என் மலர்
விளையாட்டு
2-வது போட்டியில் சுங்க இலாகா செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் மோதின. இதில் சுங்க இலாகா 25-20, 25-18, 25-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை:
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ஆச்சி மற்றும் ரோமா குரூப் ஆதரவுடன் ‘ஏ’ டிவிஷன் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கி டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அணிகள் மோதின. இதில் இந்தியன் வங்கி 25-14, 25-22, 28-26 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் சுங்க இலாகா செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் மோதின. இதில் சுங்க இலாகா 25-20, 25-18, 25-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இது சுங்க இலாகா பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீசிடம் தோற்று இருந்தது.
செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி.யிடம் தோற்றது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஐ.ஓ.பி.- டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, தமிழ்நாடு போலீஸ் -லயோலா, இந்தியன் வங்கி- எஸ்.ஆர்.எம். அணிகள் மோதுகின்றன.
இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா ஐ.பி. எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக உள்ளார்.
மும்பை:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் 10 அணிகள் விளையாடுகின்றன.
கொரோனா காரணமாக ‘லீக்’ போட்டிகள் அனைத்தும் மராட்டிய மாநிலத்தில் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மற்றும் புனே எம்.சி.ஏ. மைதானம் ஆகிய 4 ஸ்டேடியங்களில் போட்டி நடக்கிறது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர் என்று இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா தெரிவித்துள்ளார்.
44 வயதான அவர் ஐ.பி. எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக உள்ளார்.
அவர் தனது அணியின் கேப்டன் சாம்சனை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக சங்ககரா கூறியதாவது:-
சஞ்சு சாம்சன் சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் 20 ஓவர் போட்டிக்கு சிறந்த வீரர் ஆவார்.

பதவியில் மேம்பட்டு வருகிறார். அவர் ஒரு அற்புதமான வீரர். அபாரமான பேட்ஸ்மேன். எதிர் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர். மேட்ச் வின்னர் ஆவார். ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேனுக்கு உரிய அனைத்து திறமைகளும் அவரிடம் இருக்கிறது. அவர் ஒரு கேப்டனாக தனக்கு இன்னும் எல்லாம் தெரியாது என்று ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறார்.
இயற்கையாகவே சாம்சனுக்கு தலைமைக்கான குணங்கள் இருக்கின்றன. அவர் சிறந்த கேப்டனாக ஜொலிப்பார்,
ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பே சங்ககரா தனது அணியின் கேப்டனை வெகுவாக பாராட்டி உள்ளார்.
அறிமுக ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 29-ந் தேதி எதிர்கொள்கிறது.
இதையும் படியுங்கள்...சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து லக்சயா சென் விலகல்
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லேனிங் சதம் அடித்தார். 97-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 15-வது செஞ்சூரியாகும்.
வெல்லிங்டன்:
மகளிர் உலக கோப்பையில் வெல்லிங்டனில் இன்று நடந்த ஆட்டத்தில் 6 முறை சாம்பியான ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. லவுரா வால்வோ 90 ரன்னும், கேப்டன் சுனே லுசஸ் 52 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லேனிங் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 97-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 15-வது செஞ்சூரியாகும். மேக் லேனிங் 130 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 135 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்...நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி: பக்ரைன்-இந்திய அணிகள் நாளை மோதல்
22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசத்தை எதிர் கொண்டுள்ளது.
ஹாமில்டன்:
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும்
இந்நிலையில், ஹாமில்டன் நகரில் இன்று காலை நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீராங்கனைகளாக மந்தனா மற்றும் சஃபாலி வர்மா களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. மந்தனா 30 ரன்கள் எடுத்து கேட்ச் என்ற முறையிலும் வர்மா 42 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் என்ற முறையிலும் வெளியேறினர். அடுத்ததாக மிதாலி ராஜ் வந்த முதல் பந்திலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இதனையடுத்து யாஷியா பாட்டியா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தியது. ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்ததாக ரிச்சா கோஷ் 26 வெளியேறினார். ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யாஷிகா பாட்டியா அரை சதம் அடித்து அவுட் ஆனார். ரானா 27 ரன்னில் கேட்ச் முறையில் அவுட் ஆகி வெளியேறினார். பூஜா வஸ்த்ரகர் 30 ரன்னிலும் கோசுவாமி 2 ரன்னிலும் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. வங்களாதேசம் தரப்பில் ரிட்டு மோனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்களாதேசம் அணி விளையாடி வருகிறது.
