search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AICC"

    • ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
    • தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கேவும் பல உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காங்கிரஸ் உட்கட்சி பூசலை நிறைவுக்கு கொண்டு வந்து வெற்றி கண்டார், சுனில்
    • இருமுனை போட்டி மட்டுமே இருக்கும் வகையில் களத்தை தெளிவாக்கினார்

    தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற ஆலோசனைகளை கூறி, வியூகம் அமைத்து தரும் பணியை தனியார் அமைப்புகள் செய்து வருவதை கடந்த சில வருடங்களாகவே இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.

    இதில் பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகொலு ஆகியோர் பிரபலமானவர்கள்.

    கடந்த வருடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார் சுனில் கனுகொலு (Sunil Kanugolu). கடந்த மே மாதம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வியூகம் அமைத்து அதன் வெற்றிக்கு வழி வகுத்தார்.

    இதை தொடர்ந்து சுனில், தெலுங்கானாவில் கவனம் செலுத்தினார்.

    தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி) கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியிருந்தது.

    காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையின்றி பல தலைவர்களின் கீழ் பல குழுக்கள் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன. முதல் வேலையாக கட்சிக்குள் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என கட்சி தலைமையிடம் எடுத்து கூறி அந்த முயற்சியில் வெற்றி கண்டார் சுனில்.

    சுனிலை முடக்கும் வகையில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும், அப்போதைய முதல்வருமான கே.சி.ஆர்., சுனிலை காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கினார். சுனிலின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரது அலுவலக பொருட்கள் காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டது.

    ஆனால், இதில் அச்சமடையாத சுனில், புதிய அலுவலகம் ஒன்றை அமைத்து மீண்டும் மன உறுதியுடன் காங்கிரஸ் வெற்றி பெற செயல்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்க கூடிய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், தன்னை எங்குமே முன்னிறுத்தி கொள்ள விரும்பாதவரான சுனில், ஊடகங்களை அறவே தவிர்ப்பவர்.

    பா.ஜ.க.விற்கு செல்ல கூடிய வாக்குகளால் கே.சி.ஆர். மீண்டும் பதவியில் அமர முடியும் என முதலிலேயே கணித்து அதை தகர்க்க துல்லியமாக திட்டமிட்டார். தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் தாக்கத்தை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பிரசாரத்திற்கும் திட்டமிட்டு தந்தார்.

    தன்னை கைது செய்ய உத்தரவிட்டிருந்த கே.சி.ஆர். மீது கோபத்தில் இருந்த ஒய்.எஸ்.ஆர். மகள் ஒய்.எஸ். ஷர்மிளா தேர்தலில் போட்டியிடாமல் நின்றால் ஓட்டு பிரிவை தடுக்க முடியும் என புரிய வைத்து அந்த முயற்சியில் வெற்றி பெற்றார்.

    அதே போன்று தெலுகு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தலில் நிற்பதையும் சாதுர்யமாக பேச்சு நடத்தி தடுத்தார்.


    இதனால், 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். என் இருமுனை போட்டி மட்டுமே நடைபெறும் வகையில் களத்தை தெளிவாக்கினார்.

    சுனில் கனுகொலு கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியின் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். சென்னையில் வளர்ந்தவரான சுனில் அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்.

    நிர்வாக மேலாண்மை ஆலோசனைக்கான புகழ் பெற்ற மெக்கின்சே (McKinsey) நிறுவனத்தில் பணியாற்றியவர்.

    இந்தியா திரும்பிய சுனில் அசோசியேஷன் ஆஃப் பில்லியன் மைண்ட்ஸ் (ABM) எனும் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் வகுத்து தரும் நிறுவனத்தை தொடங்கி பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டவர்.

    கல்வகுன்ட்லா சந்திரசேகர் ராவ் (KCR) வகுத்த வியூகங்கள், கனுகொலு சுனில் வியூகங்கள் முன் எடுபடாமல் தோற்றதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ×