என் மலர்
விளையாட்டு
- கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.
- ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார்
இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ளது.
முதல் பயணமாக கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, சமி, அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், சர்துல் தாகூர், பிரிதிஷ் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமன் விஹாரி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகியோர் லண்டன் சென்றடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு இரண்டாவது பயணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோர் லண்டன் செல்ல உள்ளனர்.
இந்நிலையில் கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நாளைக்குள் அவர் அணியில் இடம் பெறுவாரா? இல்லையா என்பது குறித்து தகவல் தெரியும். ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
- நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று 20 ஓவர் போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
- நான் விளையாடும் ஆட்ட வரிசை சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன்.
ராஜ்கோட்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று 20 ஓவர் போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். ஆட்ட நாயகன் விருதை பெற்ற தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
நான் விளையாடும் ஆட்ட வரிசை சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். பயிற்சியாளர் டிராவிட்க்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வீரர்களின் அறை அமைதியாக இருக்கிறது. நெருக்கடியில் எப்படி விளையாட வேண்டும் என்று கற்று கொள்வது முக்கியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது.
- செஸ் உருவான இந்தியாவில் இருந்து ஜோதி ஓட்டம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
புதுடெல்லி:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.
1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று சுடர் தொடர் ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
செஸ் உருவான இந்தியாவில் இருந்து ஜோதி ஓட்டம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து கண்டங்களுக்கும் இந்த ஜோதி ஏந்தி செல்லப்படும். ஆனால் தற்போது கால அளவு குறைவாக இருப்பதால் இந்தியாவில் மட்டும் சுடர் ஓட்டம் நடக்கிறது.
செஸ் ஒலிம்பியாட்டின் வரலாற்று சிறப்புமிக்க முதல் சுட்டர் ஓட்டம் டெல்லியில் நாளை (19-ந் தேதி) தொடங்குகிறது. இந்திராகாந்தி மைதானத்தில் மாலை 5 மணியளவில் இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச் முறைப்படி ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கிறார். அதை அவர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைப்பார்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வருகிறது. ஜூலை 27-ந் தேதி போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தை வந்தடையும்.
- ஒருநாள் போட்டிகளில் முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.
- ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் பட்லர் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது.
499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த போட்டியில் 162 ரன்கள் குவித்த பட்லர் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக 498 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில், முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.
அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியல்

ஒரு போட்டியில் 3 வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது முறை ஆகும். ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே ஒரு இன்னிங்ஸில் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டன. இருமுறையும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அடித்தார்கள். 2015-ல் ஜோகன்னஸ்பர்க்கில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், அதே ஆண்டு வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் மூன்று சதங்கள் அடித்திருந்தன. இந்நிலையில் ஒரு இன்னிங்சில் 3 சதங்கள் அடிக்கப்பட்ட அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி 2-வது இடத்தை பிடித்தது.
அதிக முறை 400- ரன்களுக்கு மேல் குவிந்த அணியின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (6 முறை) அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் (5 முறை) உள்ளது.
இங்கிலாந்து இன்னிங்சின் முதல் 35 ஓவர்களில், 9 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன. 36-50 ஓவர்களில், இங்கிலாந்து 17 சிக்ஸர்களை அடித்தது. இதில் பட்லர் (10) லிவிங்ஸ்டன் (1) மலான் (1) சிக்சர்களும் அடித்தனர். ஒட்டுமொத்தமாக 26 சிக்சர்களை இங்கிலாந்து அணி அடித்தது. இது ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சராகும். இந்த பட்டியலிலும் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து ஆக்கிரமித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணி பட்டியல்

மொத்தமாக இங்கிலாந்து பவுண்டரிகள் (36 பவுண்டரிகள், 26 சிக்ஸர்கள்) மூலம் 300 ரன்களைக் குவித்தது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் பவுண்டரிகளில் மட்டும் 300+ ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது.
பட்லர் சாதனைகள்
இந்த போட்டியில் பட்லர் தனது சதத்தை வெறும் 47 பந்துகளில் எட்டினார். இது ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் அடித்த இரண்டாவது அதிவேக சதமாகும். இங்கிலாந்தின் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பட்லர்தான் இருக்கிறார். அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் 50 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் மூன்று முறை சதம் அடித்த ஒரே வீரர் அவர்தான்.
பட்லர்