இந்திய கால்பந்து அணி 26ம் தேதி பெலாரஸ் அணியை எதிர் கொள்கிறது.
புதுடெல்லி:
2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஜூன் மாதம்
தொடங்குகின்றன.
இதில் பங்கேற்பதற்கு பயிற்சி பெறும் வகையில், பக்ரைன், மற்றும் பெலாரஸ் கால்பந்து அணிகளுடன் இந்திய அணி நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடுகிறது.
பக்ரைன் தலைநகர் மனமாவில் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி பக்ரைன் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 26-ந் தேதி நடைபெறும் போட்டியில் பெலாரஸ் அணியுடன் இந்தியா விளையாடுகிறது. இரண்டு போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும்.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் 25 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 7 வீரர்கள் இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்திருப்பவர்கள். பிராப்சுகான் கில், ஹோர்மிபாம் ரிவாக், அன்வர் அலி, ரோஷன் சிங், சுஹைர், டானிஷ் பாரூக், அன்கெட் யாதவ் ஆகியோர் புதுமுக வீரர்களாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஓய்வுக்கு பின்னர் கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் சென் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் அந்நாட்டின் பாசெல் நகரில் இன்று முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்.எஸ்.பிரனாய், காஷ்யப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆகார்ஷி காஷ்யப், ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடியும் கலந்து கொள்கிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் விலகி உள்ளார்.
ஜெர்மன் ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்றதால், உடல் சோர்வு காரணமாக சுவிஸ் ஓபனில் விளையாடவில்லை என இந்திய பேட்மிண்டன் சங்கத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் மீண்டும் பெங்களூரு வந்து 7 முதல் 10 நாட்கள் வரை ஓய்வெடுத்து, கொரிய ஓபன் தொடரில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அரை சதமடித்தனர்.
லாகூர்:
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ராவல்பிண்டி, கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். வார்னர் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
உஸ்மான் கவாஜா பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய லபுசேன் டக் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 26 ரன்னில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்து, 59 ரன்னில் வெளியேறினார்.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய 5 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. கிரீன் 20 ரன்னும், அலெக்ஸ் கேரி 8 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் அப்ரிடி தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பெற்ற லக்சயா சென்னுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் விக்டர் ஆக்சல்சென்னை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு 2வது இடம் கிடைத்தது.
இந்நிலையில், லக்சயா சென்னுக்கு பாராட்டு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு மிக அருகில் வந்து தவற்விட்டுள்ளார். வருங்காலத்தில் சிறப்பான வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...சென்னையில் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமரா
மகளிர் உலக கோப்பை தொடரில் 13 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாமில்டன்:
மகளிர் உலக கோப்பை தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கீடு காரணமாக போட்டி 20 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டாட்டின் 21 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் நீடா தர் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை முனீபா அலி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ரபேல் நடால் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. நேற்று நள்ளிரவு நடந்த இறுதிப்போட்டியில் 4-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்)- டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) மோதினார்கள்.
இதில் யாருமே எதிர்பார்க் காத வகையில் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார். 20-வது வரிசையில் உள்ள பிரிட்ஸ் 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார். இந்த ஆண்டில் நடால் சந்தத்த முதல் தோல்வியாகும்.
அவர் அரை இறுதியில் சக நாட்டை சேர்ந்த அல்காரசை 3 மணி நேரத்துக்கு மேலாக போராடிதான் வென்று இருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் போராட முடியாமல் நேர் செட்டிலேயே அவர் வீழ்ந்தார்.
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்திருந்தது
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ் டவுன் நகரில் நடைபெற்றது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 507 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 411 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.
இதையடுத்து தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 2வது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 65 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
பெனால்டி ஷூட்-அவுட் முறையில் கேரளாவை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
கோவா:
கோவாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஐதராபாத் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடவில்லை. 2வது பாதியில் கேரள வீரர் ராகுல் 68-வது நிமிடத்திலும், ஐதராபாத் வீரர் சஹில் தவோரா 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆ,ட்டம் சமனில் முடிந்தது. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்து முதல்முறையாக ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 18 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்த ஐதராபாத் வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ விருது வழங்கப்பட்டது.






