என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்களை குவித்தது.

    ஷார்ஜா:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய பகர் சமான், முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். பகர் சமான் 53 ரன்னில் அவுட்டானார். கடைசி ஓவரில் குஷ்தில் ஷா 4 சிக்சர் அடித்து அசத்தினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்துள்ளது. ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது.

    • ஆசிய கோப்பையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    துபாய்:

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்திய அணி தான் ஆடிய 2 போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 3 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.
    • வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமி கோப்பைகள் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் மாவட்ட பள்ளிகள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. 5-ந்தேதி வரை 3 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.

    சிறுவர்கள் பிரிவில் 25 பள்ளிகளும், சிறுமிகள் பிரிவில் 16 பள்ளிகளும் ஆக மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமி கோப்பைகள் வழங்கப்படும். இது தவிர தனி நபர் பரிசு தொகையும் அளிக்கப்படும்.

    மேற்கண்ட தகவல்களை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜுன் துரை தெரிவித்துள்ளார்.

    • இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார்.
    • இளம் வீரர் பில் சால்ட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

    டி-20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு இது தான் முதல் உலகக்கோப்பை ஆகும்.

    அணியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இளம் வீரர் பில் சால்ட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. டி-20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்துள்ள அணி தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 டி-20 போட்டிகளில் ஆடும் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா மற்றும் டி-20 உலகக்கோப்பைக்கான அணி விவரம்:-

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து டி-20 அணி விவரம்:-

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், பென் டக்கெட், லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன், டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், லூக் வுட், மார்க் வுட்.

    • ரோகித் சர்மாவின் பேட்டிங் நிலை சரிவில் இருக்கிறது.
    • ரோகித்சர்மா பலவீனமாகவும், பயத்துடனும் இருக்கிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக உள்ளார்.

    ஆசிய கோப்பை போட்டியில் ரோகித்சர்மாவின் பேட்டிங் குறித்தும், கேப்டன் பதவி குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவை போட்டியில் பார்க்கும் போது பலவீனமாக தெரிந்தார். அவர் பயத்துடன் இருக்கிறார். குழப்பமாகவும் காணப்படுகிறார்.

    இதற்கு முன்பு நான் அவரை இப்படி பார்த்ததில்லை. கேப்டன் பதவி ரோகித்சர்மாவுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கிறது என்று நினைக்கிறேன். அவர் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்.

    ரோகித் சர்மாவின் பேட்டிங் நிலை சரிவில் இருக்கிறது. ஐ.பி.எல்.லில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. கேப்டன் பதவியில் இந்திய அணிக்காக ஆடும் போது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.

    அவர் பல விஷயங்களை பேசுகிறார். ஆனால் அவருக்கு அது சரியாக அமையவில்லை. பேசுவது எளிது. ஆனால் செய்வது கடினமானது. இது எனது கணிப்பு அல்ல. ரோகித் சர்மா முன்னோக்கி செல்வது கடினம் என்பது எனது கருத்தாகும்.


    கேப்டன் பதவியில் அவரால் நீண்ட காலம் நிலைத்து இருக்க முடியாது.

    ரோகித் சர்மா ரசித்து வெளிப்படுத்தும் ஆட்டத்தை பார்த்து இருக்கிறேன். ஆனால் அது மாதிரியான ஆட்டத்தை அவரால் தற்போது வெளிப்படுத்த இயலவில்லை. பல விஷயங்களை அவர் தவற விட்டுள்ளார். நான் அவருக்காக வருந்துகிறேன். இந்த விஷயத்தில் அவரோ இந்திய சிந்தனையாளர் குழுவோ முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 18 பந்தில் 12 ரன்னும், ஆங்காங்குக்கு எதிராக 13 பந்தில் 21 ரன்னும் எடுத்தார்.

    • முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் நடால் இழந்தார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் ஸ்டெப்ஹென்சை எதிர்கொண்டார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னியை எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் இழந்தார். அதன் பின்னர் அவர் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 2-6, 6-4, 6-2, 6-1.

    மற்ற ஆட்டங்களில் 3-வது வரிசையில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 11-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி), ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    17-வது வரிசையில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னா கோரிக் (குரோஷியா) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெப்ஹென்சை எதிர் கொண்டார். இதில் இகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-4 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலியா சாண்ட்ராவை ( பெலாரஸ்) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 6-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 9-வது வரிசையில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்), 19-ம் நிலை வீராங்கனையான டேனிலி கோலின்ஸ் ( அமெரிக்கா ) , 21-வது வரிசையில் உள்ள பெட்ரோ கிவிட்டோவா ( செக் குடியரசு ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    4-வது வரிசையில் உள்ள பவுலா படோசா (ஸ்பெயின்) 7-6, (7-5), 1-6, 2-6 என்ற கணக்கில் பெட்ரோ மேட்ரிக்கிடம் (குரோஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • பாகிஸ்தான்- ஹாங்காங் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
    • இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் 3 முறை மோதியுள்ளன.

