என் மலர்
விளையாட்டு
- ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்று இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 26 மற்றும் 28-ந் தேதிகளில் இந்த போட்டிகள் நடக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடிய அவர் 413 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். முன்னணி வீரர் களுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளது.
இந்திய அணிக்கு முதல் முறையாக இடம் பெற்றுள்ள ராகுல்திரிபாதி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் எனது கனவு நனவானது. எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு இது வாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தேர்வாளர்கள் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இதை பார்க்கிறேன். எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
இவ்வாறு ராகுல் திரிபாதி கூறி உள்ளார்.
- அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ராகுல் திவாட்டியாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
- ராகுல் திவாட்டியா ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் சிறப்பான ஆல்ரவுண்டராக பணியாற்றினார்.
மும்பை:
வரும் ஜூன் 26-ஆம் தேதி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டநிலையில், இந்த தொடரில் ராகுல் திரப்பாட்டிக்கு முதல் முறையாக வாய்க்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் சிறப்பான பங்களிப்பை செய்த ஆல் ரவுண்டராக வலம் வந்த ராகுல் திவாட்டியாவிற்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவர், தற்போது இடம் கிடைக்காத ஏமாற்றத்தை ராகுல் திவாட்டியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "எதிர்பார்ப்புகள் வலியை ஏற்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
- மார்க்ரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
- இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை நடைபெற்றுள்ள 3 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியிலும் ,இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் மார்க்ரம் தொடரில் இருந்து விலகியுள்ளார் முதல் 20 ஓவர் போட்டிக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் 7 நாட்கள் தனிமைபடுத்துலில் இருந்தார்.
இதனால் 3 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்
- விராட் கோலி 3ஆம் இடத்திலும், ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.
- பந்து வீச்சாளர் தரவரிசையில் பும்ரா 5வது இடத்தில் இருக்கிறார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் இமாம் உல்ஹக், இந்திய வீரர் கோலியை பின்னுக்கு தள்ளி 815 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.
சொந்த மண்ணில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 892 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 811 புள்ளிகளுடன் விராட் கோலி 3ஆம் இடத்திலும், 791 புள்ளிகளுடன் ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர் தர வரிசையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய ஹேசில்வுட் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.இந்த தரவரிசையில் இந்தியாவின் பும்ராவிற்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
- 17 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
- காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பி உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. டப்ளின் நகரில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
17 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக செயல்படுவார். காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பி உள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடி கவனம் பெற்ற மகாராஷ்டிர மாநில வலதுகை பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி, சர்வதேச போட்டியில் அறிமுகமாகிறார்.
இந்திய அணி விவரம்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
- டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
- நியூசிலாந்து அணி வீரரான போல்ட் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங், பந்து வீச்சு தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோரூட் 897 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 892 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கினார்.
டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணியில் அப்ரிடி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து வீரர் ஜேமிசன் 3 இடம் பின் தங்கி 6-வது இடத்தில் உள்ளார். அந்த அணியின் மற்றொரு வீரரான டிரெண்ட் போல்ட் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும் இந்திய அணி வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் தொடர்கிறார்கள்.
இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
- 2-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு ஓவர் தாமதமாக பந்து வீசியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் 10-ந் தேதி தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மெதுவாக பந்து வீசும் ஒவ்வொரு ஒவருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி, வீரர்களுக்கு அவர்களின் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளியை அணி இழக்க நேரிடும்.
இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு ஓவர் தாமதமாக பந்து வீசியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 27-ந் தேதி லீட்ஸில் மைதானத்தில் தொடங்குகிறது.
- நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன், பிளெட்சர் இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளனர்.
- இவர்கள் இருவருக்கும் பதிலாக பிளேயர் டிக்னர், டேன் க்ளீவர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் 27-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன், பிளெட்சர் இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளனர். ஜேமிசனுக்கு இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாளில் பந்துவீசும்போது காயம் ஏற்பட்டது. அவருக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என்று பயிற்சியாளர் கூறினார். பிளெட்சருக்கு இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாளில் ஃபீல்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது.
இவர்கள் இருவருக்கும் பதிலாக பிளேயர் டிக்னர், டேன் க்ளீவர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 300 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.
பல்லேகலே:
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 300 ரன்கள் குவித்தது. அந்த அணியில் குசால் மெண்டிஸ் 86 ரன்களும், பதும் நிசாங்க 56 ரன்களும், குணதிலக 55 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 301 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 44 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.
- பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 23.27 வினாடியில் கடந்து நட்சத்திர வீராங்கனை ஹிமா தாசை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.
- 21 வயதான பிரவீன் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார்.
சென்னை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவனம் ஆதரவுடன் 61-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 5 தினங்களாக நடந்தது.
கடைசி நாளான நேற்று தமிழக அணிக்கு மேலும் 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 23.27 வினாடியில் கடந்து நட்சத்திர வீராங்கனை ஹிமா தாசை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா 57.08 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 17.18 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு பஞ்சாப் வீரர் அர்பிந்தர் சிங் 17.17 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
21 வயதான பிரவீன் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார்.
மேலும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில். தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (50.16 வினாடி) வெள்ளி பதக்கம் வென்றார். இதேபோல பெண்களுக்கான தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
போட்டியின் முடிவில் தமிழக அணி 133.50 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. 8 தங்கம் , 6 வெள்ளி , 8 வெண்கலம் ஆக மொத்தம் 22 பதக்கம் தமிழகத்திற்கு கிடைத்தது. பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், ஆண்கள் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தது.
ஒட்டுமொத்த பிரிவில் அரியானா (101.50 புள்ளி) அணி 2-வது இடத்தை பிடித்தது.
அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப் பையை வழங்கினார் கள். மேல்-சபை எம்.பி. முகமது அப்துல்லா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
- தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
- மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.
32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்றது. தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி பெற்றது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.
இதில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 14 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 தோல்வி, 4 டிராவுடன் 25 புள்ளிகள் பெற்றது.
கோஸ்டாரிகா 6-வது முறையாகவும், தொடர்ந்து 3-வது முறையாகவும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அப்பிரிவில் வடஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.
- பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.
- இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
விசாகப்பட்டினம்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாகல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-
திட்டங்களை செயல்படுத்துவதை பற்றி பேசி இருந்தேன். அதை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் பார்த்தோம்.
நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.
பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளை யாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா கூறும் போது, "நாங்கள் எங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கினர். பார்ட்னர் ஷிப் அல்லது உத்வேகத்தை பெற முடியவில்லை.
நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் இந்தபோட்டியை மட்டும் வைத்து கொண்டு எங்களை நான் மதிப்பிட மாட்டேன். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.
5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.






