என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரேசினா மெர்லி"

    • 4X400 மீட்டர் ஒற்றையர் ஆட்டத்தில் சுபா, மோகன்குமார், ஸ்டெபி, சரண் ஆகியோர் அடங்கிய தமிழக அணி வெண்கல பதக்கம் பெற்றது.
    • நேற்றைய போட்டியில் 2 புதிய சாதனை படைக்கப்பட்டது. டிரிபுள் ஜம்ப் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றதோடு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் எஸ்.எஸ்.ஜே. நிறுவனம் ஆதரவுடன் 61-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் 3 நாள் போட்டி முடிவில் தமிழக அணி 4 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 14 பதக்கம் வென்று இருந்தது.

    4-வது நாளான நேற்று தமிழகத்துக்கு 5-வது தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் கிரேசினா மெர்லி தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்தார். அவர் 1.82 மீட்டர் உயரம் தாண்டினார்.

    இதேபோல தமிழக அணிக்கு மேலும் 2 வெண்கல பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான வட்டு எறியும் போட்டியில் காருண்யா முத்துராமலிங்கம் 49.24 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கம் பெற்றார்.

    4X400 மீட்டர் ஒற்றையர் ஆட்டத்தில் சுபா, மோகன்குமார், ஸ்டெபி, சரண் ஆகியோர் அடங்கிய தமிழக அணி வெண்கல பதக்கம் பெற்றது. அவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடம 24.51 விநாடியில் கடந்தனர்.

    தமிழக அணி இதுவரை 5 தங்கம் உள்பட 17 பதக்கம் பெற்றுள்ளது.

    நேற்றைய போட்டியில் 2 புதிய சாதனை படைக்கப்பட்டது. டிரிபுள் ஜம்ப் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றதோடு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு மயூக்கா ஜானி 14.11 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. மேலும் ஐஸ்வர்யா காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    ஆண்களுக்கான வட்டு எறியும் போட்டியில் பஞ்சாப் வீரர் கிர்பாலசிங் 60.31 மீட்டர் தூரம் எறிந்து தனது சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தனர். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு அவர் 59.74 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


    ×