என் மலர்
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயின் அலி தொடக்க ஆட்டத்தில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வருகிற 26-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயின் அலி தொடக்க ஆட்டத்தில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மொயின் அலி இந்தியா வர விசாவுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு இன்னும் பயணத்துக்கான விசா கிடைக்கவில்லை. அவர் தற்போது இங்கிலாந்தில் உள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தில் மொயின் அலி விளையாட மாட்டார் என்றே தெரிகிறது.
மொயின் அலி விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து மேட்ஸ்மேன் கான்வே இடம் பெறலாம்.
என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம் என லக்னோ அணி ஆலோசகர் காம்பீர் கூறியுள்ளார்.
லக்னோ:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் புதிய அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடுகிறது.
லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் உள்ளார்.
லக்னோ தலைமை உள்ளிட்டவைகள் குறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது:-
என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம். ராகுல் தனது அணுகுமுறையில் அச்சமின்றி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக அவருக்கு எல்லா சுதந்திரமும் கிடைக்கும்.
எந்தவொரு கேப்டனும் துணிச்சலான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அதுபோன்று ராகுல் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் ரிஸ்க் எடுக்காவிட்டால், நீங்கள் வெற்றி பெறுவீர்களா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாது. குயிண்டன் டி காக் விக்கெட் கீப்பராக செயல்படுவார். ஆனால் லோகேஷ் ராகுல் பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் கவனம் செலுத்துவார். தேசிய அணியில் இடம் பெறுவதற்காக நீங்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டும் என்று நான் ஒரு போதும் நம்பவில்லை.
ஐ.பி.எல். என்பது ஒருவரின் காயத்தை வெளிப்படுத்தும் ஒரு தளம். ஒருவர் கேப்டனாக வளர முடியும். ஆனால் ஐ.பி.எல். போட்டி நீங்கள் இந்திய அணி கேப்டனாவதற்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...டோனிக்கு பிறகு நான்கு வீரர்களால் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட முடியும்- ரெய்னா
வீரர்கள் ஓய்வறையில் நாங்கள் மிகவும் மரியாதை அளிக்கும் ஒரு தலைவர் தேவை. அதாவது கட்டளை போடும் வீரர் கேப்டனாக வேண்டுமே தவிர, கோரிக்கைகள் வைக்கும் தலைவர் அல்ல என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மும்பை:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்குகிறது. கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். ஏலத்தில் அனுபவ வீரர் பிளிஸ்சிஸ்சை எடுப்பது என்ற திட்டத்தில் தெளிவாக இருந்தோம். வீரர்கள் ஓய்வறையில் நாங்கள் மிகவும் மரியாதை அளிக்கும் ஒரு தலைவர் தேவை. அதாவது கட்டளை போடும் வீரர் கேப்டனாக வேண்டுமே தவிர, கோரிக்கைகள் வைக்கும் தலைவர் அல்ல. அவர் தென்ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்துள்ளார். நிறைய சாதித்துள்ளார். அவர் பெங்களூரு அணியை வழிநடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயம் இந்த பணியை மிகச்சிறப்பாக செய்வார். நான் உள்பட அனைவரும் அவருடன் நன்றாக பழகுகிறோம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கி இவ்வளவு தூரம் வந்திருப்பது நம்ப முடியாத ஒன்று. நான் தற்போது புத்துணர்ச்சியுடன் இங்கு திரும்பி இருக்கிறேன். ஏனெனில் பொறுப்பு மற்றும் கடமைகளில் இருந்து விலகி உள்ளேன்.
என்னுடைய வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு என்று ஒரு குடும்பம் வந்து விட்டது. மகளுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். என்னை பொறுத்தவரை அளவற்ற மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் எனக்கு பிடித்த கிரிக்கெட்டையும் விளையாடுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் துல்லியமாக இருக்கிறேன். களத்தில் எப்போதும் போல் ரசித்து அனுபவித்து விளையாடி அணிக்கு முழு பங்களிப்பை அளிப்பேன்.
இவ்வாறு கோலி கூறினார்.
இதையும் படியுங்கள்...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: தடையில்லா சான்றிதழ் விவகாரத்தால் வங்காளதேச வீரர் ஏமாற்றம்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா உள்பட 4 வீரர்களால் அணியை வழிநடத்த முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த 35 வயதான சுரேஷ் ரெய்னாவை இந்த முறை யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதனால் ரெய்னா அடுத்த அவதாரம் எடுக்கிறார். இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘வர்ணனையாளர் பணிக்கு என்னை தயார்படுத்தி கொண்டுள்ளேன்.
எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன்சிங், பியுஸ் சாவ்லா ஆகியோர் ஏற்கனவே வர்ணனையாளராக உள்ளனர். இந்த சீசனில் ரவிசாஸ்திரியும் வர்ணனை குழுவில் இடம் பிடித்துள்ளார். எனவே இது எனக்கு எளிதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். தேவையான ஆலோசனைகளை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, வெய்ன் பிராவோ ஆகியோரால் அணியை வழிநடத்த முடியும். கேப்டன்ஷிப்புக்குரிய திறமை இவர்களிடம் உண்டு. ஆட்டத்தை நன்றாக புரிந்து செயல்படக்கூடியவர்கள். டோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வர முடியும்’ என்றார்.
இதையும் படியுங்கள்...நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடீரென ஓய்வு முடிவு அறிவிப்பு
தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற நடாலுக்கு இடது விலா பகுதியில் உள்ள எலும்பில் விரிசல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மாட்ரிட்:
உலகின் 3-ம் நிலை டென்னிஸ் வீரரும், 21 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவினார். இந்த ஆண்டில் அவர் சந்தித்த முதல் தோல்வி இது தான்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற அவருக்கு இடது விலா பகுதியில் உள்ள எலும்பில் விரிசல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் 4 முதல் 6 வாரங்கள் வரை விளையாட முடியாது என்று அவரது அணியினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பார்த்தால் 35 வயதான ரபெல் நடால் மே 22-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பாக களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...ஐ.பி.எல்.அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் பலம் வாய்ந்த அணி- ஷேன் வாட்சன் கருத்து
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்டி தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. 25 வயதான இவர் மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
‘‘டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும்போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது தெரியவில்லை. என்னுடைய சிறந்த நண்பரிடம் உதவி கேட்டுக்கொண்டேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆஷ்லே பார்டி 2019-ல் பிரெஞ்ச் ஓபனையும், 2021-ல் விம்பிள்டனையும், 2022-ல் ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றுள்ளார்.
இதையும் படியுங்கள்... மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
ரிஷப் பண்ட் மிக சிறந்த வீரராக திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ந் தேதி தொடங்குகிறது.
வரும் 27ந் தேதி டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வாட்சன் தெரிவித்துள்ளதாவது:
இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட பலமான அணிகளில் டெல்லியும் ஒன்று. அதனால்தான் டெல்லி கேபிடல்ஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
ரிஷப் பண்ட் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல மிக அமைதியான ஒரு அணி தலைவர். ரிஷப் மற்றும் தோனி இருவரும் அற்புதமான திறன் கொண்ட வெவ்வேறு வகை வீரர்கள்.
(மறைந்த) ஷேன் வார்ன் ஒரு வியக்கத்தக்க அணித் தலைவர். சக வீரர்களின் திறமையை அவர் நம்பினார். ஷேனுடனான எனது நினைவுகள் அவரது திடீர் மறைவுக்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
இவ்வாறு வாட்சன் தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், விளையாட்டு உபகரணங்களையும் சாதனங்களையும் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குகிறது.
புதுச்சேரி:
கைதிகளுக்காக சிறைச்சாலையிலிருந்து பெருமை மிக்க வாழ்வுக்கு என்ற திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் 8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கூடைப்பந்து, பேட்மின்ட்டன், கைப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கேரம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த திட்டத்தின் மூன்றாவது கட்ட நடவடிக்கைகளை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா டெல்லியில் இருந்து இணைய வழியில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மத்திய சிறையில், சிறைத் துறை தலைவர் ரவிதீப் சிங், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் 500 கைதிகளுக்கான விளையாட்டு பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டன.
விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்க உதவுவதுடன், அதற்கான உபகரணங்களையும் சாதனங்களையும் இந்தியன்ஆயில் நிறுவனம் வழங்குகிறது.
விளையாட்டு பயிற்சிகள் சிறைக் கைதிகளுக்கு, விடுதலைக்குப் பிறகு தாழ்வு மனப்பான்மையின்றி சுமூகமாக வாழ உறுதுணை புரியும் என்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஸ்ரீகாந்த் வைத்யா தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, ஸ்மித், அலெக்ஸ் கேரி மற்றும் கிரீன் ஆகியோர் அரை சதமடித்தனர்.
லாகூர்:
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 133.3 ஓவரில் 391 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து, 91 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்து 59 ரன்னில் வெளியேறினார்.
கிரீன் 79 ரன்னும், அலெக்ஸ் கேரி 67 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் ஷாஹின் அப்ரிடி தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 11 ரன்னில் வெளியேறினார்.
இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 45 ரன்னும், அசார் அலி 30 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி - ராங்ஜிரெட்டி ஜோடி தரவரிசையில் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கோலாலம்பூர்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடம் வகித்து வந்த இந்தியாவின் லக்ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார்.