    ஷார்ஜா:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும்.

    'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை முதல் 2 இடங்களை பிடித்து 'சூப்பர்4' சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம் அணி வெளியேற்றப்பட்டது. 'ஏ' பிரிவில் இந்திய அணி 2 வெற்றியுடன் முதல் இடத்தை பிடித்து 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. 2-வது அணி எது? என்பது இன்று இரவு தெரியும்.

    ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை வீழ்த்தி 'சூப்பர் 4' சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    இரு அணிகளும் மோதிய 3 ஒருநாள் ஆட்டத்திலும் பாகிஸ்தானே வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி நம்பிக்கையுடன் ஹாங்காங்கை எதிர் கொள்ளும். அதே நேரத்தில் ஹாங்காங் அணி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விளையாட கடுமையாக போராடும்.

    'சூப்பர் 4' சுற்று நாளை தொடங்குகிறது. இதில் 4 அணியும் ரவுண்டு ராபின் முறையில் மோதும். 'லீக்' முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

    'சூப்பர் 4' சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 4-ந்தேதி மோதும் வாய்ப்பு உள்ளது. 6-ந்தேதி ஆப்கானிஸ்தானுடனும், 8-ந்தேதி இலங்கையுடனும் இந்திய அணி விளையாடுகிறது.

    'சூப்பர் 4' சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி வருகிற 11-ந்தேதி நடக்கிறது. 

    • சென்னையின் அணி அக்டோபர் 10-ந் தேதி மோகன் பகானை எதிர்கொள்கிறது.
    • இந்த போட்டித் தொடரில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

    கொச்சி:

    11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. 

    தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

    அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக 'பிளே-ஆப்' சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

    புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

    • சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்.
    • முதலில் விளையாடிய வங்காளதேசம் அணி 183 ரன்கள் குவித்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    அந்த அணி வீரர் ஆசிப் உசைன் அதிகபட்சமாக 39 ரன்கள் விளாசினார். மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். நிசாங்கா20 ரன்கள் அடித்தார். கேப்டன் தசுன் ஷனகா 45 ரன்கள் குவித்தார். கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார்.

    இலங்கை அணி 19.2 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

    • வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஆசிப் உசைன் 39 ரன்கள் விளாசினார்.
    • இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய ஆசிப் உசைன் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.. மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    • ஆசிய கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடாததால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
    • சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தகவல்

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி நேற்று ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சூர்யகுமார் யாதவ், 26 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். துவக்க வீரர் கே.எல்.ராகுல் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடிய நிலையில், சூர்யகுமாரின் அதிரடி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஹாங்காங் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். இதனால் அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா டி20 போட்டிகளில் அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாடி தனது பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும் நிலையில், கே.எல்.ராகுலின் அணுகுமுறை அதற்கு முரணாக இருப்பதாக கருத்துகள் வலம்வந்தன.

    போட்டி முடிந்தபின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சூர்யகுமாரின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதாவது, டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் நீங்கள் துவக்க வீரராக களமிறங்குவீர்களா? என்று அந்த செய்தியாளர் கேட்டார்.

    அப்போது குறுக்கிட்ட சூர்யகுமார் யாதவ், 'அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?' என சிரித்துக்கொண்டே எதிர்கேள்வி கேட்டு மடக்கினார்.

    தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ், 'அவரும் (ராகுல்) காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவருக்கும் அவகாசம் தேவை. எங்களுக்கு இப்போது சிறிது அவகாசம் கிடைத்திருக்கிறது. நான் முன்பே கூறியதுபோல், நான் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். இதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் தெரிவித்துள்ளேன். நான் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பதை அவர்கள்தான் உறுதி செய்வார்கள்' என்றார்.

    • முன்னாள் உலக சாம்பியனும் தற்போதைய உலகின் 7ம் நிலை வீரருமான சிங்கப்பூரின் லோ கீன் யூவை இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் எதிர்கொண்டார்.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சிங்கப்பூரின் லோ கீன் யூவை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில், முன்னாள் உலக சாம்பியனும் தற்போதைய உலகின் 7ம் நிலை வீரருமான சிங்கப்பூரின் லோ கீன் யூவை இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் எதிர்கொண்டார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சிங்கப்பூரின் லோ கீன் யூவை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதி சுற்றில், உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவ்தியென் சென்னை பிரனாய் எதிர்கொள்கிறார்.

    ×