search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தஸ்கின் அகமது
    X
    தஸ்கின் அகமது

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: தடையில்லா சான்றிதழ் விவகாரத்தால் வங்காளதேச வீரர் ஏமாற்றம்

    தென்னாப்பிரிக்கா அணியுடன் சுற்றுப்பயணம் இருப்பதால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தஸ்கினுக்கு தடையில்லாச் சான்றிதழை வழங்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் புதிய அணிகளாக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட், குஜராத் டைட்டனஸ் அணிகள் களமிறங்குகிறது. 

    கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் புதிய நிறுவனமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை ரூ.7.5 கோடிக்கு வாங்கியது. லக்னோ அணி வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மார்க் வுட்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து மார்க் வுட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக வங்களாதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது விளையாட லக்னோ நிர்வாகம் விரும்பியது. இதனை தொடர்ந்து தஸ்கினை அனுகிய போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழை வழங்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. 

    ஐபிஎல் போன்ற பணக்கார கிரிக்கெட் போட்டியில் விளையாட அனைத்து வீரர்களும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நிலையில் வங்காளதேச அணி வீரருக்கு வாய்ப்பு கிடைத்தும் அதில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் செயல்பாடு தலைவர் ஜலால் யூனுஸ் கூறியதாவது:- இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர் இருப்பதால் தஸ்கின் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை. இது குறித்து நாங்கள் தஸ்கினுடன் பேசினோம், அவர் முழு சூழ்நிலையையும் புரிந்து கொண்டார். ஐபிஎல் விளையாடவில்லை என்றும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்றும் பின்னர் வீடு திரும்புவார் என்றும் தஸ்கின் எங்களிடம் தெரிவித்தார். 

    இவ்வாறு வங்கதேச கிரிக்கெட் செயல்பாடு தலைவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×