search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indiavpak"

    • நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை.
    • பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் வீரர்கள் ரன்கள் எடுத்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், துபாயில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    பாகிஸ்தானுடனான இன்றைய போட்டிக்கு எங்களிடம் சிறந்த பந்து வீச்சுத் தாக்குதலும் உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எல்லோரும் பல விஷயங்களை முயற்சி செய்து சாதிக்க ஆர்வமாக உள்ளனர். மற்றவர்களைப் போல எங்களுக்கு இது ஒரு போட்டி மட்டுமே, நாம் வெற்றி பெற்றால் அது மிகவும் நல்லது, தோற்றால், நாங்கள் மீண்டும் முயற்சி செய்வோம். பாகிஸ்தான் நல்ல பார்மில் உள்ளது. எங்களிடம் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை.

    பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவை நன்றாகப் பந்து வீசினார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் கூட ரன்கள் எடுத்துள்ளனர். பாகிஸ்தானிடம் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் பார்ப்பதில்லை. எங்களின் பலம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம்.

    ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினார். உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது. எனவே, நாங்கள் அவரை அதிலிருந்து விலக்க முடியாது. அவர் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார். நான் அவரை விலக்க விரும்பவில்லை. விராட் முந்தைய ஆட்டத்தில் நன்றாக விளையாடினார். கடந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

    எங்களைப் பொறுத்தவரை, அவர் எத்தனை ரன்கள் எடுத்தார் என்பது முக்கியமல்ல. அணி உண்மையில் வெற்றிக்கு போராடும் போது ஒரு சிறிய பங்களிப்பு கூட முக்கியமானது. உலகக் கோப்பைக்கு நாங்கள் பெரிய அளவிலான வீரர்களை உருவாக்க முயற்சிக்கிறோம். நல்ல நிலையில் வீரர்கள் விளையாடும் போது 11 பேரை தேர்வு செய்வது ஒரு இனிமையான தலைவலி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்.
    • நாளை இந்தியா மீண்டும் பாகிஸ்தானை சந்திக்கிறது.

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளதாவது:

    ஷார்ஜா ஆடுகளத்தில் பவர் பிளே ஆட்டத்தின்போது 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். அதனால் நாங்கள் முதலில் ஆட்டத்தின் நிலையை மதிப்பீடு செய்து பின்னர் அதற்கேற்ப விளையாடினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போது எப்போதும் ஒரு அழுத்தம் அனைத்து வீரர்களுக்கும் உள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த மோதலுக்காக காத்திருக்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி உணர்வுபூர்வமானது. அனைவருக்கும் இது இறுதி போட்டி போல இருக்கும்.

    இந்தப் போட்டியில் முடிந்தவரை சாதாரணமாக விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தானின் நம்பிக்கை தற்போது அதிகமாக உள்ளது, எந்த எதிரியையும் சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×