என் மலர்
விளையாட்டு
- இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 17 ரன்களை எக்ஸ்ட்ராகளாக வழங்கியிருந்தது.
- சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம்
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றும் அணீ சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் என்ற அழுத்தமான நிலையில் இரு அணிகளும் மோதின.
இதில் 184 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை 19.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. வங்கதேச அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது. இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 17 ரன்களை எக்ஸ்ட்ராகளாக வழங்கியிருந்தது.
இதில் 4 நோ-பால்கள் அடங்கும். முக்கியமாக ஆட்டத்தின் 20-வது ஓவரில் இலங்கை அணிக்கு கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மெஹிதி ஹசன் நோ-பால் வீசினார். இதன் வாயிலாக 3 ரன்களை எளிதாக பெற்று வெற்றியை வசப்படுத்திய இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
இது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன் கூறும்போது:-
பேட்டிங்கை பொறுத்தவரையில் நாங்கள் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை எடுத்தோம். மெஹிதி ஹசன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எந்த ஒரு கேப்டனும் நோ-பால் வீசுவதை விரும்ப மாட்டார்கள். நாங்கள் நிறைய நோ-பால் மற்றும் அகலப்பந்துகளை வீசினோம்.
இது சிறந்த பந்துவீச்சு அல்ல. சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம் ஆகும். நாங்கள் அழுத்தத்தில் இருந்ததாக நினைக்கிறேன். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். படிப்படியாக முன்னேற்றம் காண விரும்புகிறோம். இறுதி கட்ட ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல் பட வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அக்ஷர் பட்டேல் களம் இறங்குவார் என தகவல்.
- இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்ப்பு.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இன்றைய போட்டியில் அக்ஷர் பட்டேல் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும் என்று தெரிகிறது.
எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும். துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை.
- பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் வீரர்கள் ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், துபாயில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானுடனான இன்றைய போட்டிக்கு எங்களிடம் சிறந்த பந்து வீச்சுத் தாக்குதலும் உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எல்லோரும் பல விஷயங்களை முயற்சி செய்து சாதிக்க ஆர்வமாக உள்ளனர். மற்றவர்களைப் போல எங்களுக்கு இது ஒரு போட்டி மட்டுமே, நாம் வெற்றி பெற்றால் அது மிகவும் நல்லது, தோற்றால், நாங்கள் மீண்டும் முயற்சி செய்வோம். பாகிஸ்தான் நல்ல பார்மில் உள்ளது. எங்களிடம் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை.
பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவை நன்றாகப் பந்து வீசினார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் கூட ரன்கள் எடுத்துள்ளனர். பாகிஸ்தானிடம் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் பார்ப்பதில்லை. எங்களின் பலம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம்.
ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினார். உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது. எனவே, நாங்கள் அவரை அதிலிருந்து விலக்க முடியாது. அவர் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார். நான் அவரை விலக்க விரும்பவில்லை. விராட் முந்தைய ஆட்டத்தில் நன்றாக விளையாடினார். கடந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
எங்களைப் பொறுத்தவரை, அவர் எத்தனை ரன்கள் எடுத்தார் என்பது முக்கியமல்ல. அணி உண்மையில் வெற்றிக்கு போராடும் போது ஒரு சிறிய பங்களிப்பு கூட முக்கியமானது. உலகக் கோப்பைக்கு நாங்கள் பெரிய அளவிலான வீரர்களை உருவாக்க முயற்சிக்கிறோம். நல்ல நிலையில் வீரர்கள் விளையாடும் போது 11 பேரை தேர்வு செய்வது ஒரு இனிமையான தலைவலி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 175 ரன்களை எடுத்தது.
- இலங்கை வீரர் மெண்டிஸ் 36 ரன் அடித்தார்.
சார்ஜா:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 40 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நிசங்கா 35 ரன்னும், மெண்டிஸ் 36 ரன்னும் அடித்தனர். குணதிலகா 33 ரன் அடித்தார். பானுகா 31 ரன் எடுத்தார். ஹசரங்கா டிசெல்வா 16 ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
- ஆசியக் கோப்பை சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 175 ரன்களை எடுத்துள்ளது.
சார்ஜா:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சார்ஜாவில் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த இப்ராகிம் சட்ரான் 2வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக ஆடிய குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 40 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
- முழங்கால் காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து ஜடேஜா விலகியுள்ளார்.
- டி20 உலக கோப்பையிலும் ஜடேஜா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பையில் விளையாடி வந்தார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அக்சர் படேலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் காயத்தின் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் காயத்தில் இருந்து மீண்டு வர மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.
மேலும், சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு முன்பு போதிய காலம் தேவைப்படும் என்பதால், அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என தெரிய வந்துள்ளது.
