என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை.
    • ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால்ர, டி20 உலக கோப்பை அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், டி 20 உலக கோப்பை அணியில் ஜடேஜா இல்லாதது குறித்து ஐ.சி.சி. ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறியதாவது:

    ஜடேஜா 5-வது இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த ஆல் ரவுண்டர்கள். அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இருந்தபோது அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருந்தது.

    ஜடேஜா காயத்தால் விலகியபின் அணியில் இடது கை ஆட்டக்காரர் வேண்டும் என்பதாலே தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்டை அணி 4வது அல்லது 5வது வரிசையில் ஆட தேர்வு செய்தது. உலக கோப்பையில் இந்திய அணி 4 அல்லது 5-வது வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என தேர்வு செய்ய வேண்டும்.

    ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு, அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருந்தார். அவர் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு என தெரிவித்தார்.

    • இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா டி20 தொடரில் விளையாடுகிறது.
    • முதல் போட்டி செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் முதல் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    மேலும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
    • நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் இன்று இரவு 7 மணிக்கு நடந்தன.

    முதல் அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்கா, செக் குடியரசைச் சேர்ந்த லிண்டாவுடன் மோதினார். இதில்

    முதல் செட்டை இழந்த லிண்டா, அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றினார்.

    இறுதியில், லிண்டா 5-7, 6-2 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இரண்டாவது அரையிறுதியில் போலந்தின் மக்டா லினெட், இங்கிலாந்தின் கேத்தே சுவானுடன் மோதினார். முதல் செட்டில் 3 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக சுவான் விலகினார். இதனால் லினெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் லிண்டாவும், மக்டா லினெட்டும் மோத உள்ளனர்.

    இறுதிப் போட்டியை நேரில் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையும் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஜ்ரங் புனியா, காலிறுதி ஆட்டத்தில அமெரிக்க வீரர் யான்னியிடம் தோல்வியடைந்தார்
    • 61 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பங்கஜ் முதல் சுற்றிலேயே வெளியேறினார்

    பெல்கிரேடு:

    செர்பியாவின் பெல்கிரேடு நகரில் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா கலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, காலிறுதி ஆட்டத்தில அமெரிக்க வீரர் யான்னி டயகோமிஹாலிசிடம் தோல்வியடைந்தார். எனினும் யான்னி

    டயகோமிஹாலிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், பஜ்ரங் புனியாவுக்கு ரெப்பேஜ் சுற்றில் விளையாடி வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    இந்திய இளம் வீரரான சாகர் ஜக்லான், 74 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான தனது முயற்சியைத் தொடர்ந்தார். அவர் மங்கோலியாவின் சுல்ட்கு ஓலோன்பயாரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்தார். இனி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஈரான் வீரர் யோனசை சந்திக்க உள்ளார்.

    97 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் விக்கி தகுதிச் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் சாமுவேல் ஷெரரிடம் 2-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல் பங்கஜ் (61 கிலோ) பதக்கப் போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் முதல் சுற்றில் கஜகஸ்தானின் அசில் அய்டகினிடம் தோல்வியடைந்தார்.

    • பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை என சோயிப் அக்தர் விமர்சனம்
    • பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கராச்சி:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்து உள்ளார். அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை அவர் கடுமையாக சாடியுள்ளார். சோயிப் அக்தர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை. இந்த மிடில் ஆர்டர் மூலம் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்ற அஞ்சுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம். இதைவிட சிறந்த பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து இருக்க வேண்டும். இந்த பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் முகமது அமீரும் உலக கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும் போது, 'தேர்வு குழு தலைவரின் மிகவும் கீழ்த்தரமான தேர்வு' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த அணி சமீபத்தில் நடந்த ஆசிய இறுதி போட்டியில் இலங்கையிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

    • போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்தோனேசியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான, முதல் டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை, தென் ஆப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் தொடரில், 41 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்தோனேசியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    போட்டியில் பங்கேற்கும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்று, சூப்பர் 6, அரையிறுதி என மூன்று சுற்றுகளாக உலகக்கோப்பை நடைபெறுகிறது. போட்செஃப்ஸ்ட்ரூம், பெனோனி ஆகிய இரு மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளன.

    குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் யூ.ஏ.இ. ஆகிய அணிகளுடன் குரூப் சுற்றில் மோதுகின்றன.

    • தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.
    • 23 வீரர்களும், 30 வீராங்கனைகளும் ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    17-வது தேசிய இளையோர் தடகள போட்டி இன்று முதல் 19-ந்தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். 23 வீரர்களும், 30 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 53 பேர் ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    தமிழக அணி வருமாறு:-

    ஆண்கள் அணி: கார்த்திக் ராஜா, மனோஜ்குமார் (100 மீட்டர்), கென்ரிச் கிஷோர் (200 மீட்டர்), மித்ரேஷ், சகாய அன்டோ, கவரி சங்கர் (400 மீட்டர்), வால்டர் கண்டுலனா (3 ஆயிரம் மீட்டர்), அரிகரன், திவ்ய தர்ஷன ஜெயச்சந்திரன் (110 மீட்டர் தடை தாண்டுதல்), விஸ்னு ஸ்ரீ, ஜெரோம், சஞ்சய் நிஷன் (400 மீட்டர் தடை தாண்டுதல்), பால ஜீவா, அஜய் (நீளம் தாண்டுதல்), கேஸ்ட்ரோ ராஜ், விஷ்ணுவர்தன், முகேஷ் (உயரம் தாண்டுதல்), கவின்ராஜா (போல்வால்ட்), கனிஷ்கர் (ஈட்டி எறிதல்), கீர்த்தி வாசன், எஸ்.பரணி தரன் ( சங்கிலி குண்டு எறிதல்), டி.பரணிதரன் (வட்டு எறிதல்), அரவிந்த் (டெக்கத்லான்)

    பெண்கள் அணி: ருதிகா (100 மீட்டர், 200 மீட்டர்) ஸ்ரீவித்யா, பிரிதிகா (100 மீட்டர்), மாரி செல்வி (200 மீட்டர், 400 மீட்டர்), கனிஸ்டா தீனா (400 மீட்டர்), கீர்த்தி (800 மீட்டர்), அகஞ்சா கெர்கெட்டா ( 1,500 மீட்டர்), சைனி கிளாசியா, பிரதிக்‌ஷா யமுனா (100 மீட்டர் தடை தாண்டுதல்), ஹர்ஷிதா, ஜெய விந்தியா, அபர்ணா (400 மீட்டர் தடை தாண்டுதல்)

    நமீரா பாத்திமா, லின்சி, சுபாஸ்ரீ (5 ஆயிரம் மீட்டர் நடை பந்தயம்), பவீனா, திவ்யஸ்ரீ, லக்சனயா (நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப்), தரண்யா (உயரம் தாண்டுதல்), அனுஷ் ராஜ குமாரி (போல்வால்ட்), ரூபஸ்ரீ, ரின்ஷி ரோஸ், மதுமிதா (குண்டு எறிதல்), காவ்யா (சங்கிலி குண்டு எறிதல்), சுவாதி, ஷெரின் ஜோன்னா (வட்டு எறிதல்), மகரஜோதி (ஈட்டி எறிதல்), கனியிஷ்கா, ரதிஷா, வாலன்சியா, டோனி (ஹெப்டத்லான்)

    • கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான்- ஹிபினோ மோதினார்கள்.
    • இன்று இரவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.

    ஒரு கால் இறுதி ஆட்டத்தில் இந்த போட்டியின் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து) ஏழாம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா) மோதினார்கள்.

    முதல் செட்டில் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டை பிரேக்கருக்கு சென்றது. இதில் லினெட் 12-10 என்ற கணக்கில் வென்றார்.

    2-வது செட்டிலும் அவரது ஆதிக்கமே இருந்தது. இந்த செட்டிலும் மக்டா லினெட் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 7-6 (12-10), 6-3

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான் (இங்கிலாந்து)-ஹிபினோ (ஜப்பான்) மோதினார்கள்.

