என் மலர்

  செய்திகள்

  மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது - காங்கிரஸ் தீர்மானம்
  X

  மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது - காங்கிரஸ் தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது என குஜராத்தில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #CongressWorkingCommittee #CWCMeeting
  அகமதாபாத்:

  பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு சோனியா, மன்மோகன்சிங், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

  மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு காரிய கமிட்டி கூட்டம் தொடங்கப்பட்டது. 

  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட், நாராயணசாமி, சித்தராமையா, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.   இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  தேசத்தின் பாதுகாப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

  தேசப் பாதுகாப்பு பிரச்னையில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடி, அதை ஏற்காமல் பிரச்னையை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு ஏற்பட்டுள்ள மகத்தான தோல்விகளில் இருந்தும், போலியான கூற்றுக்களை மறைக்கும் வகையிலும், தொடர்ந்து பொய்களை கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார்.

  இந்தியா ஜனநாயகத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்ட நாடு. நமது ராணுவ படையால் நாம் பெருமிதம் கொள்வோம். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் நமது ராணுவம் எப்போதும் தோற்கடிக்கப்பட கூடாது என்பதே நமது எண்ணம்.

  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. பெண்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலை உள்ளதை இந்த கமிட்டி கண்டிக்கிறது.

  மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேறின. #CongressWorkingCommittee #CWCMeeting
  Next Story
  ×