என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இன்று நடைபெறும் 5-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    • இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இருந்தது.

    ஆசிய கோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியாவும், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தானும் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

    இன்று நடைபெறும் 5-வது 'லீக்' ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இருந்தது.

    • சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் ஆறு பவுண்டரி ஆறு சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார்.
    • தொடக்கத்திலேயே பேட்டிங் நன்றாக இருந்ததாக ரோகித் சர்மா பாராட்டு

    துபாய்:

    ஆசிய கோப்பை போட்டியில் ஆங்காங்கை வீழ்த்தி இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது.

    சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்), வீராட் கோலி 44 பந்தில் 59 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), லோகேஷ் ராகுல் 36 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆங்காங் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 40 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    பாபர் ஹயாத் அதிகபட்சமாக 35 பந்தில் 41 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) கின்ஷிட் ஷா 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    தொடக்கத்திலேயே எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்தோம். பந்து வீச்சு பொறுப்பான முறையில் இருந்தது. பந்து வீச்சில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து இருக்கலாம்.

    சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவரை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை. தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் பேட்டிங் செய்கிறார். அவர் ஆடிய ஷாட்கள் ஒவ்வொன்றும் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடி வருகிறார்கள்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    • முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை வீழ்த்தினார்
    • 3-வது தரவரிசையில் உள்ள மரியா ஷகாரி சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் , 23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டா வெயிட்டை எதிர்கொண்டார். இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனெட் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    செரீனா வில்லியம்ஸ் 7-6 ( 7-2 ), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் 12வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோகோ கவூப் 6-2 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் எலீனா கேப்ரியலாவை (ருமேனியா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 20 வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) , 5-ம் நிலை வீராங்கனையான ஜபேவுர் (துனிசியா ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    3-வது வரிசையில் உள்ள மரியா ஷகாரி (கிரீஸ் ) 6-3 , 5-7 , 5-7 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இதே போல 14-வது இடத்தில் உள்ள லைலா பெர்னாண்டஸ் (கனடா), 23-ம் நிலை வீராங்கனையான பார்பரா கிரெச் கோவா (செக் குடியரசு) ஆகியோரும் அதிர்ச்சிகரமாக 2-வது சுற்றில் வெளியேறினார்கள்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் இருக்கும் பெரிடினி (இத்தாலி), 23-ம் நிலை வீரர் ஷர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 21-ம் நிலை வீரரான போடிக் வான்டே (நெதர்லாந்து) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 16 நாடுகள் பங்கேற்கின்றன.
    • முதல் சுற்றில் இருந்து 4 நாடுகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    மெல்போர்ன்:

    ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 8 நாடுகள் நேரடியாக 'சூப்பர் 12' சுற்றில் விளையாடுகிறது. முதல் சுற்றில் இருந்து 4 நாடுகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு தகுதி பெறும்.

    வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சிங்கப்பூரில் பிறந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் உலக கோப்பை அணியில் இடம்பெற்று உள்ளார். அவர் 14 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    ஆல் ரவுண்டரான டிம் டேவிட் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 20 ஓவர் தொடரிலும் ஆடுகிறார்.

    இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடக்க வீரர் வார்னருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருமாறு:-

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கும்மின்ஸ் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மிச்சேல் மார்ஷ், ஸ்டீவ் சுமித், கானே ரிச்சர்ட்சன், ஸ்டார்க், ஸ்டோனிஸ், ஆஸ்டன் ஆகர், டிம் டேவிட், ஹாசல்வுட், ஜோஸ் இங்லிஸ், மேக்யூ வாடே, ஆடம் ஜம்பா,  டிம் டேவிட்.

    • ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்தில் உள்ளார்.
    • பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். 2-வது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நீடிக்கிறார். 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி உள்ளார்.

    அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், ரிஸ்வான் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

    அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 8-வது இடத்தில் உள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2வது ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
    • ஆண்டி முர்ரே அமெரிக்க வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் எமிலோ நாவாவைச் சந்தித்தார். முதல் செட்டை கோட்டை விட்ட ஆண்டி முர்ரே அடுத்த மூன்று செட்டையும் தனதாக்கினார்.

