என் மலர்
விளையாட்டு
இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை பேட்மிண்டன் உலகின் நம்பர்-1 வீரர், விக்டர் ஆக்சல்சென் வென்றுள்ளார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், உலகின் நம்பர்-1 பேட்மிண்டன் வீரரான டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்சல்சென்னை எதிர்கொண்டார்.
இதில் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்சயா சென்னும் இரண்டாவது இடம் கிடைத்தது.
இதற்கு முன்பு பிரகாஷ் படுகோனே, கோபிசந்த் இருவரும் ஆல் இங்கிலாந்து போட்டியில் பட்டம் வென்றுள்ளனர். சாய்னா நேவால் 2015ல் இறுதிப்போட்டி வரை முன்னேறி, இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
இன்றைய ஆட்டத்திலும் ஷூட் அவுட் முறை வரலாம் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நிமிடத்தில் மன்தீப் சிங் அபாரமாக கோல் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார்.
புவனேஸ்வர்:
புரோ ஹாக்கி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியுடன் விளையாடியது. நேற்று நடந்த போட்டியில், ஷூட் அவுட் முறையில் இந்தியா 1-3 என்ற கோல்கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் வெற்றி பெறும் முனைப்பில் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அர்ஜென்டினா வீரர்களும் கடும் சவால் அளித்தனர்.
முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா சுதாரித்தது. 56வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்ட்டின் பீல்டு கோல் அடிக்க, இரண்டு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஷூட் அவுட் முறை வரலாம் என்ற நிலை இருந்தது. அனால் கடைசி நிமிடத்தில் மன்தீப் சிங் அபாரமாக கோல் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்தியா சார்பில் ஜக்ராஜ் 20 மற்றும் 52வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் கோல் அடித்தார். ஹர்திக் சிங் 17வது நிமிடத்தில் கோல் அடித்தார். போட்டி முடிய 26 வினாடிகள் இருந்தபோது மன்தீப் சிங் வெற்றி கோலை பதிவு செய்ய, இந்தியா 4-3 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 16 புள்ளிகளுடன், 2ம் இடத்தில் நீடிக்கிறது. நெதர்லாந்து அணி முதலிடத்தில் உள்ளது. அர்ஜென்டினா அணி 4ம் இடத்தில் உள்ளது.
அடுத்து இந்திய அணி, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய நாட்களில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறது.
இங்கிலாக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் 160 ரன் குவித்தார்.
பிரிட்ஜ் டவுன்:
வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ் டவுனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 507 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் ஆட் டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் பிராத்வெயிட் , பிளாக்வுட் சதம் அடித்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 219 ரன்கள் பின்தங்கி, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. அந்த அணி 187.5 ஓவர்களில் 411 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 96 ரன் குறைவாகும்.
கேப்டன் பிராத்வெயிட் 160 எடுத்து ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஷகீப் மக்மூது தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
96 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்து இருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து 136 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது. எனவே, முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டும் டிராவில் முடிய அதிகமான வாய்ப்பு உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆக்லாந்து:
12-வது உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் ‘லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்
இத்தொடரின் 19-வது லீக் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடந்தது. இதில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதின.’டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 203 ரன்னில் சுருண்டது. மேடி கிரீன் அதிகபட்சமாக 52 ரன்னும் (அவுட் இல்லை), கேப்டன் ஷோபின் டெவின் 41 ரன்னும் எடுத்தனர். காதே கிராஸ், ஜோபின் தலா 3 விக்கெட்டும், ஷார்லின் டீன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து விளையாடியது. அந்த அணி 106 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை (26.4 ஓவர்) இழந்தது. கேப்டன் ஹெதர் நைட் 42 ரன்னில் அவுட் ஆனார். இதனால் போட்டி நியூசிலாந்து பக்கம் திரும்பியது. எனினும், சிறப்பாக விளையாடிய சோபியா 33 ரன்களும், நாட் சிவர் 61 ரன்களும் சேர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 47.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்னை எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். நியூசிலாந்துக்கு 4-வது தோல்வி ஏற்பட்டது. போட்டியின் சிறந்த வீராங்கனையாக நாட் சிவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுவரை 19 லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஆஸ்திரேலியா தான் மோதிய 5 ஆட்டத்திலும் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. தென் ஆப்பிரிக்கா 8 புள்ளியும் வெஸ்ட் இண்டீஸ், 6 புள்ளியும், இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து தலா 4 புள்ளிகளும், வங்காளதேசம் 2 புள்ளியுடனும் உள்ளன. பாகிஸ்தான் இதுவரை மோதிய 4 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது.
ஆக்லாந்து:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒருமுறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு தகுதிபெறும்.
ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்று வரும் 19 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.
48.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 203 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீராங்கனை மேடி கிரீன் 52 ரன்கள் அடித்தார். இதையடுத்து 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாட உள்ளது.
