search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார் பெரேட்டினி
    X

    மேட்டிஸ் பெரெட்டினி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார் பெரேட்டினி

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ஆண்டி முர்ரேவை வீழ்த்திய இத்தாலி வீரர் பெரெட்டினி 4-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி ஆகியோர் மோதினர்.

    முதல் 2 செட்களில் தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே மூன்றாவது செட்டை தனதாக்கினார். நான்காவது செட்டை பெரெட்டினி வென்றார்.

    இறுதியில், 6-4, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ஆண்ட் முர்ரேவை வென்ற பெரெட்டினி நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    Next Story
    ×