என் மலர்
விளையாட்டு
- டி-பிரிவில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது.
- ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்தியா தகுதி பெற்றது.
கொல்கத்தா:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டி பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்த தகுதி சுற்று போட்டியின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2 வது நிமிடத்தில் இந்திய அணியின் அன்வர் அலி ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து 45 வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியின் 85வது நிமிடத்தில் மண்விர் சிங்கும், 93வது நிமிடத்தில் இஷான் பண்டிதாவும் கோல் அடித்தனர்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 29 ஆண்டுகள் கழித்து கால்பந்து போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் டி-பிரிவு அணிகளில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்ததுடன் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
- இந்திய பந்து வீச்சாளர் சஹல் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார்.
இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.
வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
- அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது. ஒல்லி போப் 145 ரன்னிலும், ஜோ ரூட் 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 284 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்ன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
- இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், இஷான் கிஷன் அரை சதமடித்தனர்.
- இந்தியா பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்தியா அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
கெய்க்வாட் 30 பந்தில் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 14 ரன்னில் அவுட்டானார்.
கெய்க்வாடை தொடர்ந்து இஷான் கிஷன் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 54 ரன்னில் அவுட்டானார்.
ரிஷப் பண்ட்6 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 176 ரன்னிலும், ஒல்லி போப் 145 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து 67 ரன்னிலும், விக்கெட் கீப்பர் போக்ஸ் 56 ரன்னிலும் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வில் யங், டேவன் கான்வே, மிட்செல் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். யங் 56 ரன்னும், கான்வே 52 ரன்னும் எடுத்தனர்.
மிட்செல் இறுதிவரை போராடி 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பிராட் 3 விக்கெட், ஆண்டர்சன், மேட்டி பாட்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
- ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடத்திலும், இங்கிலாந்து 2-வது இடத்திலும் உள்ளது.
- இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
துபாய்:
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 105 ரேட்டிங் உடன் 5-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி 6-வது இடத்தில் நீடிக்கிறது. வங்காளதேசம், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- ஓய்வு பெற்றவர்களில் 75% பேருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளோம்.
- இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் செலுத்திய சேவைக்கு இதன் மூலமாக நன்றி தெரிவிக்கப்படுகிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் வீரர்களின் பணத்தேவையைக் கவனித்துக்கொள்வதும், வீரர்களின் கிரிக்கெட் காலம் முடிந்த பிறகும் அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டியதும் பிசிசிஐயின் கடைமை. நடுவர்கள் - பாராட்டப்படாத நாயகர்களின் பங்களிப்பை உணர்ந்து ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களில் 75% பேருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளோம். இதன்மூலம் 900 பேர் பலனடைவார்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் செலுத்திய சேவைக்கு இதன் மூலமாக நன்றி தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4X400 மீட்டர் ஒற்றையர் ஆட்டத்தில் சுபா, மோகன்குமார், ஸ்டெபி, சரண் ஆகியோர் அடங்கிய தமிழக அணி வெண்கல பதக்கம் பெற்றது.
- நேற்றைய போட்டியில் 2 புதிய சாதனை படைக்கப்பட்டது. டிரிபுள் ஜம்ப் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றதோடு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் எஸ்.எஸ்.ஜே. நிறுவனம் ஆதரவுடன் 61-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் 3 நாள் போட்டி முடிவில் தமிழக அணி 4 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 14 பதக்கம் வென்று இருந்தது.
4-வது நாளான நேற்று தமிழகத்துக்கு 5-வது தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் கிரேசினா மெர்லி தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்தார். அவர் 1.82 மீட்டர் உயரம் தாண்டினார்.
இதேபோல தமிழக அணிக்கு மேலும் 2 வெண்கல பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான வட்டு எறியும் போட்டியில் காருண்யா முத்துராமலிங்கம் 49.24 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கம் பெற்றார்.
4X400 மீட்டர் ஒற்றையர் ஆட்டத்தில் சுபா, மோகன்குமார், ஸ்டெபி, சரண் ஆகியோர் அடங்கிய தமிழக அணி வெண்கல பதக்கம் பெற்றது. அவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடம 24.51 விநாடியில் கடந்தனர்.
தமிழக அணி இதுவரை 5 தங்கம் உள்பட 17 பதக்கம் பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் 2 புதிய சாதனை படைக்கப்பட்டது. டிரிபுள் ஜம்ப் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றதோடு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு மயூக்கா ஜானி 14.11 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. மேலும் ஐஸ்வர்யா காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆண்களுக்கான வட்டு எறியும் போட்டியில் பஞ்சாப் வீரர் கிர்பாலசிங் 60.31 மீட்டர் தூரம் எறிந்து தனது சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தனர். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு அவர் 59.74 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
- முதல் போட்டியில் மோசமான பந்துவீச்சாலும், 2-வது ஆட்டத்தில் மோசமான பேட்டிங்காலும் தோல்வி ஏற்பட்டது.
- தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.
விசாகப்பட்டினம்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. இதனால் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
முதல் போட்டியில் மோசமான பந்துவீச்சாலும், 2-வது ஆட்டத்தில் மோசமான பேட்டிங்காலும் தோல்வி ஏற்பட்டது. இதை சரி செய்து 3-வது போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்வது அவசியமாகும். கடந்த போட்டியில் சுழற்பந்து வீரர்கள் சாஹல், அக்ஷர் படேல் ரன்களை வாரிக் கொடுத்தனர். இதனால் ஒருவரை கழற்றி விட்டு ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம். வேகப்பந்து வீரர் அவேஷ் கான் இடத்தில் உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்ய வேண்டும்.
ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. கேப்டன் பொறுப்பால் ரிஷப் பண்ட் திணறி வருகிறார். ஸ்ரேயாஸ் அய்யரால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இஷான் கிஷன் ஒருவர் மட்டுமே நன்றாக விளையாடுகிறார். இதனால் முக்கியமான இந்த ஆட்டத்தில் வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும்.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் மில்லர் , வான்டர் டூசன், கிளாசன் ஆகியோரும், பந்துவீச்சில் ரபடா, நோர்க்கியா , பார்னல் ஆகி யோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேசினா மெர்லி முதலிடம் பிடித்தார்
- டிரிபிள் ஜம்ப் போட்டியில் கர்நாடகா வீராங்கனை புதிய தேசிய சாதனை
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவனம் ஆதரவுடன் 61-வது மாநிலங்கள் பங்கேற்றுள்ள தேசிய சீனியர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனை கிரேசினா மெர்லி 1.82 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி. கனிமொழி தங்கப்பதக்கம் பெற்றார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா வெண்கல பதக்கம் பெற்றார்.
ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழரசு, இலக்கியதாசன், விக்னேஷ், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கம் வென்றது.
டிரிபிள் ஜம்ப் போட்டியில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு கேரள வீராங்கனை மயூகா ஜானி 14.11 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜஸ்வர்யா நேற்று தகர்த்தார்.
வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை நவ்ஜீத் கவுர் (55.67 மீட்டர்) தங்கப்பதக்கமும், அரியானா வீராங்கனை நிதி ராணி (50.86 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை காருண்யா (49.24 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்
- நோவக் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி மெத்வதேவ் முதலிடம் பிடித்தார்.
- டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 7,950 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது இடம் பிடித்துள்ளார்.
- இங்கிலாந்தின் ஜோ ரூட், ஒல்லி போப் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தது.
- இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்தின் போல்ட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து
67 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப்145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் போக்ஸ் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.






