search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா 5வது 20 ஓவர் போட்டி  மழையால்  பாதிப்பு
    X

    கேசவ் மகாராஜ்                  ரிஷப் பண்ட்  

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா 5வது 20 ஓவர் போட்டி மழையால் பாதிப்பு

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா போட்டியில் இருந்து விலகல்.

    பெங்களூரு:

    இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த தொடரை கைப்பற்றப் போகும் அணி என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி களம் இறங்கி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் காணப்படுவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    மழை நின்ற பின்னர் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது. களம் இறங்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 10 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 3.3 ஒவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா காயமடைந்துள்ளதால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

    Next Story
    ×