என் மலர்
விளையாட்டு

தேசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி
தேசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி- புவனேஸ்வரில் நாளை தொடக்கம்
இந்த போட்டிகளில் பங்கேற்க ரயில்வே விளையாட்டுக்கள் வாரியம் வலுவான அணியை அனுப்பியுள்ளது.
புவனேஸ்வர்:
2021-22 ஆண்டுக்கான சீனியர் தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நாளை தொடங்கி 31ம் தேதிவரை நடைபெறுகின்றன.
பலவேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில், இந்திய ரயில்வேயின் விளையாட்டுக்கள் பிரிவான ரயில்வே விளையாட்டுக்கள் வாரியம் வலுவான அணியை அனுப்புகிறது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற
எஸ்.மீராபாய் சானு, சத்தீஷ் சிவலி்ங்கம், ரேணுபாலா, சஞ்ஜிதா சானு மற்றும் அர்ஜுனா விருது வென்ற பல பளுதூக்கும் வீரர்கள் ரயில்வே அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய ரயில்வேயின் ஆடவர் அணி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ரயில்வே மகளிர் அணி கடந்த இரண்டு தேசிய சாம்பியன் பட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு போட்டிகளிலும் ரயில்வே அணிகள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