பட்லர் 65 பந்துகளில் 150 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். 2015 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை அவர் (64 பந்துகளில்) படைத்தார்.
இந்த போட்டியின் மூலம் லிவிங்ஸ்டனும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் லிவிங்ஸ்டன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் உள்ள ஏபி டிவில்லியர்ஸ் சாதனையை(16 பந்துகளில்) முடியடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் அதனை லிவிங்ஸ்டன் தவறவிட்டார். 13 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர் 17-வது பந்தில்தான் அரை சதம் கடந்தார்.
46-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 32 ரன்கள் குவித்தார். அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டியில் ஒரே ஓவரில் இங்கிலாந்து எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக 2007-ம் ஆண்டு தி ஓவல் மைதானத்தில் யுவராஜ் சிங்குக்கு எதிராக டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசினார்.
- டாஸ் பற்றி நாம் பேசலாம். ஆனால் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே பொதுவாக வெற்றி பெறும்.
- தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
ராஜ்கோட்:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.
தினேஷ் கார்த்திக் 27 பந்தில் 55 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 31 பந்தில் 46 ரன்னும் (3 பவுண்டரி 3 சிக்சர் ) எடுத்தனர். நிகிடி 2 விக்கெட்டும், ஜான்சென், பிரிட்டோரியஸ், நோர்க்கியா , கேசவ் மகாராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 16.5 ஓவர்களில் 87 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வான்டர்டூசன் அதிகபட்சமாக 20 ரன் எடுத்தார். 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். அவேஷ் கான் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். யசுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும் , ஹர்ஷல் படேல், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் , 3-வது -வத் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன.
இந்த வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-
திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாங்கள் பேசினோம்.அதற்கு ஏற்ற முடிவு கிடைத்து விட்டது. டாஸ் பற்றி நாம் பேசலாம். ஆனால் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே பொதுவாக வெற்றி பெறும்.
தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஹர்திக் பாண்ட்யா அவருக்கு உறுதுணையாக நிலையாக நின்று ஆடினார்.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் பெங்களூரில் நாளை (19-ந் தேதி) நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றும்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 265 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
- வெஸ்ட் இண்டீசின் பிராத்வெயிட், பிளாக்வுட் ஆகியோர் அரை சதமடித்தனர்.
நார்த் சவுண்ட்:
வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது.
கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் ஆட்டமிழந்தார். பிளாக்வுட் 63 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், எபாட் ஹுசைன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
- முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- அதிரடியாக ஆடிய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஆம்ஸ்டெல்வீன்:
நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 498 ரன்கள் குவித்தது. சால்ட் 93 பந்துகளில் 122 ரன்னும், டேவிட் மலான் 125 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 47 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்து இங்கிலாந்து உலக அணி சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. ஆனால், நெதர்லாந்து 49.4 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இங்கிலாந்து 232 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் ஹாங்காங் வீரரை 2வது சுற்றில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் சார்பில் பிரனோய் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
- முதலில் விளையாடிய இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 55 ரன்கள் குவித்தார்.
- தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக வான்டர் டுசன் 20 ரன்கள் அடித்தார்.
ராஜ்கோட்:
இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த நிலையில் 4-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கெய்க்வாட் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் 27 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியினர் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
தொடக்க வீரர் டி காக் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் பவுமா 8 ரன்னுடன் வெளியேற, டுவைன் பிரிட்டோரியஸ் டக் அவுட்டானார். அதிகபட்சமாக வான்டர் டுசன் 20 ரன்கள் அடித்தார்.
16.5 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அவேஷ்கான் 4 விக்கெட்களையும், சாஹல் 2 விக்கெட்டும், ஹர்சல் படேல், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்
இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன.
- இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.
- 20 ஓவர் தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ராஜ்கோட்:
இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் 4-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கெய்க்வாட் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 27 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்தார்.
ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.
- இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் அடுத்தடுத்து சதம் அடித்தனர்.
- அதிகபட்சமாக பட்லர் 162 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இரு அணிகள் பங்கேற்றுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வி ஆர் ஏ மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜேசன் ராய் ஒரு ரன்னுடன் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட், சர்வதேச போட்டியில் தமது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர்,
93 பந்துகளில் 122 ரன்களை குவித்தார். மற்றொரு வீரர் டேவிட் மாலன் 109 பந்துகளில் 125 ரன்கள் அடித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த பட்லர், 7 பவுண்டர்கள் மற்றும் 14 சிக்சர்களை அடித்து இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
கேப்டன் மோர்கன் டக் அவுட் ஆனார். லிவிங்ஸ்டோன் 66 ரன்கள் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 499 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடுகிறது.
- டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
நெதர்லாந்தில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய்-பிலிப் சால்ட் களமிறங்கினர். 1 ரன்னில் இருந்த ராய் ஸ்னேட்டர் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதனையடுத்து பிலிப் சால்ட்-டேவில் மலான் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிலிப் 1 அரை சதம் மற்றும் 1 சதம் அடித்துள்ளார்.






