என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில் புகோவ்ஸ்கி
    X
    வில் புகோவ்ஸ்கி

    இந்திய தொடருக்கான ஆஸி. அணியில் 22 வயது இளைஞரை எடுங்கள்: ஆதரவு பெருக காரணம்?

    ஆஸ்திரேலியாவின் 22 வயதான வில் புகோவ்ஸ்கிவை இந்திய தொடருக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    விக்டோரியா அணியைச் சேர்ந்த வில் புகோவ்ஸ்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 22 வயதான புகோவ்ஸ்கி ஆட்டமிழக்காமல் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 255 ரன்கள் விளாசியுள்ளார்.

    அதோடு மட்டுமல்லாமல் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 202 ரன்கள் அடித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு இன்னிங்சில் 457 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.

    இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் 17-ந்தேதியும், 2-வது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதியும், 3-வது டெஸ்ட் ஜனவரி 7-ந்தேதி சிட்னியிலும், ஜனவரி 15-ந்தேதி 4-வது டெஸ்ட்  பிரிஸ்பேனிலும் நடக்கிறது.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கிவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    வில் புகோவ்ஸ்கி குறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘சிறந்த அணிக்கெதிராகத்தான். ஆனால், இந்த பையன் தயாராக இருக்கிறான். தற்போது அவருடைய நேரம். டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் அவருக்கு இது சிறந்த வழியாக இருக்கும். அவர் பழக்கமான கண்டிசனில் விளையாடி கொண்டிருக்கிறார்’’ என்றார்.
    Next Story
    ×