ஜடேஜா டி20 உலக கோப்பையில் விளையாட முடியாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
- இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த 28-ம் தேதி மோதி இருந்தன.
- ஒரு வாரத் துக்குள் இரு அணிகளும் மீண்டும் மோத இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கி நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடர் 20 ஓவர் கிரிக்கெட்டாக நடத்தப்பட்டது.
நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியா-பாகிஸ்தான், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் இலங்கை தோல்வி அடைந்தது. இதனால் பதிலடி கொடுக்க இலங்கை முயற்சிக்கும். அதே வேளையில் லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.
சூப்பர் 4 சுற்றில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணி, லீக் சுற்றில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்திய அணி பேட்டிங்கில் விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார்.
கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், அர்ஷ்தீப்சிங், சஹல், ஆவேஷ்கான் ஆகியோர் உள்ளனர். காயம் காரணமாக விலகியுள்ள ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பஹர் ஜமான், குஷ்தீல்ஷா, இப்திகார் அகமது ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ் ரவுப், ஷதப் கான், முகமது நவாஸ், தகானி ஆகியோர் உள்ளனர். லீக் சுற்றில் தோல்வி அடைந்ததால் அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணி கடந்த 28-ம் தேதி மோதி இருந்தன. ஒரு வாரத் துக்குள் இரு அணிகளும் மீண்டும் மோத இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- ஆண்டி முர்ரேவை வீழ்த்திய இத்தாலி வீரர் பெரெட்டினி 4-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி ஆகியோர் மோதினர்.
முதல் 2 செட்களில் தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே மூன்றாவது செட்டை தனதாக்கினார். நான்காவது செட்டை பெரெட்டினி வென்றார்.
இறுதியில், 6-4, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ஆண்ட் முர்ரேவை வென்ற பெரெட்டினி நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 141 ரன்னில் சுருண்டது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 142 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
டவுன்ஸ்வில்லி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடியது. முதலாவது மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 31 ஓவர் முடிவில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி 94 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே அணி சார்பில் ரியான் பர்ல் 5 விக்கெட்டும், பிராட் இவான்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆடியது. மருமானி மற்றும் கேப்டன் சகபாவா ஆகியோர் நிதானமாக ஆடினர். மருமானி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முனியாங்கோ 17 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 39 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் சகபாவா 37 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேஸ்லேவுட் 3 விக்கெட்டு வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மும்பை கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபாக் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி உள்ளனர்.
- ஏற்கனவே இப்பகுதியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர்சிங், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நிலம், வீடு வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி.
உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் கோலி 61-வது இடத்தில் உள்ளார். அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்.
அவரது ஆண்டு வருமானம் ரூ.200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி, ஓட்டல் தொழிலில் குதித்துள்ளார். அவர் மும்பையில் ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்ட்டை விராட் கோலி நடத்த உள்ளார். இந்த பங்களா, மும்பை புறநகர் பகுதியான ஜீஹுவில் உள்ளது.
இது தொடர்பாக கிஷோர்குமாரின் மகன் சுமித்குமாரை சந்தித்த விராட் கோலி, ஓட்டல் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார்.
அந்த பங்களாவில் ரெஸ்டாரண்ட் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அக்கட்டிடம் கோலிக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
பங்களாவில் ஏராளமான தாவரங்கள் உள்ளன. அவைகள் அகற்றப்படமாட்டாது என்றும் உணவகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரெஸ்ட்ராண்ட் அமைக்கப்பட்ட போது, மாநகராட்சி சார்பில் சட்ட விரோத கட்டுமானத்துக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது புதிய உணவகம், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மும்பை கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபாக் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி உள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர்சிங், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நிலம், வீடு வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.
- இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக் ஆகியோர் மோதினர்.
இதில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார்.
ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.
இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த போட்டியின் தோல்வியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா நிறைவு செய்துள்ளார்.
- சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்.
- நாளை இந்தியா மீண்டும் பாகிஸ்தானை சந்திக்கிறது.
15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளதாவது:
ஷார்ஜா ஆடுகளத்தில் பவர் பிளே ஆட்டத்தின்போது 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். அதனால் நாங்கள் முதலில் ஆட்டத்தின் நிலையை மதிப்பீடு செய்து பின்னர் அதற்கேற்ப விளையாடினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போது எப்போதும் ஒரு அழுத்தம் அனைத்து வீரர்களுக்கும் உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த மோதலுக்காக காத்திருக்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி உணர்வுபூர்வமானது. அனைவருக்கும் இது இறுதி போட்டி போல இருக்கும்.
இந்தப் போட்டியில் முடிந்தவரை சாதாரணமாக விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தானின் நம்பிக்கை தற்போது அதிகமாக உள்ளது, எந்த எதிரியையும் சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






