என் மலர்

  டென்னிஸ்

  டென்னிஸ் தரவரிசை - ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் மெத்வதேவ்
  X

  டேனில் மெத்வதேவ்

  டென்னிஸ் தரவரிசை - ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் மெத்வதேவ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நோவக் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி மெத்வதேவ் முதலிடம் பிடித்தார்.
  • டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது.

  லண்டன்:

  சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 7,950 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.

  ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.

  தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

  பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது இடம் பிடித்துள்ளார்.

  Next Story
  ×