என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சதம் அடித்த ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லேனிங்
    X
    சதம் அடித்த ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லேனிங்

    ஆஸ்திரேலிய அணிக்கு 6-வது வெற்றி: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

    தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லேனிங் சதம் அடித்தார். 97-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 15-வது செஞ்சூரியாகும்.
    வெல்லிங்டன்:

    மகளிர் உலக கோப்பையில் வெல்லிங்டனில் இன்று நடந்த ஆட்டத்தில் 6 முறை சாம்பியான ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. லவுரா வால்வோ 90 ரன்னும், கேப்டன் சுனே லுசஸ் 52 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லேனிங் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 97-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 15-வது செஞ்சூரியாகும். மேக் லேனிங் 130 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 135 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலிய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.

    Next Story
    ×