என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
    ஆக்லாந்து:

    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    இந்நிலையில் ஆக்லாந்து நகரில் இன்று காலை தொடங்கி உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டுள்ளது.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி  விளையாடி வருகிறது. 
    கால்இறுதி ஆட்டங்களில் நடால்-நிக் கைர்ஜியோஸ்சையும், அல்காரஸ்-நோரியையும் தோற்கடித்தனர்.
    இண்டியன்வெல்ஸ்:

    பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. 

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-0) 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்சை போராடி வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 46 நிமிடம் நீடித்தது. 

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை தோற்கடித்தார். 

    இதையடுத்து அரை இறுதி போட்டியில் நடால்-அல்காரஸ் மோதுகின்றனர். 

    உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்களைப் பார்த்து தாமும் தமது குடும்பத்தினரும் மனம் உடைந்துள்ளோம் என ஃபெடரர் குறிப்பிட்டுள்ளார்.
    சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவீஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக  போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். 

    இந்நிலையில் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 
    5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். 

    ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்களைப் பார்த்து தாமும், தனது குடும்பத்தினரும் திகிலடைகிறோம், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக மனம் வருந்துகிறோம் என்று ட்விட்டரில், ஃபெடரர்  தெரிவித்துள்ளார்.

    உக்ரைனில் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு நாங்கள் உதவி வழங்குவோம், சுமார் 6 மில்லியன் உக்ரேனிய குழந்தைகள் தற்போது பள்ளி கல்வியை இழந்துள்ளனர். இதனால் கல்விக்கான அணுகலை வழங்க இது மிகவும் முக்கியமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம் என்றும் ரோஜர் ஃபெடரர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னாள் உலக நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும்,யுனிசெஃப் அமைப்பின் இங்கிலாந்து தூதரான ஆண்டி முர்ரே, 2022 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் வென்ற தமது பரிசுத் தொகை முழுவதையும் ரஷிய படையெடுப்பால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்குவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முதலில் விளையாடிய வங்காளதேச அணி 314 ரன்கள் குவித்திருந்தது.
    செஞ்சூரியன்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில்  சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.

    இந்நிலையில், இரு அணிகளும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

    இதையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணியினர் அதிரடியாக விளையாடினர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 77 ரன்கள் குவித்தார். லிட்டன் தாஸ், யாசீர் அலி ஆகியோர் அரை சதம் அடித்தனர். 

    பின்னர் 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. 48.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    அதிக பட்சமாக, ரஸ்ஸி வான் டெர்டஸ்ஸன் 86 ரன்களும், டேவிட் மில்லர் 79 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேறினர். இதையடுத்து வங்காள தேச அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்த போட்டிகளில் பங்கேற்க ரயில்வே விளையாட்டுக்கள் வாரியம் வலுவான அணியை அனுப்பியுள்ளது.
    புவனேஸ்வர்:

    2021-22 ஆண்டுக்கான சீனியர் தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நாளை தொடங்கி 31ம் தேதிவரை நடைபெறுகின்றன.

    பலவேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில், இந்திய ரயில்வேயின் விளையாட்டுக்கள் பிரிவான ரயில்வே விளையாட்டுக்கள் வாரியம் வலுவான அணியை அனுப்புகிறது.

    2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற
    எஸ்.மீராபாய் சானு, சத்தீஷ் சிவலி்ங்கம், ரேணுபாலா, சஞ்ஜிதா சானு மற்றும் அர்ஜுனா விருது வென்ற பல பளுதூக்கும் வீரர்கள் ரயில்வே அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய ரயில்வேயின் ஆடவர் அணி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ரயில்வே மகளிர் அணி கடந்த இரண்டு தேசிய சாம்பியன் பட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  

    நடப்பு போட்டிகளிலும் ரயில்வே அணிகள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ரெட்டி ஜோடி, இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் தொடர்ந்து முன்னேறிவருகிறார்.

    நேற்று உலகின் மூன்றாம் தரநிலை வீரரான ஆன்டன் ஆண்டர்சனை 21-16, 21-18 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்திய லக்சயா சென், காலிறுதியை உறுதி செய்தார். இன்று காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லு குவாங்குடன் லக்சயா சென் மோதுவதாக இருந்தது. ஆனால், சீன வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் லக்சயா சென் போட்டியின்றி அரையிறுதிக்கு முன்னேறினார். 

    மற்றொரு காலிறுதியில் மலேசியாவின் லீ ஜி ஜியா- ஜப்பானின் கென்டோ மொமோட்டா ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீரருடன், அரையிறுதியில் லக்சயா சென் மோதுவார். 

