search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் தயார்- முகமது ரிஸ்வான்
    X

     முகமது ரிஸ்வான் 

    சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் தயார்- முகமது ரிஸ்வான்

    • சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்.
    • நாளை இந்தியா மீண்டும் பாகிஸ்தானை சந்திக்கிறது.

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளதாவது:

    ஷார்ஜா ஆடுகளத்தில் பவர் பிளே ஆட்டத்தின்போது 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். அதனால் நாங்கள் முதலில் ஆட்டத்தின் நிலையை மதிப்பீடு செய்து பின்னர் அதற்கேற்ப விளையாடினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போது எப்போதும் ஒரு அழுத்தம் அனைத்து வீரர்களுக்கும் உள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த மோதலுக்காக காத்திருக்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி உணர்வுபூர்வமானது. அனைவருக்கும் இது இறுதி போட்டி போல இருக்கும்.

    இந்தப் போட்டியில் முடிந்தவரை சாதாரணமாக விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தானின் நம்பிக்கை தற்போது அதிகமாக உள்ளது, எந்த எதிரியையும் சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×