16 சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ரெய்னாவின் பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தது.
புதுடெல்லி:
2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் ரெய்னா இடம் பெற்றிருந்தார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ள ரெய்னா, ஐ.பி.எல்.ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான மாலத்தீவுகள் ஸ்போர்ட்ஸ் அவார்ட்ஸ் பிரிவின் கீழ், ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது அந்நாட்டு அரசால் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டது.
பிரேசில் கால்பந்து வீரர் ராபர்டோ கார்லோஸ், ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் அசஃபா பவல், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா உட்பட 16 சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ரெய்னா இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் அல்-காதி பத்ர் அப்துல் ரஹ்மான், மாலத்தீவு டென்னிஸ் சங்கத்தின் கெளரவத் தலைவர் அகமது நசீர், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 136 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது.
பிரிட்ஜ்டவுன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆன்டிகுவாவில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. பிரிட்ஜ் டவுனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.
3ம் நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பிராத்வெயிட் மற்றும் ஜெர்மைன் பிளாக்வுட் ஆகியோரின் சதம் அடித்தனர். நான்காம் நாள் ஆட்டத்தில் கேப்டன் பிராத்வெயிட் 160 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 411 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 136 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது.
தோகாவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் பங்கஜ் அத்வானி, சக வீரரான துருவ் சித்வாலாவை தோற்கடித்தார்.
தோகா:
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற 19வது ஆசிய பில்லியட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி பில்லியர்ட்ஸ் வீரரான பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அவர் இந்தியாவின் மற்றொரு வீரரான துருவ் சித்வாலாவை தோற்கடித்தார்.
இதன்மூலம் 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி. இதுவரை சர்வதேச அளவிலான போட்டிகளில் 40 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆட்ட நேர முடிவின்போது இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்ததால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
புவனேஸ்வர்:
புரோ ஹாக்கி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியுடன் விளையாடியது. புவனேஸ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன.
இந்திய அணி தரப்பில் குர்ஜந்த் சிங் (38வது நிமிடம்), மன்தீப் சிங் (60வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்திருந்தனர். அர்ஜென்டினா தரப்பில் 45வது நிமிடத்தில் நிகோலஸ் அகோஸ்டா, 52வது நிமிடத்தில் நிகோலஸ் கீனன் கோல் அடித்தனர்.
ஆட்ட நேர முடிவின்போது 2-2 என சமநிலையில் இருந்ததால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில் இந்தியா 1-3 என தோல்வியடைந்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இந்த போட்டியின் வெற்றியால் போனஸ் புள்ளியுடன், மொத்தம் 11 புள்ளிகளுடன் அர்ஜென்டினா 4வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி 13 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் மீண்டும் இரு அணிகளும் மோத உள்ளன.
ஆல் இங்கிலாந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் (வயது 20), தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துவருகிறார்.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், நடப்பு சாம்பியனான லீக் ஜி ஜியாவுடன் (மலேசியா) மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை லக்சயா சென் 21-13 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் பதிலடி கொடுத்த மலேசிய வீரர், அந்த செட்டை 21-12 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை உறுதி செய்யும் மூன்றாம் செட் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இறுதியில் லக்சயா சென் 21-19 என அந்த செட்டை கைப்பற்றி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன்மூலம் ஆல் இங்கிலாந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றார்.
இதற்கு முன்பு பிரகாஷ் படுகோனே, கோபிசந்த் இருவரும் ஆல் இங்கிலாந்து போட்டியில் பட்டம் வென்றுள்ளனர். சாய்னா நேவால் 2015ல் இறுதிப்போட்டி வரை முன்னேறி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா கடந்த வருடம் ஜனவரி மாதம் பொறுப்பு ஏற்ற நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு அவரது பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு ஜெனரல் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பதவியை ஏற்றிருந்தார். அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வாா ஜெய் ஷா பெயரை முன்மொழிய ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
என்மீது நம்பிக்கை வைத்து மீண்டும் இந்த பதவிக்கு தேர்வு செய்ததற்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துவார்: அஸ்வினை பாராட்டிய பாகிஸ்தான் வீரர்
மெக் லேனிங் 107 பந்தில் 97 ரன்கள் விளாச, இலக்கை 49.3 ஓவரில் எட்டி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதன்மூலம் ஐந்து போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா முறையே 10, 12 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால், அதன்பின் வந்த யாஸ்டிகா பாடியா (59), மிதாலி ராஜ் (68), ஹர்மன்ப்ரீத் கவுர் (57) ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர். ஆஸ்திரேலியா அணி சார்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹெய்ன்ஸ் (43), அலிசா ஹீலி (72) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்து வந்த கேப்டன் லேனிங் 97 ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா விளையாடி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி






