என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்த போட்டியில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்றன.
    • வெளிநாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.

    புன்னமடா:

    கேரளாவில் நடைபெறும் வருடாந்திர படகுப் போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றது. ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நேற்று 68-வது நேரு கோப்பைக்கான படகுப் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை அந்தமான் நிகோபார் தீவு துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்றன. 150 அடி நீளமுள்ள பாம்பு படகு ஒன்று சுமார் 100 துடுப்பு வீரர்களால் இயக்கப்பட்டது. 


    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பள்ளத்துருத்தி படகு சங்கத்தை சேர்ந்த படகு  1.15 கி.மீ.பந்தய தூரத்தை 4.30 நிமிடங்களில் கடந்தது. இதையடுத்து  மூன்றாவது முறையாக அந்த சங்கத்தை சேர்ந்த துடுப்பு வீரர்கள் நேரு கோப்பையை கைப்பற்றினர்.

    இதையடுத்து அவர்கள் கொண்டாட்டங்கள் ஈடுபட்டனர். வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் இந்த படகு போட்டியை கண்டு ரசித்தனர்.

    • முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார்.

    துபாய்:

    துபாயில் இன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 60 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார். கேப்டன் பாபர் ஆசம் 14 ரன்னும் சமான் 15 ரன்னும் எடுத்தனர். முகமது நவாஸ் 42 ரன் அடித்தார். ஷா 14 ரன்களும், ஆசிப் அலி 16 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் என்ற சாதனையை எட்டினார் ரோகித் சர்மா
    • நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    துபாய்:

    2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    இதேபோல் மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி 60 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய ரவி பிஷ்னோய் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாச, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. ரவி பிஸ்னோய் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 2 விக்கெட் எடுத்தார். நயீம் ஷா, முகமது உசைன், ஹரிஸ் ரவுப், முகமது நவாஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. 

    • ரோகித் சர்மா அதிக டி20 கிரிக்கெட்டில் விளையாடி, அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை படைத்திருந்தார்.
    • நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் இதுவரை 131 டி20 போட்டிகளில் விளையாடி 3531 ரன்கள் எடுத்துள்ளார்.

    2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்கள் சேர்த்தார்.

    35 வயதான ரோகித் சர்மா, ஆடவர் கிரிக்கெட்டில் அதிக டி20 கிரிக்கெட்டில் விளையாடி, அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை படைத்திருந்தார். இன்றைய ஆட்டத்தின்போது, டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் இதுவரை 131 டி20 போட்டிகளில் விளையாடி 3531 ரன்கள் எடுத்துள்ளார். ரோகித் 3520 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். இன்றைய ஆட்டத்தில் ரோகித் 12 ரன்களை கடந்தபோது, பேட்ஸின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார்.

    • இந்திய அணியில் தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தான் அணியில் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைனுக்கு வாய்ப்பு

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப இந்திய அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியிருக்கிறார். தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஜடேஜா, ஆவேஷ் கான், கார்த்திக் ஆகியோர் இடம்பெறவில்லை.

    • ஜடேஜா இடத்தில் இடம் பெறப்போவது ரிஷப் பண்டா, தீபக் ஹூடாவா, அக்‌ஷர் படேலா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
    • வேகப்பந்து வீரர் ஆவேஷ் கான் இடத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி 'லீக்' முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காள தேசம், ஆங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    'சூப்பர் 4' சுற்று நேற்று தொடங்கியது. ஷார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. இதன் மூலம் 'லீக்' சுற்றில் தோற்றதற்கு இலங்கை பதிலடி கொடுத்தது.

    துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் ஏற்கனவே 'லீக்' ஆட்டத்தில் மோதி இருந்தன. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். அதே நேரத்தில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் இரு அணிகளும் இன்று மோதுவது 11-வது போட்டியாகும். இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் இந்தியா 8-ல் பாகிஸ்தான் 2-ல் வெற்றி பெற்றுள்ளன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தினேஷ் கார்த்திக்குக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு இடம் கிடைத்தும் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ளார்.

    ஜடேஜா இடத்தில் இடம் பெறப்போவது ரிஷப் பண்டா, தீபக் ஹூடாவா, அக்‌ஷர் படேலா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால் அக்‌ஷர் படேல் இடம் பெறுவார். அது மாதிரியான நிலை தேவையில்லை என்றால் மட்டுமே ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் இடத்தில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் உறுதியாகவில்லை. வேகப்பந்து வீரர் ஆவேஷ் கான் இடத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்

    ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ்கான் அல்லது அஸ்வின், அர்ஷ்தீப்சிங், யுசுவேந்திர சாஹல்.

    • டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் சுசி பேட்ஸ் உள்ளார்.
    • ரோகித் 3520 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா டி20 கிரிக்கெட்டில் ஒரு பெரிய மைல்கல்லை தொடவுள்ளார்.

    35 வயதான ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதிக போட்டிகளில் விளையாடி, அதிக ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை தவிர அதிக சதங்கள் (4) அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த வீரர்களில் விராட் கோலியுடன் (31) சம நிலையில் உள்ளார்.

    இந்நிலையில் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மற்றொரு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெறுவார்.

    சுசி பேட்ஸ் 

    சுசி பேட்ஸ் 

    டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் சுசி பேட்ஸ் உள்ளார். 34 வயதான அவர் இதுவரை 131 போட்டிகளில் விளையாடி 3531 ரன்கள் எடுத்துள்ளார்.

    ரோகித் 3520 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எனவே அவர் மேலும் 12 ரன்கள் எடுத்தால் பேட்ஸின் சாதனையை முறியடித்து டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை சர்மா படைப்பார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மீண்டும் மோதுகிறது.
    • இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியின் போது தஹானி 2 சிக்சர்கள் விளாசினார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மீண்டும் மோதுகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விலகி உள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார். கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது தஹானி 2 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடைசி 2 போட்டி இதே போன்று பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை விட்டு கொடுக்காமல் நெருக்கடி தருவதில் தஹானி வல்லவர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தஹானி 4 ஓவர் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதே போன்று ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தஹானி 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அலி, இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் சிறப்பாக வீசியுள்ளார். 

    • டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன் என முஷ்பிகுர் ரஹீம் கூறினார்.
    • ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்.

    வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். 35 வயதான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 16 வயதில் வங்காளதேச அணிக்காக 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன இவர் டி-20 போட்டிகளில் 2006-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

    2007-ம் ஆண்டு முதல் டி-20 உலக கோப்பைகளில் வங்காளதேச அணிக்காக முஷ்பிகுர் ரஹீம் ஆடியுள்ளார்.

    இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பைக்கு அந்நாட்டு அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    தனது ஒய்வு குறித்து முஷ்பிகுர் ரஹீம் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன்.

    மேலும், ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் எம்.ஆர்.15 என்ற பெயருடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எனது நாட்டுக்காக விளையாட காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து முஷ்பிகுர் ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் வங்காளதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 6,774 ரன்களும், டி-20 போட்டிகளில் 1,500 ரன்களும் அடித்துள்ளார்.

    • 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 66 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
    • ரியான் பர்ல் 10 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடியது. முதலாவது மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 31 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது.

    லெக் ஸ்பின்னர் ரியான் பர்ல் 10 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

    142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 66 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. சாகப்வா அதிகபட்சமாக 37 ரன்களும், தடிவானாஷே மருமணி 35 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே பெற்ற முதல் ஒருநாள் வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலியாவுடன் பெற்ற வெற்றியை ஜிம்பாப்வே அணி கொண்டாடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியவில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 96 பந்துகளில் 94 ரன்கள் அடித்தார்.

    • நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.
    • 14-வது வரிசையில் உள்ள டியாகோ சுவார்ட்ஸ மேன் ( அர்ஜென்டினா ) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனனயாளரும் , உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 3-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த ரிச்சர்ட் கேஸ்குயிட்டை எதிர் கொண்டார்.

    இதில் நடால் 6-0 , 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.கேஸ்குயிட்டுக்கு எதிரான 18 ஆட்டத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3 , 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜென்சனை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 7-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரி (இங்கிலாந்து), 9-ம் நிலை வீரரான ரூபலேவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    14-வது வரிசையில் உள்ள டியாகோ சுவார்ட்ஸ மேன் ( அர்ஜென்டினா ) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லாரன் டோவிசை எதிர்கொண்டார். இதில் இகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-2 , 6-7 (6-8), 6-0 என்ற நேர் செட் கணக்கில் யூவானை (சீனா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளான ஷபலென்கா, அசரென்கா (பெலாரஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    9-வது வரிசையில் உள்ள கார்பன் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 3-6, 6-7 (10-12) என்ற கணக்கில் பெட்ரோ கிவிட்டோவிடம் (செக்குடியரசு) தோற்றார்.

    இதேபோல் 13-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கும் (கனடா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
    • தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

    புதுடெல்லி:

    குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள இகேஏ அரீனா டிரான்ஸ் ஸ்டேடியாவில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு ஞாயிறு மாலை நடைபெற உள்ளது. விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம் என்ற மையப்பொருளில், ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை, 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

    இந்த முன்னோட்ட நிகழ்வில், விளையாட்டுக்கள் கீதம் மற்றும் சின்னம் வெளியிடுதல், இணையதளம் மற்றும் செல்பேசி செயலி வெளியிடுதல் ஆகியவையும் இருக்கும். 9,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் இந்த வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    "தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், இதை எப்போதும் இல்லாத வகையில் சிறந்த விளையாட்டுகளாக மாற்ற எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை" என்று பூபேந்திர படேல் கூறினார்.

    பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உட்பட 36 போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 7,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்லகம்பம், யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டுகளும் முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும்.

    ×