search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாண்டிச்சேரி"

    • இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    • இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

    மனக்குறைகளை தீர்க்கும் இரும்பை மாகாளீஸ்வரர்

    புதுவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இரும்பை மாகாளீஸ்வரர் கோவில்.

    புதுவை திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    தேவார மூவர்களால் பாடல் பெற்ற 276 சிவ திருத்தலங்களில் 32வது திருத்தலமாக இரும்பை மாகாளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    குடும்ப விருத்திக்கும், ஒற்றுமைக்கும் புகழ்பெற்ற தலமாகவும் இந்த கோவில் அமைந்துள்ளது.

    1300 ஆண்டுகளுக்கு முன்பு மாகாள மகரிஷியால் கோவில் ஸ்தாபிக்கப்பட்டு அவர் பூஜித்து அருள்பெற்ற ஸ்தலமாகவும் இது உள்ளது.

    இதனாலேயே இங்குள்ள இறைவன் மாகாளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    மாகாள மகரிஷி இதுபோல உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் ஆகிய கோவில்களையும் ஸ்தாபித்துள்ளார்.

    திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க கோவிலாகவும் இது அமைந்துள்ளது.

    இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

    கோவிலை சுற்றி இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால் அந்த பகுதி இலுப்பை என அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி இரும்பை என மாறியிருப்பதாக கூறுகிறார்கள்.

    கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் இரண்டாக பிளந்து பின்னர் ஒன்றாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த சிலை பிளந்ததற்கான அடையாளங்களுடன் இப்போதும் கருவறை சிலை உள்ளது.

    ×