என் மலர்

  கிரிக்கெட்

  4வது 20 ஓவர் போட்டி-  82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
  X

  இந்திய அணி வீரர்கள் 

  4வது 20 ஓவர் போட்டி- 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் விளையாடிய இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 55 ரன்கள் குவித்தார்.
  • தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக வான்டர் டுசன் 20 ரன்கள் அடித்தார்.

  ராஜ்கோட்:

  இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

  இந்த நிலையில் 4-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கெய்க்வாட் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

  இஷான் கிஷன் 27 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

  20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியினர் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

  தொடக்க வீரர் டி காக் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் பவுமா 8 ரன்னுடன் வெளியேற, டுவைன் பிரிட்டோரியஸ் டக் அவுட்டானார். அதிகபட்சமாக வான்டர் டுசன் 20 ரன்கள் அடித்தார்.

  16.5 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அவேஷ்கான் 4 விக்கெட்களையும், சாஹல் 2 விக்கெட்டும், ஹர்சல் படேல், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்

  இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன.

  Next Story
  ×