search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamieson"

    • வில்லியம்சன், லோக்கி பெர்குசன், சாப்மேன், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர்.
    • மேட் ஹென்றிக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி காயத்தால் தத்தளிக்கிறது. வில்லியம்சன், லோக்கி பெர்குசன், சாப்மேன், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர்.

    இந்நிலையில் மேட் ஹென்றிக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணி கடைசியாக நடந்த 3 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன், பிளெட்சர் இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளனர்.
    • இவர்கள் இருவருக்கும் பதிலாக பிளேயர் டிக்னர், டேன் க்ளீவர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் 27-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன், பிளெட்சர் இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளனர். ஜேமிசனுக்கு இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாளில் பந்துவீசும்போது காயம் ஏற்பட்டது. அவருக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என்று பயிற்சியாளர் கூறினார். பிளெட்சருக்கு இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாளில் ஃபீல்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது.

    இவர்கள் இருவருக்கும் பதிலாக பிளேயர் டிக்னர், டேன் க்ளீவர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ×