என் மலர்
விளையாட்டு

ரபெல் நடால்
நடால் காயத்தால் அவதி - 6 வாரம் விளையாட முடியாது
தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற நடாலுக்கு இடது விலா பகுதியில் உள்ள எலும்பில் விரிசல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மாட்ரிட்:
உலகின் 3-ம் நிலை டென்னிஸ் வீரரும், 21 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவினார். இந்த ஆண்டில் அவர் சந்தித்த முதல் தோல்வி இது தான்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற அவருக்கு இடது விலா பகுதியில் உள்ள எலும்பில் விரிசல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் 4 முதல் 6 வாரங்கள் வரை விளையாட முடியாது என்று அவரது அணியினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பார்த்தால் 35 வயதான ரபெல் நடால் மே 22-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பாக களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...ஐ.பி.எல்.அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் பலம் வாய்ந்த அணி- ஷேன் வாட்சன் கருத்து
Next Story






