என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பிலிப் சால்ட் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர்.
    • மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக 2வது ஒருநாள் போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது.

    ஆம்ஸ்டெல்வீன்:

    இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், பிலிப் சால்ட் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேசன் ராய் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பிலிப் சால்ட் 77 ரன்னில் வெளியேறினார். டேவிட் மலான், மொயீன் அலி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இங்கிலாந்து 36.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மலான் 36 ரன்னும், மொயீன் அலி 42 ரன்னும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

    • 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இலங்கை வீரர் பதும் நிசங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    • இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    கொழும்பு:

    இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் பின்ச் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அலெக்ஸ் கேரி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 137 ரன்னில் வெளியேறினார். குசால் மெண்டிஸ் 87 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    • வங்காளதேசம் அணி 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம் தேதி ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கியது இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.

    நான்காம் நாளான இன்று ஜான் கேம்ப்பெல் - பிளாக்வுட் ஜோடி மேலும் விக்கெட்டை பறிகொடுக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 88 ரன்கள் அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    • டாஸ் போடப்பட்ட நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது

    பெங்களூரு:

    இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன.

    இந்த தொடரை கைப்பற்றப் போகும் அணி என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா காயமடைந்துள்ளதால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி களம் இறங்கி பேட்டிங் செய்ய இருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    பின்னர் மழை நின்றவுடன் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. களம் இறங்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 10 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 3.3 ஒவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.

    மழை நிற்காததால், போட்டி கைவிடப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செஸ் ஒலிம்பியாட் ஜோதி 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
    • ஜூலை 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதி தமிழகம் வருகிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும் இந்த ஜோதி 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் ஜூலை 28ம் தேதி  தமிழகத்தை அடையும் இந்த ஜோதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்படுகிறது.

    இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    உலக செஸ் பேரவை முதன்முறையாகத் தொடங்கியுள்ள செஸ் ஒலிம்பியாட் சுடரின் தொடர் ஓட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்துள்ள இவ்வேளையில், இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிகுந்த இத்தருணத்தின் பின்னணியில் இருப்பதில் சென்னை பெருமை கொள்கிறது. தொடர் ஓட்டத்தின் முடிவில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா போட்டியில் இருந்து விலகல்.

    பெங்களூரு:

    இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த தொடரை கைப்பற்றப் போகும் அணி என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி களம் இறங்கி பேட்டிங்  செய்ய இருந்த நிலையில் மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் காணப்படுவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    மழை நின்ற பின்னர் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது. களம் இறங்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 10 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 3.3 ஒவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா காயமடைந்துள்ளதால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

    • செஸ் ஒலிம்பியாட் ஜோதி, 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
    • ஜூலை 28ம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் கையில் ஜோதி ஒப்படைக்கப்படுகிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.

    இந்த போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் பிரதமர் மோடியிடம், செஸ் ஒலிம்பியாட் சுடரை ஒப்படைத்தார். இதை அடுத்து அந்த ஜோதியை பிரதமரிடம் இருந்து கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்  பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் மைதானத்தில் அந்த ஜோதியை ஏந்தியவாறு வலம் வந்தார்.

    இந்த ஜோதி 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் ஜூலை 28ம் தேதி அன்று தமிழகத்தை அடையும் இந்த ஜோதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர்  போட்டி தொடங்குகிறது. இந்த ஜோதி ஓட்டம் இனிவரும் செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

    • வங்காளதேசம் அணி 2வது விக்கெட்டில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் 2வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிராத்வெயிட் 94 ரன்னும், பிளாக்வுட் 63 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், எபாட் ஹுசைன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. கேப்டன் ஷகிப் அல் ஹசன், விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். நுருல் ஹசன் 64 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 63 ரன்னும் எடுத்தனர். மஹ்மதுல் ஹசன் ஜாய் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வங்காளதேச வீரர் காலித் அகமது சிறப்பாக பந்து வீசினார். முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஜான் கேம்ப்பெல், பிளாக்வுட் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் அரையிறுதியில் சீன வீரரிடம் தோல்வி அடைந்தார்.
    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் பிரனோய் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் சீன வீரர் சாவோ ஜென் பெங்குடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சீன வீரர் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் பிரனோய் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஒலிம்பிக் தங்க பதக்கத்திற்கு பின் அவர் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே தங்கம் வென்றுள்ளார்.
    • தொடர் மழைக்கு இடையே பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

    ஹெல்சின்கி:

    பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

    அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார். இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை.

    2வது முயற்சியில் சோப்ரா தவறு செய்தார்.

    3வது முயற்சியின்போது அவர் தவறி கீழே விழுந்தார். அது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு, அவர் காயமின்றி எழுந்து சென்றார்.

    போட்டியின்போது தொடர் மழை பெய்ததால் ஈட்டி எறியும் வீரர்கள் அனைவருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைத்தது.

    • ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன.
    • இதனால் ஷூட் அவுட் முறை மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

    ரோட்டர்டாம்:

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் புரோ லீக் ஆக்கி தொடரில் மகளிர் அணிகளுக்கானகலீக் போட்டிகள் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்றது.

    இதில் உலக தர வரிசையில் 2வது இடம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினா அணியை இந்திய மகளிர் ஆக்கி அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டதால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதனால் வெற்றியை முடிவு செய்ய ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

    இதில், இந்திய மகளிர் அணியில் நேஹா மற்றும் சோனிகா ஆகியோர் தலா ஒரு கோல் போட்டு இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். முடிவில் ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

    • ஒரு வீராங்கனையாக விலகிச் செல்வதற்கு தெளிவான நேரம் இது இல்லை என்று நான் உணர்கிறேன்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது உண்மையிலேயே வேதனை தரும் தேர்வாக இருந்தது.

    இங்கிலாந்தின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான கேத்ரின் ப்ரண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    36 வயதான அவர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தொடர்ந்து விளையாடுவார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் 21.52 சராசரி மற்றும் 51.1 ஸ்டிரைக் ரேட்டில் 51 விக்கெட்டுகளுடன், பெண்கள் டெஸ்டில் இங்கிலாந்தின் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

    அவர் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரண்ட் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரியில் பெண்கள் ஆஷஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

    ஓய்வு குறித்து கேத்ரின் ப்ரண்ட் கூறியதாவது:-

    ஒரு வீராங்கனையாக விலகிச் செல்வதற்கு தெளிவான நேரம் இது இல்லை என்று நான் உணர்கிறேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வு பற்றிய எண்ணங்கள் மேலும் மேலும் எழுந்தது. எனவே உணர்ச்சிகரமான முடிவை விட புத்திசாலித்தனமான முடிவை எடுக்க முடிவு செய்துள்ளேன்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது உண்மையிலேயே வேதனை தரும் தேர்வாக இருந்தது. ஆனால் வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த கடினமான முடிவை எடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு இங்கிலாந்து வீராங்கனையான அன்யா ஷ்ருப்சோல் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×