என் மலர்
விளையாட்டு

பங்கஜ் அத்வானி
பில்லியர்ட்ஸ் போட்டி- 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி
தோகாவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் பங்கஜ் அத்வானி, சக வீரரான துருவ் சித்வாலாவை தோற்கடித்தார்.
தோகா:
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற 19வது ஆசிய பில்லியட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி பில்லியர்ட்ஸ் வீரரான பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அவர் இந்தியாவின் மற்றொரு வீரரான துருவ் சித்வாலாவை தோற்கடித்தார்.
இதன்மூலம் 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி. இதுவரை சர்வதேச அளவிலான போட்டிகளில் 40 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Next Story






