என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஷேன் வாட்சன், ரிஷப் பண்ட்
    X
    ஷேன் வாட்சன், ரிஷப் பண்ட்

    ஐ.பி.எல்.அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் பலம் வாய்ந்த அணி- ஷேன் வாட்சன் கருத்து

    ரிஷப் பண்ட் மிக சிறந்த வீரராக திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    மும்பை:

    நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ந் தேதி தொடங்குகிறது. 
    வரும் 27ந் தேதி டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வாட்சன் தெரிவித்துள்ளதாவது:

    இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட பலமான அணிகளில் டெல்லியும் ஒன்று. அதனால்தான் டெல்லி கேபிடல்ஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

    ரிஷப் பண்ட்  ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல மிக அமைதியான ஒரு அணி தலைவர். ரிஷப் மற்றும் தோனி இருவரும் அற்புதமான திறன் கொண்ட வெவ்வேறு வகை வீரர்கள். 

    (மறைந்த) ஷேன் வார்ன் ஒரு வியக்கத்தக்க அணித் தலைவர். சக வீரர்களின் திறமையை அவர் நம்பினார். ஷேனுடனான எனது நினைவுகள் அவரது திடீர் மறைவுக்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. 

    இவ்வாறு வாட்சன் தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×