    இறுதியில், ஆண்டி முர்ரே 5-7 6-3 6-1 6-0 என்ற கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி, பிரான்சைச் சேர்ந்த ஹியூகோ கிரெய்னியரைச் சந்தித்தார்.

    இதில், 2-6, 6-1, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற பெரெட்டினி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.
    • விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ்

    68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கே.எல்.ராகுல் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. பாபர் ஹயாத் 41 ரன்னும், கிஞ்சித் ஷா 30 ரன்னும், செஷான் அலி 26 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஹாங்காங் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    • விராட் கோலி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    • சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று, துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. ராகுல் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    அவரைத் தொடர்ந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்டு, ஹாங்காங் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

    விராட் கோலி

    விராட் கோலி

    விராட் கோலி இந்த தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 40 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவருக்கு இது 31வது அரை சதமாகும். மறுமுனையில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.

    மிக குறைந்த பந்துகளில் அதாவது 22 பந்துகளில் அரைசதம் அடித்து ஆச்சரியப்படுத்திய சூர்யகுமார் யாதவ், அடுத்த பந்திலும் சிக்சர் அடித்து, ஹாட்ரிக் சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 5வது பந்திலும் ஒரு இமாலய சிக்சரை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 6 சிக்சர் உள்பட 26 ரன்கள் விளாசினார்.

    20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது. 

    • துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி முதலில் பந்து வீச முடிவு
    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி பந்து வீசுவதற்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

    ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), பாபர் ஹயாத், யாசிம் முர்தாசா, கிஞ்சித் ஷா, ஸ்காட் மெக்கெக்னி (கீப்பர்), ஹாரூண் அர்ஷாத், அய்சாஸ் கான், ஜீஷன் அலி, எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்பர்.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

    • 2012 -ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
    • எனது சர்வதேச கிரிக்கெட்டை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம். நியூசிலாந்து அணிக்காக 2012 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். நியூசிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான கிராண்ட்ஹோம் இதுவரை அந்த அணிக்காக 29 டெஸ்ட் போட்டியில் 1432 ரன்னும், 45 ஒரு நாள் போட்டியில் ஆடி 742 ரன்னும் மற்றும் 41 டி-20 போட்டிகளில் விளையாடி 503 ரன்களும் எடுத்து உள்ளார்.

    மேலும், டெஸ்ட் போட்டிகளில் 49 விக்கெட்டும், ஒரு நாள் போட்டிகளில் 30 விக்கெட்டும், டி-20 போட்டிகளில் 12 விக்கெட்டும் வீழ்த்தி இருகிறார். இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடி இருந்தார். மேலும், கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடி இருந்தார். இந்நிலையில், 36 வயதான காலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

    ஒய்வு குறித்து கிராண்ட்ஹோம் கூறுகையில், நான் இன்னும் இளமையாக இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். பயிற்சிகள் கடுமையாகிக் கொண்டு உள்ளன, குறிப்பாக காயங்களுடன் பயிற்சி என்பது மிகவும் கடுமையாக உள்ளது என்று கூறினார். மேலும், கடந்த சில வாரங்களாக நான் எனது குடும்பத்தை பற்றியும், கிரிக்கெட்டுக்கு பின்னர் எனது எதிர் காலத்தை பற்றியும் சிந்தித்து கொண்டு உள்ளேன்.

    2012 -ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். எனது சர்வதேச கிரிக்கெட்டை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக கோப்பை அணியில் நான் இல்லை என்பது மிக சிறிய வதந்தியாகும்.
    • மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதில் தான் தற்போது எனது கவனம் இருக்கிறது.

    துபாய்:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாக ஆடி 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆங்காங்கை இன்று எதிர் கொள்கிறது. இந்த போட்டிக்காக ஜடேஜா நேற்று நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் காயம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை அணியை இழக்க கூடும் என்று செய்திகள் பரவி வருவது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜடேஜா கூறியதாவது:-

    உலக கோப்பை அணியில் நான் இல்லை என்பது மிக சிறிய வதந்தியாகும். ஒரு முறை எனது மரணம் குறித்த வதந்தி பரவியது. இதை பற்றி எல்லாம் நான் அதிகம் யோசிக்கவில்லை. மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதில் தான் தற்போது எனது கவனம் இருக்கிறது.

    இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.

    • நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
    • எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.

    'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3

    நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.

    செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.

    இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    ×