என் மலர்
விளையாட்டு
- இந்த பிரச்சினைகளுக்கு முதல் காரணம் சமூகவலைதளம் தான்.
- ஊடகங்கள் ஒருவரை தொடர்ந்து கொண்டாடும் போது காலப்போக்கில் அது பிராண்டாக மாறிவிடும்.
புதுடெல்லி:
ஒருவரை மட்டும் ஹீரோவாக கொண்டாடும் கலாச்சாரத்தில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது:-
விராட் கோலி சமீபத்தில் சதம் அடித்தபோது அவரை நாடே கொண்டாடியது. அதே போட்டியில் சிறிய நகரமான மீரட்டில் இருந்து வந்த புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை எடுத்தார். ஆனால், கமெண்டரியில் என்னைத் தவிர யாரும் அவரைப் பற்றி பேசவில்லை. கோலி சதத்தை மட்டும் தான் நாடே கொண்டாடியது. ஹீரோவாக ஒருவரை கொண்டாடுவதில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும்.
ஊடகங்கள் ஒருவரை தொடர்ந்து கொண்டாடும் போது காலப்போக்கில் அது பிராண்டாக மாறிவிடும். அதுதான் 1983ல் நடந்தது. 2007 மற்றும் 2011லும் நடந்தது" எனக் கூறியுள்ளார். இந்த பிரச்சினைகளுக்கு முதல் காரணம் சமூகவலைதளம் தான். அதிகப்படியான பாலோவர்கள் இருந்தால் அதுவே ஒரு பிராண்டை உருவாக்குகிறது.இரண்டாவதாக, ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களால்.
ஒருவரைப் பற்றி தினம் தினம் பேசிக்கொண்டே இருந்தால், அது நாளடைவில் ஒரு பிராண்டாக மாறிவிடும் இது 1983 இல் தொடங்கியது. இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றபோது, எல்லாம் கபில்தேவ் பற்றியது. 2007 மற்றும் 2011ல் உலக்கோப்பை வென்றபோது தோனி பற்றியது. இதுபோல் உருவாக்கியது யார்? வீரர்கள் யாரும் செய்யவில்லை. பிசிசிஐயும் செய்யவில்லை. செய்தி சேனல்களும் ஒளிபரப்பாளர்களும் இந்திய கிரிக்கெட் பற்றி எப்போதாவது பேசியதுண்டா? என்று அவர் கூறினார்
- இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் இன்றிரவு நடைபெறுகிறது.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் தங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.
மீண்டும் பார்முக்கு திரும்பிய விராட் கோலியின் பேட்டிங் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் நல்ல தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையை சரிசெய்வதில் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சை வலுப்படுத்தும். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்தினால் அது அணிக்கு உற்சாகம் தரும்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணி வலுவாகவே தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டுவார்கள். ஆல் ரவுண்டர் டிம் டேவிட் அறிமுக வீரராக விளையாட இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. பந்துவீச்சில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, சீன் அபோட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில் இதுவரை ஐந்து டி20 ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை சூப்பர்10 சுற்றில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஷ் இங்லிஷ், ஸ்டீவன் சுமித், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
- இந்த டி20 தொடரில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் அடங்கும்.
இந்நிலையில், டி20 போட்டிகளில் இன்னும் 2 சிக்சர்கள் அடித்தால் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா முன்னேறுவார். தற்போது 171 சிக்சர்களுடன் ரோகித் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நம்முடைய மல்யுத்த போட்டியாளர்கள் நம்மை பெருமையடைய செய்துள்ளனர் என பிரதமர் மோடி வாழ்த்து
- மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் சிங் தாக்கூர், பஜ்ரங் பூனியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
புதுடெல்லி:
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெல்கிரேடு நகரில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனையான முறையே பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று உள்ளனர்.
அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நம்முடைய மல்யுத்த போட்டியாளர்கள் நம்மை பெருமையடைய செய்துள்ளனர். வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் பெல்கிரேடு நகரில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். வினேஷ், இந்த தளத்தில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும், பஜ்ரங் 4-வது பதக்கமும் வென்றுள்ளது சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார்.
இதேபோன்று, மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் சிங் தாக்கூர், பஜ்ரங் பூனியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் வெண்கலம் வென்றுள்ளார். 2018-ம் ஆண்டில் வெள்ளி, 2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வெண்கல பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். இதேபோன்று, மகளிருக்கான 53 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் வினேஷ் வெண்கலம் வென்றுள்ளார். இது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வென்ற 2-வது பதக்கம் ஆகும்.
- பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.
- பெங்களூரு அணி முதல் முறையாக துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
கொல்கத்தா:
131-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பெங்களூரு அணி சார்பில் சிவசக்தி (10வது நிமிடம்), பிரேசில் வீரர் ஆலன் கோஸ்டா (61வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை அணிக்காக அபுயா (30-வது நிமிடம்) மட்டுமே ஒரு கோல் அடிக்க சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.
- சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்கிரேடு:
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற புள்ளி கணக்கில் வென்ற புனியா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் அவர் வெல்லும் 4-வது பதக்கம் இதுவாகும்.
2013, 2018, 2019 மற்றும் 2022 என உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் புனியா பதக்கம் வென்றுள்ளார். இதில் 2018-ல் அவர் வெள்ளி வென்றிருந்தார். மற்ற அனைத்தும் வெண்கலப் பதக்கமாகும்.
சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா வெற்றி பெற்றார்.
- வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
சென்னை:
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம் மற்றும் ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டுக்கு கேடயம் மற்றும் ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
- இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி 20 ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
- மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி புது சீருடையுடன் களமிறங்குகிறது.
மும்பை:
8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இத்தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பி.சி.சி.ஐ. இன்று அறிமுகம் செய்துள்ளது. மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது இந்திய அணி இந்த புதிய சீருடையுடன் களம் இறங்குவார்கள்.
ஸ்கை புளு நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த புதிய ஜெர்சியை இந்திய வீரர் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா ஆகியோர் அணிந்திருக்கும் புகைப்படத்தை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹோவ்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதமடித்து 50 ரன்னுடன் களத்தில் இருந்தார். டேனி வியாட் 43 ரன் அடித்தார்.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுடன் விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா ஜோடி சேர்ந்தார். பாட்டியா அரை சதம் அடித்த நிலையில் அவுட்டானார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.
அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி 44.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி விருது பெற்றார்.
- இறுதிப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
- அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியை ரசித்து பார்த்தனர்.
நுங்கம்பாக்கம்:
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா புருவிர்தோவாவும், போலந்து வீராங்கனை மக்டா லினெட்டும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 17 வயதான அவர் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.

இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டார் கண்டு ரசித்தனர்.
- அதிகபட்சமாக டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதம் அடித்து களத்தில் இருந்தார்.
- இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை சாய்த்தார்.
ஹோவ்:
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.
அந்த அணி வீராங்கனை அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதம் அடித்து களத்தில் இருந்தார்.டேனி வியாட் 43 ரன் அடித்தார். சோபியா டங்க்லே 29 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்களை சாய்த்தார். இதைத் தொடர்ந்து 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.
- இறுதிப் போட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, லுசா ஸ்டெபானி இணை வெற்றி.
- அன்னா லின்கோவா- நடிலா ஜலாமிட்ஸ் இணை தோல்வி.
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி- பிரேசிலை சேர்ந்த லுசா ஸ்டெபானி இணை, ரஷியாவின் அன்னா லின்கோவா- ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் இணையை எதிர் கொண்டது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி இணை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அன்னா லின்கோவா -நடிலா ஜலாமிட்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.






