என் மலர்
விளையாட்டு
- இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக இன்று லண்டன் செல்கிறார்.
- ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் லண்டன் செல்கிறார்.
இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் செப்டம்பர் 10-ந் தேதி 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கவிருந்த நிலையில் கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய இந்திய அணி இன்று லண்டன் சென்றடைந்தது. முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, சமி, அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், சர்துல் தாகூர், பிரிதிஷ் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமன் விஹாரி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகியோர் லண்டன் சென்றடைந்தனர்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக இன்று லண்டன் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இங்கிலாந்தில் இந்திய அணியில் இணைவார்.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் புவனேஸ்வர்குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
- பவர் பிளேயில் 130 ஓவர் வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் முதல் இடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4-வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டில் நடக்கிறது.
இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் உலக சாதனை படைக்க உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் புவனேஸ்வர்குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளார். சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களில் இவர் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பும்ரா, முகமது சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பவர் பிளேயில் ஒரு விக்கெட் எடுத்தால் புவனேஸ்வர்குமார் உலக சாதனை படைப்பார். பவர் பிளேயில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் புவனேஸ்வர் குமார் 33 விக்கெட்டுகள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த சாமுவேல் பத்ரி (33), இரண்டாது இடத்தில் நியூசிலாந்து அணியை சேர்ந்த டிம் சவுத்தி(33) ஆகியோர் உள்ளனர்.

டி20 வரலாற்றில் பவர்பிளேயில் 100 ஓவர்களுக்கு மேல் வீசிய முதல் மூன்று பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பத்ரீ மற்றும் சவுத்தி ஆகியோர் ஆவர். டி20 போட்டிகளில் பவர் பிளேயில் 130 ஓவர் வீசி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் முதல் இடத்தில் உள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களில் பும்ராவை(67 விக்கெட்) முந்துவதற்கு புவனேஸ்வர்குமாருக்கு (64 விக்கெட்) வாய்ப்பு இருக்கிறது. இந்த 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் அவரை முந்தி விடுவார். முதல் இடத்தில் சாஹல் உள்ளார். அவர் 72 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
முதல் மூன்று போட்டிகளில் புவனேஸ்வர்குமார் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக இரண்டாவது டி20-யில் 4 ஒவர்கள் பந்து வீசி 13 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- போர்ட்டர்ஃபீல்ட் 2 உலகக்கோப்பை மற்றும் ஐந்து டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அயர்லாந்து அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார்.
- 2011-ல் பெங்களூரில் நடந்த 50 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் அயர்லாந்து அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். 148 ஒருநாள் போட்டியில் விளையாடி 11 சதமும் 20 அரை சதமும் அடித்துள்ளார். மேலும் 61 டி20 போட்டிகளில் 3 அரை சதம் உள்பட 1079 ரன்கள் குவித்துள்ளார்.
போர்ட்டர்ஃபீல்ட் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து ஒரு வீரராக அணிக்காக விளையாடினார். அவர், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக அரை சதம் அடித்தார்.
போர்ட்டர்ஃபீல்ட் 2 உலகக்கோப்பை மற்றும் ஐந்து டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அயர்லாந்து அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். குறிப்பாக 2011-ல் பெங்களூரில் நடந்த 50 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- கடந்த 16 ஆண்டுகளாக எனது நாட்டுக்காக விளையாடியது ஒரு பாக்கியம். இது நான் சிறுவயதில் இருந்தே செய்ய விரும்பிய ஒன்று. ஆனால் ஓய்வுபெறும் முடிவை எடுத்ததால், தற்போது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் 2006-ல் இருந்து விளையாடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது நம்பமுடியாத பயணமாகும்.
இவ்வாறு போர்ட்டர்ஃபீல்ட் கூறினார்.
- ஜேமி ஓவர்டன் முதல் முறையாக சர்வதேச போட்டியில் விளையாட உள்ளார்.
- 3-வது டெஸ்ட் போட்டியில் கிரேக் ஓவர்டனின் சகோதரர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 23-ந் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் புதுமுக வீரரான ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து வீரர் கிரேக் ஓவர்டனின் சகோதரர் ஆவார். கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் அவருக்கு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
கவுண்டி கிரிக்கெட் போட்டியின் முதல் டிவிசன் தொடரில் அவரது சகோதரர் உள்பட 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் அவரது சிறந்த பந்து வீச்சாக 90 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேமி ஓவர்டன் 3-வது டெஸ்ட் போட்டியில் தனது சகோதரரான கிரேக் ஓவர்டனுடன் இணைந்து விளையாட் உள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர்கள் விபரம்:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், சாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப், ஜோ ரூட்
- ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
- இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன.
நியூயார்க்:
ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.
ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 1930-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை.
இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியை ஆசிய கண்டத்தில் உள்ள கத்தார் இந்த ஆண்டு நடத்துகிறது. நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கால்பந்து சம்மேனம் இன்று அறிவித்தது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கிறது. முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியை 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது.
அமெரிக்காவில் 11 நகரங்களிலும், மெக்சிகோவில் 3 நகரங்களிலும், கனடாவில் 2 நகரங்களிலும் போட்டி நடக்கிறது.
