட்ஹாக் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரிஷப்பண்டை இந்த சீசனில் கொஞ்சம் மரபு ரீதியிலான கிரிக்கெட்டை ஆடுமாறு பாண்டிங் கூறி இருப்பதுபோல் தெரிகிறது. இன்னிங்ஸ் முழுவதும் ஆட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கலாம்.
ஆனால் ரிஷப்பண்ட் ஒரு சிறந்த அதிரடி வீரர் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கக் கூடியவர். அவர் எந்த ஒரு பந்துவீச்சையும் அபாரமாக ஆடக்கூடியவர். அவரது கைகளை கட்டிப்போட்டால் எப்படி?
கடந்த 2 தொடர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 150-க்கும் மேல் இருந்தது. எதிர் அணியிடம் இருந்து ஆட்டத்தை தனது அணி பக்கம் சுலபமாக ஒரு சில பந்துகளில் மாற்றக்கூடியவர் ரிஷப்பண்ட். இறுதிப்போட்டி யிலாவது அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பாண்டிங் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பிரட்ஹாக் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று இரவு நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாய்:
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கியது. அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறிய லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
துபாயில் கடந்த 5-ந் தேதி நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அபுதாபியில் 6-ந் தேதி நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.
ஐ.பி.எல். மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.
4 முறை (2013, 2015, 2017, 2019) கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2010-ம் ஆண்டில் மட்டுமே இறுதிப்போட்டியில் தோல்வியை (சென்னையிடம்) சந்தித்தது. மற்றபடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற எல்லா தடவையும் வெற்றி வாகை சூடி அசத்தி இருக்கிறது.
இந்த சீசனில் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பையின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக விளங்குகிறது. பேட்டிங்கில் குயின்டான் டி காக் (4 அரைசதத்துடன் 483 ரன்கள்), இஷான் கிஷன் (4 அரைசதத்துடன் 483 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (4 அரைசதத்துடன் 461 ரன்கள்), பொல்லார்ட் (259 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (278 ரன்கள்) நல்ல பார்மில் உள்ளனர். காயம் சர்ச்சைக்கு மத்தியில் களம் திரும்பிய ரோகித் சர்மா (264 ரன்கள்) கடைசி 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மும்பை அணியினர் இதுவரை 130 சிக்சர்கள் விளாசி இருக்கின்றனர். இதுவே அந்த அணியின் அதிரடிக்கு சான்றாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (27 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (22 விக்கெட்), ராகுல் சாஹர் (15 விக்கெட்) ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.
8 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணி தொடரின் தொடக்கத்தில் வீறு நடைபோட்டது. ஆனால் தற்போது சற்று தடுமாறுகிறது. முதலாவது தகுதி சுற்று உள்பட கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத்துக்கு ஆப்பு வைத்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான் முதுகெலும்பாக விளங்கி வருகிறார். அவர் இதுவரை 2 சதம், 4 அரைசதம் உள்பட 603 ரன்கள் குவித்து இருக்கிறார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ரன்கள்), மார்கஸ் ஸ்டோனிஸ் (352 ரன்கள்) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் பிரித்வி ஷா கழற்றி விடப்பட்டார். அவருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ரஹானே, ரிஷாப் பண்ட் நிலைத்து நின்று ஆடினால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் காஜிசோ ரபடா (29 விக்கெட்), நோர்டியா (20 விக்கெட்), ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (12 விக்கெட்), ஆர்.அஸ்வின் (13 விக்கெட்), அக்ஷர் பட்டேல் (9 விக்கெட்) ஆகியோர் வலுசேர்த்து வருகிறார்கள். ஐதராபாத் அணிக்கு எதிரான தகுதி சுற்றில் பழைய பார்முக்கு திரும்பி பெற்ற வெற்றி டெல்லி அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்து இருக்கும்.
நடப்பு தொடரில் 2 லீக் ஆட்டங்களிலும் முறையே 5 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை பந்தாடிய மும்பை அணி முதலாவது தகுதி சுற்றிலும் 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணியே இறுதிப்போட்டியிலும் கோலோச்ச அதிக வாய்ப்பு இருக்கிறது. மும்பைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு இருக்கும் டெல்லி அணி அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
அதிக முறை கோப்பையை வென்று இருக்கும் மும்பை அணி 5-வது முறையாக மகுடம் சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக் குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, நாதன் கவுல்டர் நிலே, டிரென்ட் பவுல்ட், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
டெல்லி: மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஹெட்மயர், ரிஷாப் பண்ட், ரஹானே, பிரவின் துபே, அக்ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், காஜிசோ ரபடா, நோர்டியா.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

சூப்பர் நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல்பிளாசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சார்ஜா:
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடைபெற்றது.
இதில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ் மற்றும் டிரைல்பிளாசர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டிரைல்பிளாசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
அந்த அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் அவுட்டானார். தீந்திரா டாடின் 20 ரன்னும், தீப்தி சர்மா 10 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இறுதியில் டிரைல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.
சூப்பர் நோவாஸ் சார்பில் ராதா யாதவ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி இறங்கியது.
அந்த அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 30 ரன்னும், சசிகலா சிரிவர்தனே 19 ரன்னும், தனியா பாட்டியா 14 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் டிரைல்பிளாசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.