என் மலர்

  கிரிக்கெட்

  தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்- தினேஷ் கார்த்திக்கு ரிஷப்பண்ட் பாராட்டு
  X

  ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக்

  தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்- தினேஷ் கார்த்திக்கு ரிஷப்பண்ட் பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாஸ் பற்றி நாம் பேசலாம். ஆனால் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே பொதுவாக வெற்றி பெறும்.
  • தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

  ராஜ்கோட்:

  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

  ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.

  தினேஷ் கார்த்திக் 27 பந்தில் 55 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 31 பந்தில் 46 ரன்னும் (3 பவுண்டரி 3 சிக்சர் ) எடுத்தனர். நிகிடி 2 விக்கெட்டும், ஜான்சென், பிரிட்டோரியஸ், நோர்க்கியா , கேசவ் மகாராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 16.5 ஓவர்களில் 87 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  வான்டர்டூசன் அதிகபட்சமாக 20 ரன் எடுத்தார். 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். அவேஷ் கான் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். யசுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும் , ஹர்ஷல் படேல், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் , 3-வது -வத் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன.

  இந்த வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

  திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாங்கள் பேசினோம்.அதற்கு ஏற்ற முடிவு கிடைத்து விட்டது. டாஸ் பற்றி நாம் பேசலாம். ஆனால் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே பொதுவாக வெற்றி பெறும்.

  தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

  ஹர்திக் பாண்ட்யா அவருக்கு உறுதுணையாக நிலையாக நின்று ஆடினார்.

  இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

  இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் பெங்களூரில் நாளை (19-ந் தேதி) நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றும்.

  Next Story
  ×