search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup2022"

    • ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 16 நாடுகள் பங்கேற்கின்றன.
    • முதல் சுற்றில் இருந்து 4 நாடுகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    மெல்போர்ன்:

    ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 8 நாடுகள் நேரடியாக 'சூப்பர் 12' சுற்றில் விளையாடுகிறது. முதல் சுற்றில் இருந்து 4 நாடுகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு தகுதி பெறும்.

    வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சிங்கப்பூரில் பிறந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் உலக கோப்பை அணியில் இடம்பெற்று உள்ளார். அவர் 14 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    ஆல் ரவுண்டரான டிம் டேவிட் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 20 ஓவர் தொடரிலும் ஆடுகிறார்.

    இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடக்க வீரர் வார்னருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருமாறு:-

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கும்மின்ஸ் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மிச்சேல் மார்ஷ், ஸ்டீவ் சுமித், கானே ரிச்சர்ட்சன், ஸ்டார்க், ஸ்டோனிஸ், ஆஸ்டன் ஆகர், டிம் டேவிட், ஹாசல்வுட், ஜோஸ் இங்லிஸ், மேக்யூ வாடே, ஆடம் ஜம்பா,  டிம் டேவிட்.

    ×