அமெரிக்காவில் போட்டி நடைபெறும் நகரங்கள் வருமாறு:-
நியூயார்க் அல்லது நியூஜெர்சி, லாஸ்ஏஞ்சல்ஸ், டல்லாஸ், கனாஸ்சிட்டி, ஹூஸ்டன், அட்லாண்டா, பில்டெல்பியா, சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், மியாமி, சியாட்டில்.
மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ சிட்டி, மான்ட்டெரி, குதலஜாரா ஆகிய இடங்களிலும், கனடாவில் வான்கூவர், டொரண்டோ ஆகிய நகரங்களிலும் நடக்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா 2-வது முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு நடந்தது. இதேபோல் மெக்சிகோவில் 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்று இருந்தது.
2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்றுகின்றன. 16 நாடுகள் கூடுதலாக கலந்து கொள்கின்றன.
- திட்டமிட்டு திறமையுடன் வீசுவது அவசியமானது என ஹர்ஷல் படேல் தகவல்.
- பேட்ஸ்மேன்களை விட எனது பங்களிப்பு ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீரர் ஹர்ஷல் படேல் கூறியதாவது:-
கடந்த ஆட்டத்தில் எனது திறமையைான பந்து வீச்சை வெளிப்படுத்தினேன். எனது திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். பேட்ஸ்மேன்களை விட எனது பங்களிப்பு ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
உம்ரான் மாலிக் போன்று என்னால் வேகமாக பந்து வீச இயலாது. ஆனால் திட்டமிட்டு திறமையுடன் வீசுவது அவசியமானது. அதில்தான் எனது கவனம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். ஹர்ஷல் படேல் கடந்த போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
- தொடரை சமன் செய்ய இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.
- தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
ராஜ்கோட்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முதல் 2 ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 3-வது போட்டியில் இந்தியா வெற்றியை ருசித்தது. இதனால் 5 போட்டி கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தொடரை சமன் செய்ய இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.
தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய அணி இதே அணியுடன் களமிறங்குமா அல்லது அணியில் ஏதும் மாற்றம் இருக்குமா? முக்கியமாக உம்ரான் மாலிக் களமிறங்குவாரா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் அரை சதமடித்தார்.
- வங்காளதேச அணியின் முன்னணி வீரர்கள் உள்பட 6 பேர் டக் அவுட்டாகினர்.
ஆன்டிகுவா:
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் , 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் சிக்கியது. ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்னில் வெளியேறினார் ,
இறுதியில், வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டும், ரோச், கைல் மேயர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் பிராத்வெயிட் நிதானமாக ஆடினார்.
முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 42 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
- இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- 3 விக்கெட் வீழ்த்திய இலங்கையின் சமீகா கருணரத்னே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பல்லேகலே:
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 47.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 36 ரன், தனஞ்செய டி சில்வா, ஷனகா தலா 34 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின், மழை நின்ற பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 43 ஓவர்களில் 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், ஆஸ்திரேலிய அணி 37.1 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்தார்.
இதனால் இலங்கை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
இலங்கை சார்பில் சமீகா கருணரத்னே 3 விக்கெட், துஷ்மந்தா சமீரா, தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லலகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை முதல் சுற்றில் வீழ்த்தினார்
- இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினார்
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
காலிறுதியில் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன், பிரனோய் மோத உள்ளார்.
- முதல் 2 போட்டியில் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் முக்கியமான 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.
- இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 10-ல், தென் ஆப்பிரிக்கா 8-ல் வெற்றி பெற்றுள்ளன.
ராஜ்கோட்:
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டித்தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2- வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3- வது ஆட்டத்தில் இந்தியா 48 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை ( 17-ந் தேதி ) நடக்கிறது.
முதல் 2 போட்டியில் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் முக்கியமான 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இந்திய அணியின் வெற்றி நாளைய ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய வீரர்களுக்கு உள்ளது.
கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கும், பந்து வீச்சும் நன்றாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார். இதேபோல சுழற்பந்து வீரர்கள் யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல் ஆகியோர் இயல்பான நிலைக்கு திரும்பினார்கள்.
கடந்த 3 ஆட்டத்திலும் வீரர்கள் தேர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநிலை நாளைய ஆட்டத்திலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா அணி நாளைய போட்டியில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் அந்த அணி கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு சிறப்பாக ஆட முயற்சிக்கும்.
இரு அணிகளும் நாளை மோதுவது 19-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 10-ல், தென் ஆப்பிரிக்கா 8-ல் வெற்றி பெற்றுள்ளன.
நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- சிகிச்சை முடிந்து அவர் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கே.எல்.ராகுலுக்கு பதில் மயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக முதலில் நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுல் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வெளியேறினார். இதை தொடர்ந்து டி20 தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ராகுல் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லவுள்ளார். இதையடுத்து அவர் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து அவர் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடரில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், கே.எல். ராகுலுக்கு பதில் புதிய துணைக் கேப்டன் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. மேலும் கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.