    கேத்தே சுவான் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதற்கு பதிலடியாக ஹிபினோ 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3-வது செட்டை கேத்தே சுவான் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 3-6, 6-3


    போட்டியின் முடிவில் கைகுலுக்கிக் கொண்ட லிண்டா (இடது)-வார்வரா கிராசெவா.

    முன்னதாக நடந்த கால் இறுதி ஆட்டங்களில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா) 1-6, 6-4, 6-2 என்ற கணக்கில் யூஜின் பவுச்சர்ட்னடயும் (கனடா), லிண்டா புருவிர்தோவா (செக் குடியரசு) 6-4, 6-3 என்ற கணக்கில் வார்வரா கிராசேவாவையும் (ரஷியா)வீழ்த்தினார்கள்.

    இன்று இரவு 7 மணிக்கு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு அரை இறுதியில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா)-லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து நடை பெறும் 2-வது அரை இறுதியில் மக்டா லினெட் (போலந்து)-கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.

    • 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆசிய கோப்பையில் விளையாடிய இலங்கை அணி வீரர்களில் பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.

    கொழும்பு:

    7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், டி 20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளுடன் மோத வேண்டும்.

    டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்:

    தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்க குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சாமிக்க கருணரத்னா, தில்ஷான் மதுசாங்க, பிரமோத் மதுஷன், துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா.

    காத்திருப்பு வீரர்கள்: அஷேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ 

    • துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது.
    • இதில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் மோதின.

    கோவை:

    துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மண்டல அணி பேட்டிங்கில் தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந் வெங்கடேஷ் அய்யர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது காஜா என்ற வீரர் பந்தை பீல்டிங் செய்யும்போது எறிந்தார். அது, வெங்கடேஷ் அய்யரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் துடித்தார்.

    மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டதால் அங்கிருந்த ரசிகர்கள் பதறினர். எனினும் வெங்கடேஷ் அய்யர், அவராகவே எழுந்து நடந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, உடனடியாக வெங்கடேஷ் அய்யர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து பேட்டிங்கை தொடங்கினார். அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    • டாஸ் ஜெயித்து இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று பிரிஸ்டலில் நடந்தது. டாஸ் ஜெயித்து இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வரிசையில் முதல் 5 வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் அவுட் ஆனார்கள்.

    அதன் பின்னர் தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் தாக்கு பிடித்து விளையாடினார்கள். இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்தது. ரிச்சா கோஷ் 33 ரன்னும், தீப்தி சர்மா 24 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீராங்கனைகளான ஷோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டும், சாரா கிளென் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சோபியா டங்லே 49 ரன்னும், ஆலிஸ் கேப்சி 38 ரன்னும், டேனி வியாத் 22 ரன்னும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. அடுத்20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.து இரு அணிகளும் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. முதல் போட்டி வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

    • இரண்டாவது சுற்று ஆட்டத்தில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர்.
    • காலிறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர்.

    சென்னை:

    சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டிஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர். இதில் கிராச்சேவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா), மெக்டா லினெட் (போலந்து) கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.

    இன்று ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புசார்ட் (கனடா)-போடோரோஸ்கா (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். 6.15 மணிக்கு நடக்கும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கிராச்சேவா (ரஷியா)-லின்டா ப்ருஹ்விர்டோவா (செக் குடியரசு) மோதுகிறார்கள்.

    இரவு. 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மெக்டாலினெட் (போலந்து)-மரினோ (கனடா), இரவு 8.45 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்வான் (இங்கிலாந்து)-நாவ் ஹிபினோ (ஜப்பான்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    அனுபவம் வாய்ந்த வீராங்கனையான புசார்ட் அரை இறுதிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரட்டையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி போட்டியில் புசார்ட் (கனடா)-விக்மேயர் (பெல்ஜியம்) ஜோடி, அன்னா பிஸிங்கோவா (ரஷியா)-டிசலமிட்ஜ் (ஜார்ஜியா) ஜோடி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    நேற்று நடந்த கால் இறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர். இதன் மூலம் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் வெளியேறி விட்டனர்.

    ×