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ரெட்டி ஜோடி இந்தோனேசிய ஜோடியிடம் 22-24, 17-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தது. 
    ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.5 கோடி செலுத்தி மார்க் வுட்டை வாங்கியது.
    புதுடெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் பங்கேற்க உளள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். 

    இங்கிலாந்தைச் சேர்ந்த மார்க் வுட், கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என இஎஸ்பிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.5 கோடி செலுத்தி மார்க் வுட்டை வாங்கியது. தற்போது அவர் காயத்தால் விலகியது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக உள்ளார். ஆண்டி பிளவர் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆறு பந்துகளில் 8 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கடைசி விக்கெட்டை இழந்து வங்காளதேசம் 4 ரன்களில் தோல்வியை தழுவியது.
    நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 17-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களே அடிக்க முடிந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஷெமைன் கேம்ப்பெல் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். பின்னர் 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் வீராங்கனைகள் களம் இறங்கினர்.

    வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளில் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச வீராங்கனைகள் ரன்கள் குவிக்க திணறினர். என்றாலும் குறைந்த இலக்கு என்பதால் பர்கனா ஹோக் (25), நிகர் சுல்தானா (25), சல்மா கதுன் (23) ஆகியோர் குறிப்பிடத்தகுந்த அளவில் ரன்கள் சேர்க்க இலக்கை நோக்கி வங்காளதேசம் சென்றது.

    நஹிதா அக்தர்

    என்றாலும் சீரான இடைவெளியல் விக்கெட்டை இழந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. நஹிதா அக்தர் வெற்றிக்காக போராட வங்காளதேச அணி 49 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் 2 ரன்களும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் அடித்தார் நஹிதா. கடைசி நான்கு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தை எதிர்கொண்ட பரிஹா த்ரிஸ்னா க்ளீன் போல்டாக வங்காளதேசம் 49.3 ஓவரில் 136 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காளதேசம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நஹிதா அக்தர் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடியது வீணானது.
    வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஷெமைன் கேம்ப்பெல் 53 ரன்கள் அடித்தார்.
    மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணு நகரில் இன்று நடைபெறும் 17-ஆவது லீக் போட்டியில் வங்களாதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகின்றன.

    இதில் டாஸ் வென்ற வங்காளதேச மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கி விளையாடியது. 

    50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக அந்த அணி வீராங்கனை ஷெமைன் கேம்ப்பெல் 53 ரன்கள் அடித்தார். 

    மற்றொரு வீராங்கனை ஷார்லின் பிளெட்சர் 17 ரன்கள்  எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒன்றை இலக்க ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.  
    அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், 128 பந்துகளில் 120 ரன்களை அடித்தார்.
    பிரிட்ஜ்டவுன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 

    ஆன்டிகுவாவில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. பிரிட்ஜ் டவுனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    அந்த அணி கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 153 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ் 91 ரன்கள் அடித்தார்.

    5 ஆம் பேட்ஸ்மேனாக களமிறக்கிய பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 11 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடித்தார். 128 பந்துகளில் 120 ரன்களை குவித்த நிலையில் அவர், பிராத்வெயிட் பந்துவீச்சில் அவுட்டானார். 

    இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. அந்த இங்கிலாந்தை விட 436 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.
    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து,  ஜப்பான் வீராங்கனை சயாகா தகஹாஷியை எதிர்கொண்டார் 

    பரபரப்பான நடைபெற்ற  இந்த ஆட்டத்தில்  19-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.

    முன்னதாக மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியிடம் 14-21, 21-17, 17-21 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
    காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் வீரர் நிக் கா லாங் ஆங்கஸ் அல்லது சீனாவின் லு குவாங்குடன் லக்சயா சென் மோதுவார்.
    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் தொடர்ந்து முன்னேறி வருகிறார். 

    உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த லக்சயா சென் (வயது 20), கடந்த ஜனவரி மாதம் இந்தியா ஓபன் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல்முறையாக சூப்பர்-500  சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த வாரம் ஜெர்மன் ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் உலகின் மூன்றாம் தரநிலை வீரரான ஆன்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொண்ட லக்சயா சென், 21-16, 21-18 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தார். காலிறுதியில் ஹாங்காங் வீரர் நிக் கா லாங் ஆங்கஸ் அல்லது சீனாவின் லு குவாங்குடன் லக்சயா சென் மோதுவார். 

    முன்னதாக இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியிடம் 14-21 21-17 17-21 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
    ×