என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணி
3வது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி - ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 141 ரன்னில் சுருண்டது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 142 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
டவுன்ஸ்வில்லி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடியது. முதலாவது மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 31 ஓவர் முடிவில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி 94 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே அணி சார்பில் ரியான் பர்ல் 5 விக்கெட்டும், பிராட் இவான்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆடியது. மருமானி மற்றும் கேப்டன் சகபாவா ஆகியோர் நிதானமாக ஆடினர். மருமானி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முனியாங்கோ 17 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 39 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் சகபாவா 37 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேஸ்லேவுட் 3 விக்கெட்டு வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.






