search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CWC"

    • ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
    • தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கேவும் பல உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காணொலி மூலம் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.
    • கட்சித் தலைவர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்த பரபரப்பான சூழலில் நாளை மாலை காங்கிரஸ் தேசிய காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்ற விபரம் வெளியாகாத நிலையில், அங்கிருந்தபடி காணொலி மூலம் கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. சோனியாகாந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சென்றுள்ள நிலையில் அவர்களும் நாளைய கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அந்த கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக உள்ள நிலையில், நாளை நடைபெறும் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்தனர்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை 11 இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. 

    இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

    இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்துடன் 10 நாட்டு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் சந்தித்தனர். அவர்கள் ராணியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பல்ல என்றும், அனைவருமே பொறுப்பு என்றும் அசோக் சவான் கூறியுள்ளார்.
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்தது. தோல்விக்கான காரணம் குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த தோல்வி ராகுல் காந்தியின் தலைமைக்கு கிடைத்த தோல்வி என பலரும் கூறி வருகின்றனர். இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக முன்வந்ததாகவும் தகவல் பரவியது. ஆனால், அதனை கட்சி மறுத்துள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்ரடி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அசோக் சவான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு தேர்தல் பணியாற்றிய அனைவருமே பொறுப்பு. தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு அல்ல.



    தேர்தல் பிரசாரம் என்பது கூட்டுப்பொறுப்பு. ராகுல் காந்தி கடுமையாக தேர்தல் பணி செய்தார். பிரசாரத்தை முன்னால் இருந்து வழிநடத்தினார். மாநில காங்கிரஸ் கமிட்டிகளில் உயர் பொறுப்பு வகிக்கும் தலைவர்கள் பதவி விலக வேண்டும். புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டும். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று நானும் எனது குழுவும்கூட பதவி விலக தயாராக இருக்கிறோம்.

    கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் நம்பிக்கையுடன் களப்பணியாற்றினோம். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அசோக் சவான் நான்டட் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதாப் சிக்லிகரிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
    காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது,  ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், காரிய கமிட்டி இதனை ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மறுத்து விளக்கம் அளித்தார்.


    இதற்கிடையே காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் தோல்வி, எதிர்கால திட்டங்கள் மற்றும் கட்சி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என்றும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு வழங்குவது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
    தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி விரும்பியதாக வெளியான தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.

    இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், காங்கிரஸ் கமிட்டி இதனை ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது.


    ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை  என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
    பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூடும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.  தமிழகம், கேரளா தவிர காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை கூடுகிறது என அக்கட்சி அறிவித்துள்ளது.

    இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது என குஜராத்தில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #CongressWorkingCommittee #CWCMeeting
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு சோனியா, மன்மோகன்சிங், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு காரிய கமிட்டி கூட்டம் தொடங்கப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட், நாராயணசாமி, சித்தராமையா, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். 



    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தேசத்தின் பாதுகாப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

    தேசப் பாதுகாப்பு பிரச்னையில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடி, அதை ஏற்காமல் பிரச்னையை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு ஏற்பட்டுள்ள மகத்தான தோல்விகளில் இருந்தும், போலியான கூற்றுக்களை மறைக்கும் வகையிலும், தொடர்ந்து பொய்களை கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார்.

    இந்தியா ஜனநாயகத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்ட நாடு. நமது ராணுவ படையால் நாம் பெருமிதம் கொள்வோம். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் நமது ராணுவம் எப்போதும் தோற்கடிக்கப்பட கூடாது என்பதே நமது எண்ணம்.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. பெண்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலை உள்ளதை இந்த கமிட்டி கண்டிக்கிறது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேறின. #CongressWorkingCommittee #CWCMeeting
    ×