என் மலர்
விளையாட்டு

கோப்பு படம்
வங்காளதேசம் அணிக்கு 230 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி
22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசத்தை எதிர் கொண்டுள்ளது.
ஹாமில்டன்:
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும்
இந்நிலையில், ஹாமில்டன் நகரில் இன்று காலை நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீராங்கனைகளாக மந்தனா மற்றும் சஃபாலி வர்மா களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. மந்தனா 30 ரன்கள் எடுத்து கேட்ச் என்ற முறையிலும் வர்மா 42 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் என்ற முறையிலும் வெளியேறினர். அடுத்ததாக மிதாலி ராஜ் வந்த முதல் பந்திலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இதனையடுத்து யாஷியா பாட்டியா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தியது. ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்ததாக ரிச்சா கோஷ் 26 வெளியேறினார். ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யாஷிகா பாட்டியா அரை சதம் அடித்து அவுட் ஆனார். ரானா 27 ரன்னில் கேட்ச் முறையில் அவுட் ஆகி வெளியேறினார். பூஜா வஸ்த்ரகர் 30 ரன்னிலும் கோசுவாமி 2 ரன்னிலும் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. வங்களாதேசம் தரப்பில் ரிட்டு மோனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்களாதேசம் அணி விளையாடி வருகிறது.
Next Story






