என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
- முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
மொகாலி:
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் அடங்கும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் ஒரு சிக்சர் அடங்கும்.
இதன்மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 172 சிக்சர்கள் அடித்து கப்தில் சாதனையை சமன் செய்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தனா 111 ரன்கள் எடுத்தார்.
- டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார்.
துபாய்:
பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தனா 111 ரன்கள் எடுத்ததால் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 6-ம் இடத்தில் உள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் மந்தனா 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டி20 தரவரிசையில் பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி வர்மா 7-வது இடத்தில் உள்ளார். இதேபோல, ஆல்-ரவுண்டருக்கான பட்டியலில் இந்திய அணியின் தீப்தி வர்மா 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 158 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கராச்சி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெற்ற்து. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் எடுத்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் அதிரடியாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹாரி புரூக் 42 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் குவித்தார்.
- பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 30 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.
மொகாலி:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிறகு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், கேமரான் கிரீன் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 61 ரன்கள் விளாசினார். ஸ்மித் 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஜோஸ் இங்லிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பரபரப்பான கடைசி கட்டத்தில், டிம் டேவிட், மேத்யூ வேட் இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர். டிம் டேவிட் 18 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் விளாச, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 23ம் தேதி நடக்கிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 68 ரன்கள் விளாசினார்.
கராச்சி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடி முகமது ரிஸ்வான் -பாபர் ஆசம் ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் சேர்த்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள், ஹைதர் அலி 11 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து தரப்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார்.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் குவித்தனர். அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். குறிப்பாக கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளிலும் சிக்சர் விளாசி அசத்தினார்.
இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார். ஹேசில்வுட் 2 விக்கெட், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெகிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இரு அணி வீரர்கள் விவரம்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், டிம் டேவிட், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் சம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
- பழைய விதிப்படி பந்து இரண்டு, மூன்று பிட்ச்களாகி பேட்டிற்கு வந்தால் அதனை நடுவர் டெட் பால் என்று அறிவிப்பார்.
- வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த மாற்றம் வர உள்ளது.
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு விதிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் போட்டி விறுவிறுப்பாக மாறும் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. கங்குலி தலைமையிலான எம்.சி.சி. குழு இந்த மாற்றத்தை செய்துள்ளது.
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த மாற்றம் வர உள்ளது. கொரோனா காலக் கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவ கூடாது. இந்த தடை 2 ஆண்டுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த தடை எப்போதும் தொடரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதன் மூலம் பந்து வீச்சாளர்கள், ரிவர்ஸ் ஸ்விங் செய்வது மிகவும் கடினமாக மாறி விடும். இதே போன்று போட்டியை விறுவிறுப்பாக வைத்து கொள்ள புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி, விக்கெட் விழுந்ததும் அடுத்த பேட்ஸ்மேன்கள் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வர வேண்டும். இதே போன்று டி20 போட்டிகளில் 90 விநாடிக்குள் அடுத்த பேட்ஸ்மேன் களத்துக்கு வர வேண்டும்.
பேட்ஸ்மேன் கேட்ச்சாகி அவுட்டாகும் போது புது பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். பழைய முறைப்படி, புது பேட்ஸ்மேன் கேட்சாகி அவுட்டாகும் தருணத்தில், எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் அவரைதாண்டி ரன் ஓடி இருந்தால், அவரே அடுத்த பந்தை பிடிக்கும் விதி இருந்தது. தற்போது அது ஒழிக்கப்பட்டுள்ளது.
பழைய விதிப்படி பந்து இரண்டு, மூன்று பிட்ச்களாகி பேட்டிற்கு வந்தால் அதனை நடுவர் டெட் பால் என்று அறிவிப்பார். தற்போது அது நோ பால் என்று அறிவிக்கப்படும். மேலும், பந்து வீசும் முன் பேட்ஸ்மேன் கோட்டை விட்டு நகர்ந்தால், அப்போது எவ்வித எச்சரிக்கையும் இன்றி ரன் அவுட் செய்ய புதிய விதி அனுமதிக்கப்படுகிறது.
பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் தருணத்தில் ஃபில்டர்கள், வேறு இடத்திற்கு மாற முயற்சித்தால், அது டேட் பால் என அறிவிக்கப்பட்டு, 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்படும். இதே போன்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால், பவுண்டரி எல்லையில் ஒரு ஃபில்டர்களை குறைக்கும் விதி இனி அடுத்த ஆண்டு முதல் ஒருநாள் போட்டியிலும் பின்பற்றப்படும்.
- உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளனர்.
- ராகுலுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவதை பார்க்க விரும்புவதாக வாசிம் ஜாபர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடரில் தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது. முன்னதாக உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப் பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் தன்னுடைய சிறந்த 11 பேர் இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கை முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள அவர் ரிஷப் பண்ட்டை கழற்றி விட்டுள்ளார்.

முன்னதாக ராகுலுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்திருந்த வாசிம் ஜாபர் இந்த அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
அவருடைய 11 பேர் கொண்ட இந்திய அணி:-
கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சஹால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
- இந்திய வீரர்களில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
- அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 71-வது சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ள விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அசத்தலாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி, ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை தகர்க்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
இந்திய வீரர்களில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் 24,208 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தற்போது விராட் கோலி 24,002 ரன்கள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் அவர் 207 ரன்களை இந்த தொடரில் குவிக்கும் பட்சத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பார்.
மேலும் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடிக்க அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது.
அதோடு அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங்கை சமன் செய்திருக்கும் கோலி மெல்ல மெல்ல சச்சினின் சாதனையை நெருங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.
- சென்னை ஓபன் இறுதி ஆட்டத்தில் லின்டாவிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் 16 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார்.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் 20 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பெயின் 'இளம் புயல்' கார்லஸ் அல்காரஸ் முதலிடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 2-வது இடத்திலும், ஸ்பெயினின் ரபெல் நடால் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இகா ஸ்வியாடெக் (போலந்து) முதலிடத்திலும், ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 2-வது இடத்திலும், அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா புருவிர்தோவா கிடுகிடுவென 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.
அவரது சிறந்த தரநிலை இதுவாகும். இறுதி ஆட்டத்தில் அவரிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் (போலந்து) 16 இடங்கள் ஏற்றம் கண்டு 51-வது இடத்தை பெற்றுள்ளார்.
- டி20 உலக்கோப்பைக்கான வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
- பிரேஸ்வெல், ஆலன் ஆகியோர் முதல்முறையாக உலக கோப்பையில் ஆடுகிறார்கள்.
வெலிங்டன்:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகள் உலகக்கோப்பைக்கான வீரர்களை ஏற்கனவே அறிவித்து இருந்தன.
'சூப்பர்12' சுற்றில் நேரடியாக விளையாடும் முன்னணி அணியான நியூசிலாந்து நேற்று வரை வீரர்களை அறிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
வேகப்பந்து வீரர் ஆடம் மிலின், பின்ஆலன், மிச்சேல் பிரேஸ்வெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரேஸ்வெல், ஆலன் ஆகியோர் முதல்முறையாக உலகக்கோப்பையில் ஆடுகிறார்கள். இந்த அணியில் 35 வய்தான மார்ட்டின் கப்திலும் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் அதிக டி20 உலகக்கோப்பையில் விளையாடும் நியூசிலாந்து வீரர் என்ற சாதனை கப்தில் படைத்துள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டியில் கப்தில் விளையாட உள்ளார். மெக்கல்லம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் 6 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-
கானே வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், பின் ஆலன், கான்வாய், கிளன் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், டேரியல் மிச்சேல், ஜிம்மி நீசம், பிரேஸ்வெல், சான்ட்னெர், சோதி, டிரென்ட் போல்ட் பெர்குசன், ஆடம் மிலின்.






