என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூஸிலாந்து 203 ரன்களுக்கு ஆல்அவுட்

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது.

    ஆக்லாந்து:

    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒருமுறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு தகுதிபெறும்.

    ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்று வரும் 19 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. 

    48.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 203  ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீராங்கனை மேடி கிரீன்  52 ரன்கள் அடித்தார். இதையடுத்து 204  ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாட உள்ளது. 

    Next Story
    ×