search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    4வது 20 ஓவர் போட்டி-  தென் ஆப்பிரிக்காவிற்கு 170  ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    தினேஷ் கார்த்திக்

    4வது 20 ஓவர் போட்டி- தென் ஆப்பிரிக்காவிற்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    • இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.
    • 20 ஓவர் தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ராஜ்கோட்:

    இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் 4-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கெய்க்வாட் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 27 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்தார்.

    ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.

    Next Story
    ×