இந்நிலையில், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 74,786 புள்ளிகளுடன் 9-வது இடம் பிடித்துள்ளார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில், காயத்ரி கோபிசந்த் - ட்ரெசா ஜோலி ஜோடி 34 வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 வயதான லக்சயா சென், ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கும் இந்தியாவை சேர்ந்த 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதையும் படியுங்கள்...மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
தென்னாப்பிரிக்கா அணியுடன் சுற்றுப்பயணம் இருப்பதால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தஸ்கினுக்கு தடையில்லாச் சான்றிதழை வழங்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் புதிய அணிகளாக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட், குஜராத் டைட்டனஸ் அணிகள் களமிறங்குகிறது.
கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் புதிய நிறுவனமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை ரூ.7.5 கோடிக்கு வாங்கியது. லக்னோ அணி வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மார்க் வுட்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மார்க் வுட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக வங்களாதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது விளையாட லக்னோ நிர்வாகம் விரும்பியது. இதனை தொடர்ந்து தஸ்கினை அனுகிய போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழை வழங்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.
ஐபிஎல் போன்ற பணக்கார கிரிக்கெட் போட்டியில் விளையாட அனைத்து வீரர்களும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நிலையில் வங்காளதேச அணி வீரருக்கு வாய்ப்பு கிடைத்தும் அதில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் செயல்பாடு தலைவர் ஜலால் யூனுஸ் கூறியதாவது:- இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர் இருப்பதால் தஸ்கின் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை. இது குறித்து நாங்கள் தஸ்கினுடன் பேசினோம், அவர் முழு சூழ்நிலையையும் புரிந்து கொண்டார். ஐபிஎல் விளையாடவில்லை என்றும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்றும் பின்னர் வீடு திரும்புவார் என்றும் தஸ்கின் எங்களிடம் தெரிவித்தார்.
இவ்வாறு வங்கதேச கிரிக்கெட் செயல்பாடு தலைவர் கூறியுள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் ரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஹேமில்டன்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2-வது போட்டியில் நியூசிலாந்திடம் 62 ரன்னில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் 155 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
அதைத் தொடர்ந்து இங்கிலாந்து (4 விக்கெட்), ஆஸ்திரேலியா (6 விக்கெட்) அணிகளிடம் தோற்றது. இதனால் எஞ்சிய 2 ஆட்டங் களில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.
இந்திய அணி 6-வது போட்டியில் வங்காள தேசத்தை இன்று எதிர் கொண்டது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.
அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேக்னாசிங்குக்கு பதிலாக பூனம் யாதவ் இடம் பெற்றார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மந்தனாவும், ஷபாலி வர்மாவும் தொடக்க வீராங் கனைகளாக களம் இறங்கி னார்கள். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 10-வது ஓவரில் 50 ரன்னை தொட்டது.
15-வது ஓவரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி பிரிந்தது. ஷிபாலி வர்மா 42 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 42 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 74ஆக இருந்தது.
அதை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான மந்தனா 30 ரன்னில் ‘அவுட்’ ஆனார். அடுத்து வந்த கேப்டன் மிதாலிராஜ் முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 74 ரன்னில் இந்திய அணி 3 விக்கெட்டைஇழந்து திணறிய நிலையில் இருந்தது.
4-வது விக்கெட்டான யாஷிகா பாட்டியா-ஹர்மன் பிரீத் கவூர் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து ஆடி யது. 24.4 ஒவரில் இந்திய அணி 100 ரன்னை தொட்டது.
ஹர்மன் பிரீத் கவூர் 14 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 108 ஆக இருந்தது. அடுத்து ரிச்சா கோஷ் களம் வந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது.
யாஷிகா நிதானத்துடன் விளையாடி அரை சதம் அடித்தார். 79 பந்தில் 2 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 12-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 3-வது அரை சதமாகும்.
நன்றாக ஆடி வந்த இந்த ஜோடியும் பிரிந்தது. ரிச்சா கோஷ் 26 ரன்னிலும், யாஷிகா 50 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 43.1 ஓவர்களில் 176 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்தது. பூஜா 30 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஷினே ரானா 27 ரன்னில் அவுட் ஆனார்.
வங்காளதேசம் தரப்பில் ரிது மோனி 3 விக்கெட்டும், நசிதா அக்தர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
230 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் விளையாடியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்காளதேச அணி 98 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. இறுதியில் அந்த அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 40.3 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.
இந்திய அணி தரப்பில் ரானா 4 விக்கெட்டும் பூஜா, கோசுவாமி தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள்...மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை






